இன்று தமிழ்ப்புத்தாண்டு. சங்கடங்கள் மிகுந்திருந்த சார்வரி வருடம் நம்மைவிட்டு விலகிவிட்டது. இன்று முதல் பிலவ வருடத் தமிழ்ப்புத்தாண்டு தொடங்கியிருக்கிறது. இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.
இந்த நாள் 14.4.21 சித்திரை மாதம் முதல் நாள், புதன் கிழமை. பொன்கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள் அப்படிப்பட்ட புதன் கிழமையில் இந்தப்புத்தாண்டு பிறந்திருக்கிறது.
இன்றைய நட்சத்திரம் பரணி மாலை 4.59 வரை அதன் பிறகு கிருத்திகை.
இந்த நாளின் திதி துவிதியை பகல் 12.28 வரை பிறகு திரிதியை.
இன்று நாள் முழுவதும் சித்தயோகமும் அமிர்ந்த யோகமும் நிறைந்திருப்பதால் இந்த நாளில் சுபகாரியங்களைத் தொடங்கலாம்.
இன்றைய
ராகுகாலம்: பகல் 12 முதல் 1.30 வரை
எமகண்டம்: காலை 7.30 முதல் 9 வரை
நல்லநேரம்: காலை 9.30 முதல் 10.30 வரை
மாலை 4.30 முதல் 5.30 வரை
இந்த நாள் இறைவழிபாட்டுக்கும் புதிய முயற்சிகளைத் தொடங்கவும் உகந்த நாள்.
பொதுவாகவே தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று கோயில்களில் பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் உண்டு. இதை பஞ்சாகப் பாடனம் என்று சொல்வார்கள். ஏன் பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் வந்தது? அது வெறும் சடங்குதானா என்றால் இல்லை என்கிறார்கள் பெரியோர்கள். அதன் அடிப்படையில் இருக்கும் தாத்பர்யம் என்ன என்பது குறித்து அறிந்துகொள்வோம்.
புத்தாண்டு தினத்தன்று பஞ்சாங்கம் படிப்பது ஏன்?
நம் முன்னோர்கள் காலத்தை முன் கணித்து அதற்கேற்ப வாழ்வை மாற்றிக்கொள்பவர்கள். அதனால்தான் ஓர் ஆண்டின் தொடக்கத்திலேயே பஞ்சாங்கத்தை வாசிக்கிறார்கள். ஊரில் இருக்கும் கோயில் அல்லது பஜனை மடம் ஆகிய பொது இடங்களில் அமர்ந்து அந்த ஆண்டுக்கான பஞ்சாங்கத்தை வாசிப்பார்கள்.
பஞ்சாங்கம் என்றால் ஐந்து அங்கங்கள் என்பதை நாம் அறிவோம். பஞ்சாங்கம் திதி, வாரம், கரணம், நட்சத்திரம் யோகம் ஆகிய அம்சங்களைச் சொல்வது மட்டுமல்ல. அந்த ஆண்டு எப்படி அமையும் என்பதையும் கிரக நிலைகளைக் கொண்டு முன் கணித்துச் சொல்பவை. பெரும்பாலும் அவர்களின் கணிப்பு சரியாகவே இருக்கும். ஒரு வாதத்துக்கு ஒருவேளை தவறியிருந்தால் அவர்கள் அதை வழக்கமாகக் கொண்டிருக்க மாட்டார்கள்தானே.
ஓர் ஆண்டில் மழை சுமாராக இருக்கும் என்றோ அல்லது அதிக மழை பெய்யும் என்றோ கணிக்கப்பட்டிருந்தால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்க வேண்டும் அல்லவா... மழை இருக்காது என்றால் இருப்பதைப் பாதுகாக்க வேண்டும். கனமழை பெய்யும் என்றால் ஏரிகுளங்களைத் தூர்வாற வேண்டும். நோய் பரவும் என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டால் நோயைத் தடுக்கும் விதமாக சுத்தமாக இருந்து மாரியம்மன் காளியம்மன் ஆகியவற்றுக்கு விழா எடுக்க வேண்டும். பஞ்சம் வரும் என்றால் மக்களுக்குத் தேவையான தானியங்களை சேமித்து வைப்பது பகிர்ந்தளிப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இப்படி ஊரைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முதற்படியாகவே பஞ்சாங்கம் படிப்பதை நம் மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த ஆண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு ஏற்பவே அந்த ஆண்டு ஊரில் வரி வசூல் இருக்கும். விதிக்கப்படும் வரியை அனைத்துத் துறைக்கும் பகிர்ந்துதளித்துச் செலவு செய்வார்கள். இது ஓர் நாட்டின் அரசாங்கம் செய்ய வேண்டிய பணி. அதை கிராமங்களில் அந்தக் காலத்தில் கிராம சபைகளிலேயே செய்துவிடுவார்கள். இப்படி, நம் முன்னோர்களின் அறிவியல் அபாரமானது. அதன் ஒரு துளிதான் பஞ்சாங்கம் கணிப்பதும் படிப்பதும்.
14.4.21 - இந்த நாளுக்கான சுருக்கமான ராசிபலன்களைப் பார்ப்போம்.
விரிவான ராசிபலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்
மேஷம்
மகிழ்ச்சி : மகிழ்ச்சிகரமான நாள். செயல்கள் அனைத்தும் அனுகூலமாக முடியும். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் நன்மையே ஏற்படும். - என்ஜாய் தி டே!
ரிஷபம்
சாதகம் : செயல்கள் அனைத்தும் வெற்றியாகும். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணவரவும் உண்டாகும். - சாதகமான ஜாதகம் இன்று!
மிதுனம்
நிதானம் : புதிய முயற்சிகள் அனுகூலமாகும் என்றாலும் உடல் நலனில் அக்கறை தேவை. செயல்களில் சிறு நிதானப்போக்கு அவசியம். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!
கடகம்
அனுகூலம் : செயல்கள் அனுகூலமாகும். சகோதர உறவுகள் தேடிவந்து உதவுவார்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்குச் சிறு அலைச்சல் ஏற்பட வாய்ப்புண்டு. - ஆல் இஸ் வெல்!
சிம்மம்
நன்மை : இன்று நன்மைகள் நடைபெறும் நல்ல நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாம். விவாதம் செய்வதை மட்டும் தவிருங்கள். - நோ ஆர்கியுமென்ட்ஸ்
கன்னி
சந்திராஷ்டமம் : இன்றும் சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். இறைவழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். - டேக் கேர் ப்ளீஸ்
துலாம்
பொறுமை : சொல்லிலும் செயலிலும் பொறுமை தேவைப்படும் நாள். முக்கியமான வேலைகளை இன்றே முடித்துவிடுங்கள். அனைவரையும் அனுசரித்துப்போவது நல்லது. - கேர் ஃபுல் ப்ளீஸ்!
விருச்சிகம்
வெற்றி : நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நடைபெறும். - வெற்றிக்கொடிகட்டு!
தனுசு
பணவரவு : எதிர்பாராத பணவரவும் பொருள் சேர்க்கையும் சேரும் நாள். கொடுத்து வராது என்று நினைத்திருந்த கடன் தொகை வசூலாகும். அனுகூலமான நாள். - ஜாலி டே!
மகரம்
அலைச்சல் : அனைத்திலும் கவனம் தேவை. குறிப்பாக, உடல் ஆரோக்கியத்தில் உரிய அக்கறை அவசியம். பொறுப்புகளால் சிறு அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!
கும்பம்
அன்பு : மகிழ்ச்சியான நாள். குடும்பத்திலிருந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த நன்மைகள் நடைபெறும். - ஆல் தி பெஸ்ட்!
மீனம்
பிரச்னை : இன்று அனைத்தும் சாதகமாக இருந்தபோதும் சிறு பிரச்னை ஒன்று ஏற்பட வாய்ப்புள்ளது. என்றாலும் பாதிப்பு இருக்காது. செயல்கள் அனுகூலமாகவே முடியும். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!
அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!
source https://www.vikatan.com/spiritual/astrology/why-people-read-panchangam-on-new-year-first-day
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக