Ad

திங்கள், 18 ஏப்ரல், 2022

செயல்படாத பால் கூட்டுறவு சங்கங்களைக் கலைக்க வேண்டும்! கறார் காட்டும் அமித் ஷா

குஜராத்தில் 5 சதவிகித பால் கூட்டுறவு சங்கங்களும், உத்தரப் பிரதேசத்தில் 56 சதவிகித பால் கூட்டுறவு சங்கங்களும் செயல்படாமல் உள்ளது. செயல்படாத  கூட்டுறவு சங்கங்களை கலைக்க சட்ட மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என மத்திய கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

பால்

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (NFSU) நடைபெற்ற Anand-based National Cooperative Dairy Federation of India Limited (NCDFI)  பொன்விழா நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவு இணை அமைச்சர் பி.எல்.வர்மா, என்.டி.டி.பி  தலைவர் மீனேஷ் ஷா மற்றும் ரிசர்வ் வங்கியின் இயக்குநர் சதீஷ் மராத்தே ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, ``மாநில அரசுகளிடம் பேசி மாநிலங்களில் பால் உற்பத்தியில் ஏற்படும் தடைகளைக் கண்டறிய வேண்டும். ஒரு பால் கூட்டுறவு சங்கம் திவாலாகி விட்டால், இரண்டாவதாக ஒன்றை உருவாக்க முடியாது. ஏற்கெனவே உள்ள கூட்டுறவு சங்கம் செயல்படாத பட்சத்தில்,  புதிய கூட்டுறவு சங்கங்களை உருவாக்க அனுமதிக்கும் வகையில் சட்டத்தை மாற்ற வேண்டும்.

திவால் கொள்கைகளின்படி செயல்படாமல் இருக்கும் பழைய சங்கங்களைக் கலைக்க முடியும். தற்போது, பால் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளதால், ஒருவர் பால் விலையை எளிதாக உயர்த்த முடியும். பால் உற்பத்தி அதிகரித்தால், அதை உலகம் முழுவதும் போட்டி விலையில் விற்க வேண்டும். ஆனால், நாம் உலகச் சந்தைகளில் நுழையும்போது, போட்டியின் காரணமாக உற்பத்திச் செலவைக் குறைக்க வேண்டியிருக்கும்.

அமித் ஷா

பால்வளத் துறையில் ஏற்படும் உள்ளீட்டுச் செலவுகளைக் குறைக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்படி நடக்கும்பட்சத்தில், மலிவு விலையில் பால் கிடைக்கும். தேசிய உணவுப் பாதுகாப்பின் கீழ் வழங்கப்படும் பொருள்களில் பால் பொருள்களையும் சேர்க்குமாறு அமைச்சருக்கு பரிந்துரைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குநர் சதீஷ் மராத்தே வலியுறுத்தியுள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/new-legal-change-is-needed-to-dissolve-dysfunctional-milk-cooperatives-amit-shah

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக