Ad

திங்கள், 29 மே, 2023

இந்த வார ராசிபலன்: மே 30 முதல் ஜூன் 4 வரை #VikatanPhotoCards

ராசிபலன்
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்


source https://www.vikatan.com/spiritual/astrology/weekly-astro-predictions-for-the-period-of-may-30th-to-june-4th

Dhoni: "ரசிகர்களுக்கு நான் திருப்பி தரக்கூடிய பரிசு, இதுதான்!"- ஓய்வு குறித்து தோனி சொன்னது என்ன?

ஐபிஎல் 2023 சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. ஞாயிறன்று நடந்திருக்க வேண்டிய இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட, `ரிசர்வ் டே'வான நேற்று (திங்கள்) போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்ற தோனி சேஸிங் எனச் சொல்ல, குஜராத் பேட்டர்கள் அதிரடியால் வெற்றி இலக்கு 215-ஆக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியபோதே மழை குறுக்கிட, DLS முறைப்படி 15 ஓவர்களில் 171 ரன்கள் என்ற இமாலய இலக்கு சென்னைக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தோனி - ரவீந்திர ஜடேஜா

கான்வே, ரஹானே, ராயுடு, துபே என அனைவரும் முக்கியப் பங்காற்ற கடைசி ஓவரில் ஜடேஜாவின் அதிரடியால் வெற்றி பெற்றது மஞ்சள் படை! இதனைத் தொடர்ந்து வெற்றிக் கோப்பையை ஏந்திய தோனி, தன் ஓய்வு முடிவு குறித்தும், இந்த வெற்றி குறித்தும், கடைசி போட்டியில் விளையாடியிருக்கும் அம்பத்தி ராயுடு குறித்தும் பேசினார். அந்த நெகிழ்ச்சியான உரை அப்படியே இங்கே...

"இதுதான் என் ஓய்வை அறிவிக்கச் சரியான நேரமாக இருந்திருக்கும். இப்படியே விடைபெறுவது எளிதான விஷயமாக இருக்கும். அடுத்த 9 மாதங்கள் கடுமையாக உழைத்து இன்னொரு சீசன் ஆட முயற்சி செய்வது பெரிய சவாலாக இருக்கும். என் உடல் அதற்கு ஒத்துழைக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், ரசிகர்கள் என் மீது காண்பித்த அன்பிற்கு என்னால் அவர்களுக்குத் திருப்பி தரக்கூடிய பரிசு என்பது இன்னும் ஒரு சீசன் அவர்களுக்காக விளையாடுவதுதான்.

IPL 2023 Champions - Chennai Super Kings

சில நேரங்களில் நானும் எமோஷனல் ஆவது உண்டு. முதல் சிஎஸ்கே போட்டியின் போது அனைவரும் என் பெயரைக் கோஷமிடும்போது என் கண்கள் கலங்கின. சில நேரம் என்னை அமைதிப்படுத்திக்கொள்ள டக்-அவுட்டிற்கு (Dug Out) சென்றேன். இதை நான் அனுபவிக்க வேண்டும் என்பது புரிந்தது. இல்லாத ஒன்றை நான் காட்ட முற்படுவதில்லை. நான் நானாக இருப்பதையே அவர்கள் இந்த அளவு விரும்புகின்றனர். ஒவ்வொரு கோப்பையும் ஸ்பெஷல்தான். ஆனால், ஐபிஎல்லை பொறுத்தவரை மிகவும் இக்கட்டான சூழல்களுக்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும். இன்று சில தவறுகள் செய்தோம். பௌலிங் சிறப்பாக இல்லை. ஆனால், பேட்டர்கள் பொறுப்பை எடுத்துக்கொண்டு போட்டியை வென்று கொடுத்தனர். சில நேரங்களில் நானும் எரிச்சல் அடைவது உண்டு. ஆனால், அவர்கள் நிலையிலிருந்து என்ன மாதிரியான அழுத்தங்கள் இருந்தது என யோசிப்பேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பிரச்னைகளை எதிர்கொள்வார்கள். ரஹானே போன்ற அனுபவமிக்க வீரர்கள் பலரும் அணியில் இருப்பதால் இளம் வீரர்கள் அவர்களிடம் எப்போதும் மனம் விட்டுப் பேச முடியும்.

ராயுடுவின் சிறப்பு என்னவென்றால் எப்போது களத்திற்கு வந்தாலும் அவரது 100 சதவிகிதத்தைக் கொடுக்க வேண்டும் என நினைப்பவர் அவர். அதே சமயம் அவர் இருக்கும் வரை எங்களால் ஃபேர் பிளே விருதை வெல்லவே முடியாது. இந்தியா ஏ அணிக்காக ஆடும் போதிலிருந்து அவரை எனக்குத் தெரியும். ஸ்பின், பேஸ் என இரண்டையும் நன்றாக ஆடக்கூடியவர். இன்று ஸ்பெஷலாக எதாவது செய்வார் என எதிர்பார்த்தேன். என்னைப் போலவே மொபைலைப் பெரிதாகப் பயன்படுத்தாதவர் அவர். அவர் வாழ்வின் அடுத்த கட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பார் என நம்புகிறேன்!"



source https://sports.vikatan.com/cricket/ipl-2023-final-dhoni-full-speech-about-his-retirement

இன்றைய ராசிபலன் 30.5.23 | Horoscope | Today Rasi Palan | செவ்வாய்க்கிழமை | May 30 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/30052023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

ஞாயிறு, 28 மே, 2023

`என்னை விட்டுப்போகாதே நண்பா!' புற்று நோயால் இறந்த உயிர் நண்பனின் சிதையில் குதித்து உயிரை விட்ட நபர்!

உத்தரப்பிரதேசத்தின் பெரோஷாபாத் மாவட்டத்தில் உள்ள மதிய நாடியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அசோக் குமார்(40). இவரது நண்பர் கெளரவ் சிங்(42). இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

திருமண நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்து டிரம்ஸ் அடிப்பது இவர்களின் தொழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசோக் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

Representational Image

அவர் இறந்தது குறித்து கேள்விப்பட்டு பக்கத்து ஊரில் வசிக்கும் கெளரவ் அசோக் குமார் ஊருக்கு வந்தார். வேதனையில் துடித்திருக்கிறார். தன் நண்பனைவிட்டு எப்படி இருக்கப்போகிறேன் என கதறி அழுதிருக்கிறார். அசோக்குமாரின் உடல் இறுதிச்சடங்கிற்காக எடுத்துச்செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் செல்ல ஆரம்பித்தனர். ஆனால் கெளரவ் மட்டும் அங்கு நின்று கொண்டிருந்தார். திடீரென கெளரவ் தன் நண்பரின் சிதையில் குதித்துவிட்டார். இதனை பார்த்தவர்கள் ஓடி வந்து கெளரவை மீட்டனர்.

ஆனால் கெளரவ் 90 சதவிகித காயம் அடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கெளரவ் இறந்து போனார். இதையடுத்து கெளரவ் உடல் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. இது குறித்து கெளரவ் சகோதரர் கமல் சிங் கூறுகையில், ``அசோக்குமாரும், கெளரவ் சிங்கும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்தனர். இருவரும் ஒரே பள்ளியில் படித்தனர். அதோடு ஒரே நாளில் திருமணமும் செய்து கொண்டனர்.

இருவரும் சேர்ந்தே திருமணம் போன்ற காரியங்களில் டிரம்ஸ் இசைக்க செல்வர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு அசோக்குமாருக்கு புற்று நோய் வந்தது. அவர் சனிக்கிழமை இறந்து போனார். அவரது பிரிவை தாங்க முடியாமல் எனது சகோதரரும் சிதையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்" என்று தெரிவித்தார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/trending/man-jumps-into-pyre-of-friend-dies

Doctor Vikatan: ஒரு மாத்திரை எத்தனை மணி நேரம் வேலை செய்யும்?

Doctor Vikatan: ஒரு மாத்திரை சாப்பிட்டால் அது எத்தனை மணி நேரம் உடலுக்குள் வேலை செய்யும்.?

-கிடையூர் மாணிக்கம், பால்வாய் தெரு, சங்ககிரி, விகடன் இணையத்திலிருந்து...

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொதுமருத்துவர் பாபு நாராயணன்

பொது மருத்துவர் பாபு நாராயணன் | சென்னை

எந்தவிதமான மாத்திரையை எடுத்துக் கொண்டாலும் அது நான்குவிதமான புராசெஸுக்கு உள்ளாகும். முதலில் மருந்து உட்கிரகிக்கப்படுதல். உதாரணத்துக்கு இன்ஜெக்‌ஷன் போட்டால் மருந்தானது, நம் தசைகளில் இருந்தோ, சப்கியுட்டேனியஸ் லேயர் எனப்படும் சருமத்தின் அடுக்கு வழியோ உடலுக்குள் உறிஞ்சப்படும்.

அடுத்தது, அந்த மருந்து உடல் பாகங்களுக்கு அனுப்பப்படுவது. கொழுப்பு, தசை, ரத்தம், கல்லீரல் உள்பட உடலின் எல்லா பாகங்களிலும் அந்த மருந்து விநியோகிக்கப்படும்.

மூன்றாவது, மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றம்.... அதாவது, அந்த மருந்து உடலில் எப்படி உடைபடுகிறது என்பது. கடைசியாக, வெளியேற்றம். அதாவது, அந்த மருந்து எப்படி நம் உடலில் இருந்து வெளியே போகிறது என்பது.

மருந்தானது சிறுநீர், மலம், வியர்வை அல்லது மூச்சுக காற்று என எப்படி வேண்டுமானாலும் வெளியேறலாம். எனவே இந்த நான்கு விஷயங்களுக்கும் குறிப்பிட்ட நேரம் எடுக்கும். ஒவ்வொரு மருந்துக்கும் அந்த நேரம் வேறுபடும். ஆக, மருந்தின் தன்மையைப் பொறுத்து அது, 2 மணி நேரம், 6 மணி நேரம், 8 மணி நேரம், 12 மணி நேரம், 24 மணி நேரம், 7 நாள்கள், 30 நாள்கள் என எப்படி வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.

அதனால் தான் மருத்துவர்கள், சில மருந்துகளை ஒரு வேளைக்கும், சிலதை இரண்டு வேளைகளுக்கும், சிலதை மூன்று வேளைகளுக்கும் பரிந்துரைக்கிறார்கள். மருத்துவர் பரிந்துரைத்தபடி, மாத்திரைகளை சரியான இடைவெளியில் எடுத்துக்கொண்டால்தான் அதன் முழுப் பலனும் கிடைக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-how-many-hours-does-a-pill-work-inside-the-body

அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிக்க ராகுல் காந்தி தயங்குவது ஏன்?! - டெல்லி அரசியல் பின்னணி

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு துணை நிலை ஆளுநராக இருப்பவர் வினய் குமார் சக்சேனா. இவருக்கும் மாநில அரசுக்கும் இடையில் நீண்ட நாள்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது.

வினய் குமார் சக்சேனா,அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த பிரச்னை ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் வெடித்தது. இதையடுத்து 'மாநில நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது' என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது.

அதில், "டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க, இடமாற்றம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுக்கே முழு அதிகாரம் இருக்கிறது. அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகி விடும்" என தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்றம்

இந்த தீர்ப்பு வெளியான சில மணி நேரத்திலேயே சேவைகள் துறை செயலாளர் ஆஷிஷ் மோரை இடமாற்றம் செய்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். ஆனால் அதற்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா ஒப்புதல் அளிக்கவில்லை.

பின்னர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையே நீர்த்துப்போகும் செய்யும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அதில், "பணி நியமனம், இடமாற்றம் தொடர்பாக முடிவு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை முதன்மை செயலாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆம் ஆத்மி.

இவர்களில் பெரும்பான்மை முடிவின்படி பணி நியமனம் மற்றும் இடமாற்றம் முடிவுகள் இருக்கும். ஒருமித்த முடிவு ஏற்படாவிட்டால் துணை நிலை ஆளுநர் எடுக்கும் முடிவே இறுதியானது" என கூறப்பட்டிருக்கிறது. இதற்கு குடியரசு தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்கியதால், இந்த சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது.

இது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் இந்த அவசரச் சட்டத்தை கருப்புச் சட்டம் என அந்த கட்சி கடுமையாக விமர்சனம் செய்தது. மறுபுறம் இதனை நிரந்தர சட்டமாக கொண்டுவர பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மக்களவையில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இருக்கிறது.

மம்தா பானர்ஜி

எனவே மாநிலங்களைவையில் எதிர்க்கட்சிகளின் உதவியோடு அதை தோற்கடிக்க அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக எதிர்க்கட்சி தலைவர்களின் ஆதரவை கோரி வருகிறார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, தேசிவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரைச் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார்.

அதன் ஒருபகுதியாக காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவையும், ராகுல் காந்தியையும் சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை தேதி ஒதுக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. எனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் தயக்கம் கட்டுவதன் பின்னணி என்ன? என்பது குறித்த கேள்வி எழுகிறது.

ப்ரியன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "இந்த சட்டம் மாநில அரசின் உரிமைகளை பறிக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இதையடுத்து கெஜ்ரிவாலுக்கு எதிர்க்கட்சி தலைவர்களான மம்தா பானர்ஜி, சரத் பவார் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து விட்டார்கள். மக்களவையில் காங்கிரஸின் ஆதரவு ஆம் ஆத்மிக்கு தேவை. அதனால் தான் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க கெஜ்ரிவால் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மேலும் அவர்கள், "பாஜகவின் பி டீம் தான் ஆம் ஆத்மி, காஷ்மீரில் 370 சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார், டெல்லி மற்றும் பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு ஆம் ஆத்மி தான் காரணம். அவருக்கு அவசரம் என்பதால் தான் நம்மை தேடுகிறார். எனவே ஆதரவு தெரிவிக்க வேண்டாம்" என்று தான் சொல்கிறார்கள்.

காங்கிரஸ்

இதனால் டெல்லி காங்கிரஸை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில் மேலிடம் இருக்கிறது. 2024 தேர்தலில் அப்படி இருக்க முடியாது. எனவே அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது. இந்த பேச்சுவார்த்தை நடந்து வருவதால் தான் கெஜ்ரிவாலுக்கு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை.

டெல்லி காங்கிரஸை சமாதான படுத்திய பிறகு தான் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்வார்கள். இல்லை என்றால் பிளவு ஏற்பட்டு விடும். நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் இருப்பதால் பொறுமையாக தான் காங்கிரஸ் முடிவு செய்யும். இதேநிலை தான் மேற்கு வங்கத்திலும் இருக்கிறது. அங்கு இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் தலைமை மம்தாவிடம் நட்பு வைத்துக்கொள்ள கூடாது என்று தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் கூட ஆளும் கட்சியான மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை காங்கிரஸ் வேட்பாளர் வீழ்த்தி இருந்தார். இது திரிணாமூல் காங்கிரஸ் மத்தியில் காங்கிரஸ் மீது கோபத்தை ஏற்படுத்தியது. என்றாலும் பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை சொல் தான் 2024-ம் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை. இதெல்லாம் காங்கிரஸ் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்கொள்ள இருக்கும் சவால்கள்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/why-is-rahul-gandhi-reluctant-to-support-arvind-kejriwal

கார்ட்டூன்

`ஷாக்' ட்ரீட்மென்ட்...


source https://www.vikatan.com/government-and-politics/politics/cartoon-june-04-2023