Ad

ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

`பாஜக, ஆர்எஸ்எஸ் தூண்டிவிட்ட வெறுப்புக்கு ஒவ்வோர் இந்தியரும் விலை கொடுக்கிறார்கள்!' - ராகுல் காந்தி

சோனியா காந்தி ஆங்கில நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பகிர்ந்து, அதில் பாஜக-வைச் கடுமையாகச் சாடியுள்ளார். `நம்மிடையே ஒரு வைரஸ் பரவுகிறது’ என்ற தலைப்பில் சோனியா காந்தி கட்டுரை எழுதியுள்ளார். பாஜக-வில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள், வெறுப்புணர்வு அதிகரிப்பு, ஆவேசப் போக்கு ஆகியவை அதிகரித்துள்ளன. வெறுப்பு, மதவெறி, சகிப்பின்மை, பொய்யின் பேரழிவு நம்மை சூழ்ந்துகொண்டிருக்கின்ரன. மத்தியப் பிரதேசதம் கார்கோனில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின்போது நடைபெற்ற வன்முறையைக் குறிக்கும்விதமாக, வன்முறைச் செய்திகள் குறித்துப் பேச, பிரதமர் மௌனம் காக்கிறார்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையொட்டி, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், ``பாஜக-ஆர்எஸ்எஸ் தூண்டிவிட்ட வெறுப்புக்கு ஒவ்வோர் இந்தியனும் விலை கொடுக்கிறார்கள். இந்தியாவின் உண்மையான கலாசாரம் என்பது கொண்டாட்டங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் ஒருங்கிணைந்த வாழ்க்கை முறை. இதைக் காப்பாற்ற உறுதிமொழி எடுப்போம்'' எனப் பதிவிட்டுள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/every-indian-paying-price-for-hate-fueled-by-bjp-rss-says-rahul-gandhi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக