ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார் சௌராஷ்டிரா அணியைச் சேர்ந்த சேதன் சகாரியா. மயாங்க் அகர்வால், கே.எல்.ராகுல் என இரண்டு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் சகாரியாவுக்கு இதுதான் முதல் ஐபிஎல் போட்டி! முதல் போட்டியிலேயே சிறப்பாகப் பந்துவீசி அசத்தியிருக்கும் அவர் கிரிக்கெட் வாழ்க்கையும் நடராஜனைப் போன்றதுதான்! எப்படி?
இந்த ஆண்டு நடந்த சையது முஷ்தாக் அலி டி-20 தொடரில், 5 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருந்தார். அவரது இந்தச் செயல்பாடு பிடித்துப்போக 1.2 கோடி ரூபாய் கொடுத்து அவரை வாங்கியது ராயல்ஸ். மும்பை, ராயல்ஸ் இரண்டு அணிகளும் அவரை டிரயல்ஸுக்கு வரவைத்திருக்கின்றன.
இடது கை வேகப்பந்துவீச்சாளரான இவர், 2020 ரஞ்சி கோப்பை வென்ற சௌராஷ்டிரா அணியில் விளையாடினார். 17 வயது இருக்கும்போது காயம் காரணமாக ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், ஒரு கட்டத்தில் விளையாட இவருக்கு ஷு கூட இல்லை. இப்போது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடிவரும் ஷெல்டன் ஜாக்சன்தான் இவருக்கு முதல் ஷூ வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
source https://sports.vikatan.com/ipl/chetan-sakariya-resembles-natarajan-in-many-ways
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக