சேமிப்பு என்பது எதிர்காலத்துக்கு அவசியமான ஒன்று. பெண்களைப் பொறுத்தவரை, சிறுவாட்டு சேமிப்பில் தொடங்கி தங்க நகைகளாக வாங்கி வைப்பது வரை எத்தனையோ எளிதான வழிமுறைகளைக் கடைப்பிடித்து வருவீர்கள். சேமிப்பு, முதலீடாக இருந்தால் மட்டுமே உங்களின் திட்டமிடல் 100 சதவிகிதம் உங்களுக்குக் கைகொடுக்கும். உங்களின் சேமிப்பு எந்த வகையில் இருக்க வேண்டும், இந்த விஷயத்தில் பெண்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய நிதிப்பழக்கங்கள் என்னென்ன என்பது தொடர்பாக வரும் சனிக்கிழமை வெளியாகவிருக்கும் நாணயம் விகடனில் விரிவான கட்டுரை வெளிவர இருக்கிறது. அதில் உங்களுடைய கருத்தும் இடம்பெற, உங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெற கீழே உள்ள கேள்விகளுக்கு விடையளியுங்கள்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்து கொண்டார்.
மத்திய அரசு சொல்வதை எல்லாம் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. மத்திய அரசை எதிர்க்கத் துணிச்சல் இல்லாத அரசு தமிழகத்தில் நடக்கிறது. விவசாய சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகளின் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய தமிழகம் வந்த அமித் ஷாவிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்த முடியுமா?
பொதுக்கூட்டத்தின் ஒரு பகுதி
தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டிருக்கிறது. மத்திய பா.ஜ.க அரசு எதைச் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் அரசாக தமிழக அரசு இருக்கிறது. கொரோனா காலத்தில் நாடு முழுவதும் 12 கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசு 3 பெரும் பணக்காரர்களுக்கு பல்வேறு சலுகைகளைக் கொடுத்ததால் அவர்கள் மட்டும் 40 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருக்கிறார்கள்.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி இருப்பதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்கிறது. அதனால் சாதாரண மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவரும் சூழலில், லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது.
செய்தியாளர்களிடம் பேசும் பிருந்தா காரத்
மத்தியில் ஆளும் பா.ஜ.க-வும் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க-வும் இரட்டை என்ஜின் மூலம் இயக்கப்படும் வாகனத்தைப் போலச் செயல்படுகின்றன. அவர்கள் ஒரே பக்கமாக இயங்குவதால் சரியான பாதையில் செல்லவில்லை. இரு கட்சிகளின் ஆட்சியாலும் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை” என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிருந்தா காரத், ``மக்களின் உரிமைகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பறித்து விட்டது. மக்களின் வாழ்வாதாரத்துக்கு மத்திய அரசு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. வேலை வாய்ப்பு முழுமையாக மறுக்கப்படுகிறது.
மாவட்டச் செய்லாளர் கே.ஜி.பாஸ்கரன்
மக்களை பிளவுபடுத்தும் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகளைப் பொதுமக்கள் அனைவரும் அடையாளம் காணவேண்டும். அந்த அரசுகளை அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு அகற்ற வேண்டும். மக்கள் இயக்கம் வலுவடைந்து பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணியைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்” என்றார்.
காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கன்னியாகுமரி பகுதியில் ராகுல்காந்தி பேசுகையில், "உங்கள் சிறப்பான வரவேற்புக்கு நன்றி. இன்று நம் தலைவர் வசந்தகுமாரை பற்றி நினைவு கூர்கிறோம். எதற்காக என்றால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும், மற்ற அரசு அவரை மிரட்டினாலும் அஞ்சாமல் அவர் காங்கிரஸ் பின்னால் உறுதியாக நின்றதால் அவரை நினைவுகூர்கிறோம். அவர் எப்போதுமே பின்தங்கிய மக்களுக்காக, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள விளிம்புநிலை மக்களுக்கான உழைத்துக்கொண்டிருந்தார்.
ஏழை குழந்தைகளுக்கு படிக்க உதவி செய்தார். ஒரு குடும்பத்திற்கு திருமணம் செய்ய நிதி உதவியாக 10,000 ரூபாய் வீதம் 1,000 குடும்பங்களுக்கு உதவி செய்திருக்கிறார். விதவைகளுக்கு ஆசிரியர் வேலை வாங்கி கொடுத்திருக்கிறார். பல்வேறு நீர் நிலைகளை சீரமைத்திருக்கிறார். ஏழைகளுக்கு உணவு அளித்தவர். அவரை போன்ற வலிமை வாய்ந்த, திறமை வாய்ந்த, சக்தி படைத்த மனிதரை இழந்திருக்கிறோம்.
பிரசாரத்துக்காக கன்னியாகுமரி வந்த ராகுல் காந்தி
இரண்டு தகவல்களை சொல்ல கடமை பட்டுள்ளேன். முதலில் டெல்லியில் உள்ள மோடி அரசு தமிழ் மொழிக்கோ, தமிழ் கலாசாரத்துக்கோ, தமிழ் நாகரீகத்துக்கு மதிப்பு கொடுப்பதாக இல்லை. இங்குள்ள முதல்வர் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார். தமிழக முதல்வர் மக்களின் கோரிக்கைகளை முன்னிறுதாமல் மோடி சொல்வதை செய்பவராக இருப்பது வருத்தமளிக்கிறது. மோடி தொலைகாட்சியை பார்த்து ரசிக்ககூடியவராக இருக்கிறார். தமிழகத்தையும் தொலை காட்சியை பார்ப்பதுபோன்றுதான் பார்க்கிறார். ரிமோட் மூலம் தொலைகாட்சியை மாற்றுவது போன்று தமிழகத்தை மாற்ற நினைக்கிறார்.
தமிழக முதல்வர் ஊழல் செய்ததால் சிபிஐ, வருமான வரித்துறையைவைத்து மிரட்டி வருகிறார். தமிழர்களை தவிர பிறர் ஆட்சி நடத்தினால் தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது வரலாறு. இந்த தேர்தலில் நாம் அதை பின்பற்ற வேண்டும். தமிழ் மக்களை உண்மையாக யார் முன்னிறுத்தி செயல்படுபடுவாரோ அவர்தான் முதல்வராக வரவேண்டும்.
இரண்டாவதாக தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலம். நேற்று நான் கவனித்ததில் காமராஜர்தான் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிய முதல் இந்திய குடிமகன். அந்த நேரத்தில் இந்திய பொருளாதார மேதைகள் இலவச மதிய உணவு கொடுத்தால், பொருளாதார சீரழிவை ஏற்படுத்தும் என்றார். ஆனால் காமராஜர் பொருளாதார நிபுணர்கள் சொன்னதை கேட்காமல், மக்கள் சொன்னபடி மதிய உணவு வழங்கினார். காமராஜர் முயற்சியால் தமிழகம் மாட்டுமல்லாது இந்தியா முழுவதும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த பெருமை காமராஜரை சாரும். அதுதான் தமிழகம் நாட்டின் வழிகாட்டி என கூறினேன்.
ராகுல் பிரசாரம்
மோடியும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் சிறுமைபடுத்த முயற்சிக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் என கொண்டுவர முயற்சிக்கிறார். தமிழ், பெங்காளி ஆகியவை இந்திய மொழி இல்லையா. தமிழ் கலாசாரம் இந்திய கலாசாரம் இல்லையா. தமிழ் மொழி, கலாசாரம் பண்பாட்டை காப்பாற்ற நான் இருக்கிறேன். அனைத்து மொழி, கலாசாரம், மதங்களை காக்க நான் கண்டிப்பாக துணை நிற்பேன். அனைவருக்கும் நன்றி" என்றார்.
அ.தி.மு.க கூட்டணியை பொறுத்தவரையில் பா.ம.க-வுக்கான இடம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க 23 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது. தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விழுப்புரம் கூட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து நேற்று இரவு அமித் ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பா.ஜ.க தரப்பில் மத்திய அமைச்சர்கள் வி.கே சிங், சி.டி ரவி, எல். முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க - பா.ஜ.க இடையே தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டது. நள்ளிரவை தாண்டி நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பா.ஜ.க தரப்பில் சுமார் 30 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும் அ.தி.மு.க தரப்பில் 20 தொகுதிகள் வரை ஒதுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. கன்னியாகுமரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.
அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க போட்டியிடும் இடங்கள் இன்று உறுதி செய்யப்படலாம் என்ற தகவல் வருகிறது. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், நேற்றுமுன்தினம் அ.தி.மு.க அமைச்சர்கள் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து பேசினார்கள். தொடர்ந்து நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணி இல்லத்தில் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க நிர்வாகிகள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது தே.மு.தி.க நிர்வாகிகள் பா.ம.க வுக்கு நிகராக தங்களுக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது. முன்னதாக 2011 தேர்தலில் வெற்றிபெற்ற 29 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் அமைச்சரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
கடந்த தேர்தல்களில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் தே.மு.தி.க-வுக்கு அத்தனை இடங்களை ஒதுக்க அ.தி.மு.க தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இறுதியாவது தொடர்ந்து இழுபறியாகவே காணப்படுகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜ.க மற்றும் தே.மு.தி.க கட்சிகளுடன் பேச்சுவாரத்தை நடத்திய நிலையில், தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
கூட்டணி: கட்சிகள் தீவிரம்!
அண்ணா அறிவாலயம்
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பதாக டெல்லியில் தேர்தல் ஆணையம் அறிவித்தது முதல், தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் விவகாரங்களை இறுதி செய்யும் பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளது.
தி.மு.க தரப்பில் இதுவரை எந்தகூட்டணி கட்சிகளின் இடமும் இறுதி செய்யப்படவில்லை. எனினும் காங்கிரஸுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்திருக்கிறது. அதே போன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உடனான பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே முனுசுவலசை கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் முனியசாமி(வயது 42). இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவரது மனைவி மல்லிகா. கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் . இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்
முனியசாமி
முனியசாமி தினமும் குடித்து விட்டு மல்லிகாவை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் மனமுடைந்த மல்லிகா, முனியசாமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். மேலும் போலீசார் சந்தேகமடையாமலிருக்க குடிசை வீட்டிற்கும் தீ வைத்தார்.
மல்லிகா
முனியசாமி உடல் கருகிய நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கேணிக்கரை போலீஸார் அவரது உடலை கைப்பற்றி இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் முனியசாமி தினமும் போதையில் துன்புறுத்தியதால் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக்கொன்றது தெரிய வந்தது . இதன்படி மல்லிகாவை கேணிக்கரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் .