கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி., எஸ்.முனிசாமி, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி புதன்கிழமை நடைபெற்ற விற்பனை கண்காட்சியை தொடங்கிவைத்தார். அந்த நிகழ்ச்சியில் மகளிர் குழுக்கள் வைத்திருந்த கடைகளை பார்வையிட்டார்.
அப்போது, கடையொன்றில் விற்பனையில் இருந்த பெண் விற்பனையாளரை பார்த்த அவர், ``முதலில் பொட்டு வையுங்கள்; உங்கள் கணவர் உயிருடன்தானே இருக்கிறார்? உங்களுக்கு பொது அறிவு இல்லை" என்று கோபத்துடன் திட்டியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருடைய இந்த செயலுக்கு பலரும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ், ``இதுபோன்ற சம்பவங்கள் பாஜகவின் கலாசாரத்தை பிரதிபலிக்கிறது" என்று கண்டனங்களை தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி கார்த்தி ப.சிதம்பரமும் இந்த வீடியோவிற்கு பதிலளித்து, "@BJP4India இந்தியாவை 'இந்துத்துவா ஈரானாக' மாற்றும்'' என்று குறிபிட்டுள்ளார்.
மகிளா காங்கிரஸ் தலைவர் நேதா டிசோசா, “பாஜக எம்.பி., எஸ்.முனிசாமியின் செயல் மிகவும் வெட்கக்கேடானது. மகளிர் தினத்தன்று பெண்ணை அவமதிப்பது தான் பாஜவின் உண்மையான முகம் என்பதை நிரூபித்துள்ளீர்கள்” என்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
source https://www.vikatan.com/humour-and-satire/politics/bjp-mp-who-insulted-the-woman-condemnation-is-piling-up
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக