Ad

செவ்வாய், 30 ஜூன், 2020

`இரவு கசிந்த வாயு; உயிரிழந்த 2 பேர்!’ -விசாகப்பட்டினத்தில் தொடரும் சோகம்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் எனும் ரசாயன தொழிற்சாலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. சாலைகளில் மயங்கிக் கிடந்த மக்கள், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மக்களை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்த விஷவாயுக் கசிவால் சுமார் 11 பேர் உயிரிழந்ததாகவும், 1000-க்கும் மேற்பட்டோர் கடுமையாகப் பாதிப்படைந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தற்போது அதே விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள தனியார் மருந்து நிறுவனம் ஒன்றில் இருந்து வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்படைந்தவர்கள் 2 பேர் இறந்துள்ளதாகவும், 4 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிப்படைந்தவர்கள்

விசாகப்பட்டினத்தில் உள்ள பர்வாடா எனும் பகுதியில், சைனார் லைஃப் சயின்ஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தில், நேற்று இரவு 11:30 மணியளவில் பென்சிமிடாசோல் என்ற வாயு கசிந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வாயுக் கசிவு ஏற்பட்டபோது, அந்த நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக உயர் காவல்துறை அதிகாரி உதய்குமார் பேசும்போது, ``நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. இறந்த இரண்டு நபர்களும் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த தொழிலாளர்கள். சம்பவத்தின்போது அவர்கள் கசிவு நடந்த இடத்தில் இருந்துள்ளனர். வாயு வேறு எங்கும் பரவவில்லை” என்று கூறியுள்ளார்.

Also Read: `சாலையில் மயங்கி விழுந்த மக்கள்... அதிகரிக்கும் பலி எண்ணிக்கை’ -ஆந்திராவைப் பதற வைத்த விஷவாயு கசிவு

இந்தச் சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன், அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ``நிறுவனம் அமைந்துள்ள பகுதியேலேயே இந்த விபத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை. இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியில் இரண்டாவது முறையாக விஷயாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது, அப்பகுதி மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிகிச்சைப்பிரிவு

கொரோனா வைரஸ் தொடர்பாக 40 நாள்களுக்கும் மேல் மூடப்பட்டிருந்த எல்.ஜி. பாலிமர்ஸ் ஆலையில் இருந்து திடீரென டாக்சிக் ஸ்டைரீன் என்ற வாயு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதிக நச்சுத்தன்மை உள்ள இந்த வாயுவால் அப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் மூன்று கிராம மக்கள் பாதிப்படைந்தனர். வீடுவீடாகச் சென்று அதிகாரிகள் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் 1984-ம் ஆண்டு நடந்த போபால் வாயுக்கசிவுடன் ஒப்பிடப்பட்டது.

வரலாற்றில் நடந்த மிகவும் மோசமான பேரழிவுகளில் இந்த போபால் சம்பவமும் ஒன்றாகும். இந்த வாயுக் கசிவால் சுமார் 3,500 பேர் இறந்தனர். குறைந்தது ஒரு லட்சம் மக்கள், இந்த வாயுவால் உடலில் ஏற்பட்ட பிரச்னைகளால் நீண்டகாலம் பாதிப்படைந்தனர். இந்த நிலையில், தற்போது சில மாத இடைவெளியில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டுள்ள சம்பவம் ஆலைகளின் பாதுகாப்புத் தன்மை குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதங்களும் எழுந்துள்ளன.

Also Read: ஆழ்ந்த உறக்கத்தில் எமனாக வந்த விஷவாயு... விசாகப்பட்டினம் ஆலையின் அலட்சியமே காரணமா?



source https://www.vikatan.com/news/death/two-people-were-dead-in-visakapattinam-because-of-gas-leak

வரும் ஜூலை மாதம் முதல் ஊரடங்கு எப்படி இருக்கலாம்? மக்கள் கருத்து இதுதான்! #VikatanPollResults

தமிழகத்தில் 5-ம் கட்ட 'தளர்த்தப்பட்ட ஊரடங்கு' இன்றோடு முடிகிறது. தமிழகம் முழுவதும் 'தளர்த்தப்பட்ட ஊரடங்கு' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்றாலும் சென்னை, மதுரை போன்ற பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கடுமையான முழு ஊரடங்கே நிலவி வருகிறது. இதேபோல், அந்தந்த பகுதிகளின் பாதிப்புக்கு ஏற்றவாறு புதிய ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தமிழக அரசு, முழு ஊரடங்கு ஜூலை 31 வரை தொடரும் என்று அறிவித்துள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 5 மாவட்டங்களில் ஜூலை 5 வரை கடுமையான ஊரடங்கே கடைப்பிடிக்கப்படும்.

இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் முன்னரே, மக்களிடம் ஜூலை மாத ஊரடங்கு எப்படி இருக்கலாம் என்ற கேள்வியைக் கேட்டிருந்தோம். அதற்குக் கிடைத்த பதில்கள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

New Lockdown | Vikatan Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

New Lockdown | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

New Lockdown | Vikatan Poll
New Lockdown | Vikatan Poll
New Lockdown | Vikatan Poll
New Lockdown | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஜூலை 31-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை மாதம் முதல் ஊரடங்கு எப்படி இருக்கலாம் என்று முன்னரே கேட்கப்பட்ட கேள்விக்கு மக்களின் கருத்து இதுதான்...

New Lockdown | Vikatan Poll

மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

New Lockdown | Vikatan Poll
New Lockdown | Vikatan Poll
New Lockdown | Vikatan Poll
New Lockdown | Vikatan Poll
New Lockdown | Vikatan Poll
New Lockdown | Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-regarding-the-new-phase-of-lockdown

2020 ஹோண்டா லிவோ BS-6... என்ன எதிர்பார்க்கலாம்?

ஹீரோவுக்கு பேஷன் ப்ரோ எப்படியோ, ஹோண்டாவுக்கு லிவோ அப்படி. அதாவது அந்தந்த நிறுவனங்களின் 110 சிசி ப்ரீமியம் கம்ப்யூட்டர் பைக்குகள் அவைதான்! முறையே 66,000 ரூபாய் (டிரம் பிரேக்) மற்றும் 68,200 ரூபாய்க்கு (டிஸ்க் பிரேக்), முற்றிலும் புதிய பேஷன் ப்ரோ பைக்கை (விலைகள் அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம்), கொரோனாவுக்கு முன்பாகவே ஹீரோ நிறுவனம் களமிறக்கிவிட்டது (பிப்ரவரி 2020). இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஹோண்டாவின் என்ட்ரி லெவல் கம்யூட்டரான CD 110 பைக்கின் BS-6 வெர்ஷன் அறிமுகமான நிலையில், தற்போது ப்ரீமியம் 110 சிசி பைக்கான லிவோவின் டீசர்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன. CD 110 பைக்கின் BS-4 மாடலைவிட, BS-6 வெர்ஷனின் எக்ஸ்-ஷோரூம் விலை 12,000 ரூபாய் அதிகமாகி இருந்தது தெரிந்ததே. ஏறக்குறைய அதேபோன்ற விலை உயர்வை இங்கும் எதிர்பார்க்கலாம்.

Livo BS-6

டீசர்களைப் பார்க்கும்போது, லிவோவின் தோற்றத்தில் சின்னச்சின்ன மாற்றங்கள் இருக்கும் எனத் தோன்றுகிறது. முன்பக்கக் கவுலில் இருக்கும் ஹெட்லைட்டின் வடிவமைப்பு முன்புபோலவே இருந்தாலும், இது CD 110 போலவே DC செட்-அப்பிற்கு அப்கிரேடு ஆகியிருக்கலாம். ஹாலோஜன் ஹெட்லைட்டுக்கு மேலே இருக்கும் வைஸர் புதிதாகக் காட்சியளிக்கிறது. மற்றபடி பாடி கலரில் ரியர் வியூ மிரர்கள், க்ளியர் லென்ஸ் இண்டிகேட்டர்கள், கறுப்பு நிறத்தில் இருக்கும் டெலிஸ்கோபிக் ஃபோர்க் & 5 ஸ்போக் அலாய் வீல்கள், முன்பக்க டிஸ்க் பிரேக் & 18 இன்ச் MRF டியூப்லெஸ் டயர்கள் ஆகியவை அப்படியே தொடர்கின்றன. பக்கவாட்டுப் பகுதியில் பெட்ரோல் டேங்க்கை உற்றுநோக்கும்போது, அது முந்தைய மாடலில் இருந்ததுபோன்ற டூயல் டோன் க்ராஃபிக்ஸ் உடனேயே வரும் எனச் சொல்லலாம். ACG சைலன்ட் ஸ்டார்ட், ஸ்டார்ட்-ஸ்டாப் வசதியும் உண்டு.

லிவோ BS-4

CD 110 BS-6 பைக்கில் இடம்பெற்றிருந்த புதிய 109.51சிசி HET eSP இன்ஜின் - 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணியே, BS-6 லிவோவிலும் இருக்கும். எனவே 8.68bhp பவர் - 0.93kgm டார்க்கில் எந்த வித்தியாசமும் இருக்காது. இந்த பைக்கின் பாக்ஸ்-செக்‌ஷன் ஸ்விங் ஆர்மைப் பார்த்தால், அநேகமாக Open Chain பயன்படுத்தப்பட்டு இருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. மேலும், லேட்டஸ்ட் ஹோண்டா பைக்குகளில் இருக்கும் அதே ஸ்விட்ச்கள் இங்கும் இடம்பெற்றுள்ளன.

Livo BS-6 Tail Light

எனவே, Integrated Pass லைட் தவிர, ஸ்டார்ட்டர் பட்டன் உடனான இன்ஜின் கில் ஸ்விட்ச் சேர்க்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சம். இதைத் தவிர சிங்கிள் பீஸ் சீட் & கிராப் ரெயில், ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர், டேங்க் Extension உடனான பெட்ரோல் டேங்க் எனப் பல ஒற்றுமைகளைப் பார்க்கமுடிகிறது. பாடி பேனல்களைத் தவிர, பின்பக்க டெயில் லைட்டின் வடிவமும் மாறியிருக்கிறது.

Livo BS-6 Meter

ஹெட்லைட்டுக்கு மேலே அதே அனலாக் - டிஜிட்டல் பாணியிலான மீட்டர்தான் என்றாலும், அதன் டயல் முற்றிலும் புதிது. இதில் வழக்கமான ட்ரிப் மீட்டர், சர்வீஸ் இண்டிகேட்டர், கடிகாரம் தவிர, புதிதாக இன்ஜின் வார்னிங் இண்டிகேட்டர் சேர்ந்திருக்கிறது. என்னதான் தொழில்நுட்பத்தில் இந்த ப்ரீமியம் கம்யூட்டர் பைக் முன்னிலை வகித்தாலும், போட்டி பைக்குகளில் (பஜாஜ் டிஸ்கவர் 110 BS-6 இனிமேல் வரும்) இருக்கக்கூடிய LED ஹெட்லைட்/LED DRL, Low பேட்டரி இண்டிகேட்டர், மொபைல் சார்ஜர், எக்கோ மோடு இண்டிகேட்டர், சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப் ஸ்விட்ச் போன்ற வசதிகள் இங்கே காணவில்லை என்பது மைனஸ். உத்தேசமாக 64,000 ரூபாய் எக்ஸ்-ஷோரூம் எனும் ஆரம்ப விலையில் வரப்போகும் லிவோ BS-6, ஓட்டுதல் அனுபவத்தில் என்ன சர்ப்ரைஸ் வைத்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாகவே இருக்கிறோம்.



source https://www.vikatan.com/automobile/motor/honda-2020-bs-6-livo-what-can-we-expect

ஜோலார்பேட்டை:`நாங்க மதுரை, தேனிக்காரங்க சார்' -ஆந்திராவுக்கு துரத்தப்பட்ட தமிழர்கள்

கொரோனா பொது முடக்கத்தால், வடமாநிலங்களில் தவித்த தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், ‘சங்கமித்ரா’ சிறப்பு ரயிலில் சொந்த ஊர் திரும்பினர். நேற்று முன்தினம் இரவு, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை அந்த ரயில் வந்தடைந்தது. அப்போது, ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட 90-க்கும் மேற்பட்டோரை பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே போலீஸார் தடியடி நடத்தி, ‘இறங்கக் கூடாது’ என்று மிரட்டினர்.

கொரோனா பரிசோதனை

‘சார், நாங்கள் வட மாநிலத்தவர்கள் இல்லை. மதுரை, தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்’ என்று தெரிவித்தும், ரயில்வே போலீஸார் ‘இங்கு ரயிலுக்கான நிறுத்தம்’ இல்லை என்றுகூறி லத்தியால் தாக்கி, அதே ரயிலில் தொடர்ந்து பயணப்பட வைத்தனர். சிறப்பு ரயில் இறுதியாக ஆந்திர மாநிலம் குப்பத்துக்குச் சென்று நின்றது. அதில் இருந்து இறங்கிய 93 பேரை அங்கிருந்த வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் விசாரித்தனர்.

தமிழர்கள் என்று தெரியவந்ததால், லாரியில் ஆட்டுமந்தையைப் போல் அடைத்து தமிழக எல்லையான பச்சூரில் கொண்டுவந்து இறக்கிவிட்டுள்ளனர். அங்கிருந்து பொடி நடையாக அவர்கள் திருப்பத்தூருக்கு நடந்துவந்தனர். இதுகுறித்து, திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதிர்ந்துபோன கலெக்டர், உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள்

அனைவருக்கும் தொற்று இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு, மதுரை கலெக்டரிடம் விவரத்தைச் சொல்லி, 3 பேருந்துகள் மூலம் இரவோடு இரவாக 93 பேரையும் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தார் திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள். ‘வந்தோரை வாழவைக்கும்’ தமிழகத்தில், சொந்த மக்களே அகதிகளாக ஆந்திராவுக்கு துரத்தியடிக்கப்பட்டு மீண்டு வந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/tamilnadu/jolarpet-railway-police-who-sent-tamil-peoples-to-andhra-pradesh-who-came-in-special-train

டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை... உங்கள் கருத்து? #VikatanPoll

டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சீனப் பின்னணியைக்கொண்ட 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, நாடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த 59 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் செல்போன் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனாளர்களின் நலன்கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் பரிந்துரையின்படி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, இந்திய செல்போன் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

விரிவாகப் படிக்க...

Also Read: `டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேனர் உள்ளிட்ட 59 சீன செல்போன் செயலிகளுக்குத் தடை!’- மத்திய அரசு

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/technology/tech-news/vikatan-poll-regarding-59-chinese-apps-getting-banned

COVAXIN: இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி! -மனிதச் சோதனைக்கு ஒப்புதல்

கோவிட்-19 வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான தடுப்பூசி, மருந்தை நோக்கி உலகமே எதிர்பார்த்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கோவிட்-19 தடுப்பூசி மருந்து, அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வழங்கியுள்ள மனிதச் சோதனை அனுமதி, மகிழ்ச்சி செய்தியாகக் கிடைத்துள்ளது.

corona

கோவாக்ஸின் (COVAXIN):

இந்தியா கண்டுபிடித்துள்ள கோவிட்-19 நோய்க்கான தடுப்பூசி, `கோவாக்ஸின் (COVAXIN)'. எபோலா வைரஸ், ஸிகா வைரஸ்(Zika) ஆகியவற்றுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்த ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவிட்-19க்கான தடுப்பு மருந்தை ஏற்கெனவே கண்டுபிடித்திருந்தது. ஆரம்பகட்ட ஆராய்ச்சிகள் முடிந்த நிலையில், மனிதர்களிடம் வரும் ஜூலை மாதம் முதல் மருந்தைச் செலுத்தி ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

Also Read: இந்தியாவில் கொரோனவைவிடக் காசநோய் உயிரிழப்புகளே அதிகம்... ஓர் அலெர்ட்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் கூட்டு முயற்சி இது. புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் கோவிட்- 19 நோயின் காரணியான SARS- CoV - 2 வைரஸின் ஸ்ட்ரெய்ன் தனிமைப்படுத்தப்பட்டு, பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அது தரப்பட்டு, தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்தன. உலக அளவில் பல நாடுகளில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சிகள் நடந்து வரும் நிலையில், நம்நாட்டுத் தயாரிப்பான தடுப்பு மருந்துக்கு அடுத்தகட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட ஒப்புதல் கிடைத்துள்ளது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

test

கடந்த திங்களன்று, சீனாவின் ராணுவம் அவர்கள் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் 1.2 கோடி மக்களுக்கு மேல் பாதிப்பு ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸை எதிர்க்க மருந்தும் தடுப்பூசியும் காலத்தின் தேவை. தடுப்பூசியில் அடுத்தகட்ட ஆராய்ச்சிக்குச் செல்லும் இந்தியா வெற்றியடைய வாழ்த்துகள்.



source https://www.vikatan.com/news/healthy/indias-first-vaccine-for-corona-virus-approved-for-human-trial

திங்கள், 29 ஜூன், 2020

`தடை நல்லது; ஆனால், பிஎம்கேர்ஸ்-க்கு அளித்த நிதி?’ -கேள்வி எழுப்பும் காங்கிரஸ்

இந்தியாவில் மிகவும் பிரபலமான வீடியோ செயலியான டிக் டாக் மீது பாதுகாப்பு தொடர்பான புகார்கள் எழுந்தன. ஆனால், டிக் டாக் செயலியை நிர்வகித்துவரும் சீன நிறுவனமான பைட்டான்ஸ் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தது. எனினும், டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சீனப் பின்னணியைக்கொண்ட 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்து உத்தரவிட்டது. டிக்டாக் தடை மற்றும் சீனாவுடன் எல்லைப் பிரச்னை நிலவிக்கொண்டிருக்கும் நேரத்தில் வந்த மத்திய அரசின் உத்தரவு ஆகியவை தொடர்பாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மீம்களைக் குவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், சீன செயலிகள் தடைக்கு காங்கிரஸ் தங்களது வரவேற்பை தெரிவித்துள்ளது.

டிக்டாக்

சீன செயலிகள் தடை தொடர்பாக மத்திய அரசு, ``இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, நாடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த 59 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் செல்போன் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனாளர்களின் நலன்கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் பரிந்துரையின்படி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, இந்திய செல்போன் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும்” என்று கூறியுள்ளது. இந்த 59 செயலிகளில் அதிகமாக பயன்பாட்டில் இருக்கும் டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேனர் உள்ளிட்ட பல செயலிகள் அடங்கும்.

பா.ஜ.க - காங்கிரஸ்

இந்த நிலையில், செயலிகள் தடை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அகமது படேல் தனது ட்விட்டர் பக்கத்தில், ``எல்லையில் ஊடுருவல் மற்றும் இந்திய வீரர்கள் மீது சீனப் படையினர் தாக்குதல் ஆகியவற்றுக்குப் பதிலடி கொடுப்பதன் அடிப்படையில் சீனப் பின்புலம் உள்ள செயலிகளைத் தடை செய்த மத்திய அரசின் முடிவை வரவேற்கிறோம். மத்திய அரசு இன்னும் கடுமையான பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார். இதேபோல காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி, ``சீன செயலிகளைத் தடை செய்வது நல்ல விஷயம். ஆனால், பிஎம்கேர்ஸ் நிவாரண நிதி, சீன நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்றது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது நல்ல யோசனையா இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: `டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேனர் உள்ளிட்ட 59 சீன செல்போன் செயலிகளுக்குத் தடை!’- மத்திய அரசு



source https://www.vikatan.com/news/india/what-about-chinas-fund-in-pm-cares-asked-congress-to-bjp