Ad

ஞாயிறு, 19 மார்ச், 2023

முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: ரஷ்யா vs ஜெர்மனி; பகையால் உருவான நட்பும், நட்பால் உருவான பகையும்!

ஆக, ஜூலை 28, 1914 அன்று செர்பியா மீது போர் அறிவிப்பை வெளியிட்டது ஆஸ்திரிய - ஹங்கேரி சாம்ராஜ்யம்.

இந்தக் காலகட்டத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதியில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நாடுகளுக்கிடையே நடைபெற்றிருந்தன. ஜெர்மனியும் இத்தாலியும் த​ங்களது அண்டைப் பகுதிகளை தன் வசமாக்கிக் கொண்டு பெரும் சக்திகளாக உருவாகத் தொடங்கின. பரந்து விரிந்திருந்த ஒட்டாமன் சாம்ராஜ்யம் (துருக்கியர்கள் சாம்ராஜ்யம் என்றும் இது அறியப்பட்டது) வேகமாக தன் அதிகார எல்லைகளை இழக்கத் தொடங்கியது.

ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் சில பகுதிகளைத் தனது காலனியாக மாற்றிக்கொண்டது ஜெர்மனி. இதைத் தொடர்ந்து தன்னை ஒரு சூப்பர் ஸ்டாராக எண்ணி அது நடந்து கொண்டது. இதன் காரணமாகப் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ஜெர்மனியின் மீது ஒரு கசப்புணர்வு உருவானது. முக்கியமாக பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஜெர்மனியின் மீது வெறுப்புணர்வை உருவாக்கிக் கொண்டன. இப்படி ஏற்கெனவே உருவாகியிருந்த பகைமையும் முதலாம் உலகப்போரில் இவை தங்களை இணைத்துக் கொண்டதற்குக் கூடுதல் காரணமாக இருந்தது.

ஜெர்மனி
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகள் மிகவும் வேடிக்கையானவை, மேலும் விபரீதமானவை. சரவெடியின் ஒரு நுனியில் பற்றிக்கொண்ட நெருப்பு எல்லா பட்டாசுகளையும் வெடிக்க வைத்தபடி கடைசி வெடிவரை செல்வதுபோல இந்த யுத்தத்தில் ஒவ்வொரு நாடாகக் கலந்துகொள்ளத் தொடங்கின.

********

என்று ஆஸ்திரியா - ஹங்கேரி நாட்டுக்கு உறுதி அளித்தார் ஜெர்மனியின் தலைவர் கைசர் இரண்டாம் வில்ஹெம் (Kaisar Wilhelm II).

முதலாம் உலகப்போரில் போரையும் கைசர் இரண்டாம் வில்ஹெம் சக்ரவர்த்தியும் பிரித்துப் பார்க்கவே முடியாது. 1880லிருந்து 1918 வரை அவர் ஜெர்மனியை ஆண்டார். அவர் காலத்தில் ஜெர்மனி பொருளாதாரத்திலும் ராணுவத்திலும் புதிய எழுச்சி கண்டது. அதேசமயம் ஐரோப்பா பல துண்டுகளாகப் பிரிந்ததும், அணிகளாக உருமாறியதும், ஒவ்வொரு அணியும் மற்றொன்றை மிகவும் அவநம்பிக்கையுடன் எதிர்கொண்டதும் கூட அவரால்தான்.

Kaiser Wilhelm II

விக்டோரியா மகாராணியின் முதல் பேரன் இவர். என்றாலும் பிரிட்டனுடன் இவர் நட்பு பாராட்டவில்லை. அதற்கு முக்கியக் காரணம் ஜெர்மானிய கடற்படையை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று இவர் எண்ணியதுதான். இந்த நோக்கம் இயல்பாகவே பிரிட்டனுக்கு எதிரான ஒன்றாக அமைந்துவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் பல நாடுகளை தன் பிடிக்குள் கொண்டு வந்தது. இதற்கு அதன் கடற்படை முக்கியக் காரணமாக அமைந்தது. இந்த நிலையில் ஜெர்மனியும் இதே குறிக்கோளுடன் செயல்படலாமா? பகைமை ​மூண்டது.

ஜெர்மனி தனது கடற்படையை விரிவுபடுத்தியதும் பல நாடுகளுக்கு அதன்மீது பெரும் சந்தேகம் எழுந்தது. ஜெர்மனி தங்கள் நாட்டையும் கபளீகரம் செய்து விடுமோ என்ற அச்சம் எழுந்தது. இதன் காரணமாக பிரிட்டனும் பிரான்ஸும் மிகவும் நெருங்கி வந்தன. அவற்றுடன் ரஷ்யாவும் இணைந்துகொண்டது. மூன்று நாடுகளும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. அதேசமயம், இதையெல்லாம் ஈடுகட்டும் விதத்தில் ஆஸ்திரியா - ஹங்கேரியைத் தனது நட்பு நாடாக ஆக்கிக் கொண்டார் ஜெர்மானிய சக்கரவர்த்தி.

தன் நாட்டு இளவரசரைக் கொல்வதற்குப் பின்னணியாக இருந்த செர்பியாவுக்கு எதிராகப் போரை அறிவித்திருந்த ஆஸ்திரியாவுக்கு இந்தச் ​சூழலில் இதனால் நிம்மதி ஏற்பட்டது. 'நம்மால் செர்பியாவை எளிதில் ஜெயிக்க முடியும். ஆனால் ரஷ்யாவும் செர்பியாவுக்குத் துணை நின்றால் இரண்டையும் ஒருசேர எதிர்ப்பதுதான் கஷ்டம். ஆனால் இப்போதுதான் நமக்கு ஜெர்மனியின் துணை கிடைத்துவிட்டதே'.

செர்பியாவின் பிரதமர் நிகோலா பாசிக்
பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவற்றுடன்தானே ரஷ்யாவுக்கு ஒப்பந்தம். அப்படியிருக்க செர்பியாவுக்கு எதற்காக ரஷ்யா துணை நிற்க வேண்டும்? காரணம் இருந்தது. செர்பியாவில் உள்ள இரண்டு முக்கிய கோஷ்டிகளில் ஒன்று ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டிருந்தது. இந்த அணியைச் சேர்ந்தவர்தான் செர்பியாவின் பிரதமர் நிகோலா பாசிக். எனவே இவரது ஆட்சிக்கு ரஷ்யா மிகவும் ஆதரவாக இருந்து வந்தது.

ஆஸ்திரியா - ஹங்கேரி நாட்டுக்கு உறுதி அளித்தபோது, தான் ரஷ்யாவுக்கு எதிராகப் போரிடுவோம் என்றெல்லாம் ஜெர்மனி நினைத்து விடவில்லை. 'ஆஸ்திரியா - ஹங்கேரிக்கும் செர்பியாவுக்கும் போர் நடந்தால் தான் அதில் பங்கேற்கத் தேவையில்லை. சிறிய நாடான செர்பியாவை ஆஸ்திரியா - ஹங்கேரி எளிதில் சமாளித்துவிடும். எனவே செர்பியாவுக்கு ஆதரவாக ரஷ்யா களத்தில் குதித்தால் மட்டுமே தன் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியிருக்கும். ஆனால் அடுத்த மூன்று வருடங்களுக்கு ரஷ்யா இந்தப் போரில் ஈடுபடாது. ஏனென்றால் அதன் ரயில் பாதைகள் சிறந்தவையாக மாறுவதற்கு மூன்று வருடங்கள் பிடிக்கும். அதுவரை ரஷ்யாவின் கவனம் தன் ரயில் பாதையைச் சிறப்பாக்குவதில்தான் இருக்கும்' என அது நினைத்தது.

ஜெர்மனி
அதாவது ஜெர்மனி தான் இந்தப் போரில் நேரடியாகக் கலந்துகொள்ள வேண்டியிருக்கும் என்று அப்போது கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், விதி...

- போர் மூளும்...



source https://www.vikatan.com/government-and-politics/governance/first-world-war-history-how-the-russia-and-germany-became-enemies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக