Ad

வெள்ளி, 31 மார்ச், 2023

GT v CSK: "எனக்கு 5 பௌலர்களே போதும்!"- தோல்வி குறித்து தோனி சொல்வது என்ன?

16 வது ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான இந்தப் போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. முதல் போட்டியிலேயே சென்னை அணி தோற்றது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இந்நிலையில், தோல்விக்கான காரணங்கள் குறித்து போட்டிக்குப் பிறகு தோனி பேசியிருக்கிறார்.
Dhoni

"இரவு நேர போட்டி என்பதால் பனியின் தாக்கம் இருக்கும் என்பது தெரியும். நாங்கள் அதற்கேற்றார் போல இன்னும் 15-20 ரன்களைக் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். ஒரு பேட்டிங் யூனிட்டாக இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும். அதேநேரத்தில்,

ருத்துராஜ் கெய்க்வாட் அற்புதமாக ஆடியிருந்தார். நல்ல டைமிங்கில் அவர் தேர்வு செய்து ஆடும் ஷாட்களையெல்லாம் பார்க்க அலாதியாக இருக்கிறது.
ருத்துராஜ் கெய்க்வாட்

என்றவரிடம் கமென்ட்டேட்டர் சைமன் டூலி, பந்துவீச்சு சொதப்பல்கள் பற்றிய கேள்விகளை வீசினார். அதற்கு தோனி, "இளம் பந்துவீச்சாளர்கள் தாமாக முன்வந்து பொறுப்பை எடுத்துக் கொண்டு சிறப்பாகச் செயல்பட வேண்டும். ஹங்கர்கேக்கர் நல்ல வேகத்தில் வீசுகிறார். நாள்கள் செல்ல செல்ல இன்னும் சிறப்பாகச் செயல்படுவார் என நம்புகிறேன்" என்றார்.

இந்தப் போட்டியில் சென்னை அணியின் ப்ளேயிங் லெவனில் எக்கச்சக்கமான ஆல்ரவுண்டர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனாலும், பந்துவீச தோனி வெறும் 5 பௌலர்களை மட்டுமே பயன்படுத்தியிருந்தார். சென்னை அணியின் தோல்விக்கு இதுவுமே ஒரு முக்கிய காரணமாக மாறிப்போனது. துஷார் தேஷ்பாண்டேவின் எக்கானமியெல்லாம் 15க்கும் மேல் இருந்தது. அவரிடம் ஒரு ஓவரை கட் செய்திருந்தால் கூட போட்டி இன்னும் நெருக்கமாகச் சென்றிருக்கும். எக்ஸ்ட்ரா பௌலர்களை ஏன் பயன்படுத்தவில்லை என்ற கேள்விக்கு, "மொயீன் அலியும் சிவம் துபேவும்தான் எக்ஸ்ட்ரா ஆப்சன்களாக இருந்தனர். இரண்டு இடதுகை ஸ்பின்னர்களே சரியான தேர்வாக இருப்பார்கள் என நினைத்தேன். அதனால்தான் சாண்டனர், ஜடேஜா இருவரும் மட்டும் வீசினார்கள். சிவம் துபேவும் பயன்படுத்தியிருக்கலாம், ஆனால் கையிலிருந்த பௌலர்களே எனக்குச் சௌகரியமாகத் தெரிந்தனர்" என்றார் தோனி!

சேப்பாக்கம்
அடுத்த போட்டியில் சென்னை அணி, லக்னோ அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


source https://sports.vikatan.com/cricket/ipl-2023-gt-v-csk-dhonis-post-match-presentation-speech

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக