என் வயது 50. இதுவரை எந்த உடற்பயிற்சியும் செய்ததில்லை. மெனோபாஸ் வயது என்பதால், எலும்புகளை பலப்படுத்த ஏதேனும் வொர்க் அவுட் அவசியம் என்கிறார்கள். இந்த வயதில் நான் ஜிம்மில் சேரலாமா? எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?
பி.பிரேமா, விகடன் இணையத்தில்
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்
உடற்பயிற்சிகளை ஆரம்பிக்கவென வயது வரம்பு எதுவும் இல்லை. 50 வயதில்லை, அதற்கு மேலிருந்தாலும் உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்கலாம். எலும்புகள் மற்றும் தசைகளைப் பலப்படுத்த நினைத்தால் ஸ்ட்ரெங்த் வொர்க் அவுட்டிலிருந்து தொடங்கலாம். ரெசிஸ்டன்ட்ஸ் டிரெயினிங் எனப்படும் இதில் வெயிட் வைத்து மெள்ள மெள்ள பயிற்சிகள் தரப்படும். நீங்கள் உடற்பயிற்சிகள் செய்வதென முடிவு செய்துவிட்டால் நீங்களாக யூடியூப் பார்த்துச் செய்வதோ, உங்களுக்குத் தெரிந்தவர்கள் செய்கிறார்கள் என்று அவற்றைப் பின்பற்றுவதோ வேண்டாம்.
நம்பகமான ஃபிட்னெஸ் பயிற்சியாளரை சந்தித்து உங்கள் வயது மற்றும் தேவைக்கேற்ப எந்தெந்தப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளைக் கேட்டுப் பின்பற்றுவதுதான் சரி. குறைந்த அளவு வெயிட்டிலிருந்து தொடங்கி மெள்ள மெள்ள அவர் அதை அதிகரித்து உங்களைத் தயார்படுத்துவார். மெனோபாஸ் வயதில் சரியான எடையை மெயின்டெயின் செய்ய மட்டுமன்றி, உங்கள் தசைகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்தப் பயிற்சிகள் உங்களுக்கு உதவும்.
source https://www.vikatan.com/health/healthy/is-it-advisable-to-join-a-gym-at-50-years-of-age
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக