Ad

சனி, 3 ஜூன், 2023

இன்றைய ராசிபலன் 4.6.23 | Horoscope | Today Rasi Palan | ஞாயிற்றுக்கிழமை | June 4 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/04062023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

வெள்ளி, 2 ஜூன், 2023

நட்சத்திரப் பலன்கள் ஜூன் 2 முதல் 8 வரை #VikatanPhotoCards

அசுவினி
பரணி
கிருத்திகை
ரோகிணி
மிருகசீரிடம்
திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம்
மகம்
பூரம்
உத்திரம்
அஸ்தம்
சித்திரை
சுவாதி
விசாகம்
அனுஷம்
கேட்டை
மூலம்
பூராடம்
உத்திராடம்
திருவோணம்
அவிட்டம்
சதயம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி


source https://www.vikatan.com/spiritual/astrology/astro-predcition-based-on-star-sign-for-the-period-of-june-2nd-to-8th

மே மாதத்துடன் நிறைவடையாது கோடை... பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?

2015-ம் ஆண்டுக்குப் பிறகு, கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் இறப்புகள் ஐந்து மடங்கு அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலநிலை மாற்றத்தால் வருடத்தின் சராசரி வெயில் காலம் நீண்டு வருவதாகவும் ஆய்வு முடிவுகள் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றன.

எனவே, மே மாதத்தோடு கோடை கழன்று சென்றுவிடுமென நினைக்காமல் ஒவ்வொருவரும் வெயிலின் கடும் பாதிப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

summer

அதிக பாதிப்புக்குள்ளாகும் பெண்கள்

ஆண்களைவிட பெண்களுக்குதான் கோடைக்காலம் சற்றே சிரமமான நிகழ்வு. உடையில் ஆரம்பித்து உடல்வலிமை வரை எல்லாவற்றிலும் ஆண்களிடம் இருந்து வேறுபட்டும், சில நேரங்களில் பலவீனப்பட்டும் நிற்கிறார்கள்.

பெண்களுக்கென்றே மற்றுமொரு பிரத்யேக பிரச்னை சமயலறை. வெப்பத்தில் உணவோடு சேர்ந்து சமைப்பவர்களும் வேகும் அறை. சமையல் வேலைகளை சீக்கிரம் முடித்துக் கொள்ளும் வகையில் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில் கடுமையான உடல் செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும். அதற்கேற்றவாறு நேரத்தையும் வேலைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும். வேலையோ, ஓய்வோ நல்ல காற்றோட்டமான அறைகளில் இருத்தல் வேண்டும்.

பச்சோந்தி

வெப்ப ரத்த வகை உயிரினங்கள்

உலகில் உள்ள உயிரினங்கள், உடல் வெப்பத்தைக் கொண்டு இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒன்று குளிர் ரத்தவகை உயிரினங்கள், மற்றொன்று வெப்ப ரத்தவகை உயிரினங்கள். குளிர் ரத்த உயிரினங்களின் உடல் வெப்பநிலை எப்போதும் நிலையானதாக, ஒரே அளவில் இருக்காது.

வெளிப்புற சூழ்நிலையில் உள்ள வெப்பநிலையை ஒத்து இவ்வுயிரினங்களின் உடல் வெப்பநிலை மாறும். மீன், முதலை, தவளை, பல்லி வகைகள் போன்றவை குளிர் ரத்த உயிரினங்களுக்கு உதாரணங்கள். சில உயிரினங்கள் தங்களைச் சுற்றியுள்ள வெப்பநிலைக்கு ஏற்ப, தன் உடலின் நிறத்தை மாற்றி உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்திக் கொள்கின்றன. உதாரணம் பச்சோந்தி.

வெப்ப ரத்த வகை உயிரினங்கள், வெளிப்புற சூழ்நிலைக்கேற்ப வெப்பநிலையைத் தகவமைத்துக் கொள்ளும் தன்மையைப் பெற்றவையல்ல. பசு, புலி, சிங்கம், நாய் என பிற பாலூட்டிகள் அனைத்தும் இவ்வகையைச் சேர்ந்தவையை. பறவைகளும் இவ்வகையே. மனிதர்களும் வெப்ப ரத்த வகை உயிரினங்கள் எனும் வகைப்பாட்டில் அடங்கிப் போகின்றனர்.

காய்ச்சல்

உடலில் ஏற்படும் நீரிழப்பு

வெப்ப ரத்த வகை உயிரினங்களின் உடல் வெப்பநிலை ஒரே அளவில்தான் இருக்கும். வெளிப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்ப உடல் வெப்பம் மாறுபடாது. நம்முடைய உடல் வெப்ப அளவு எப்போதுமே 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் (37 டிகிரி செல்சியஸ்) அளவில் இருக்க வேண்டும்.

கொஞ்சம் கூடினாலும் காய்ச்சல் வந்துவிட்டது என்று சிகிச்சை நோக்கிச் செல்ல வேண்டியிருக்கும். வெயிலின் தாக்கத்தால் உடலின் வெப்பநிலை, மிகக் குறைந்த நேரத்தில் அளவுக்கு அதிகமாக உயரும் பட்சத்தில் அது உயிருக்கே உலை வைப்பதாக அமையக்கூடும்.

கோடைக்காலத்தில் ஏற்படும் உடல் அசதி, உடல் பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, தசை இறுக்கம், குமட்டல் போன்றவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனெனில், அவை உடலின் நீரிழப்பினாலோ, அதீத வெப்பத்தினாலோ உடல் பாதிக்கப்படுவதைக் குறிப்பவை. இத்தகைய நிலைகளில் மருத்துவ உதவியை நாடவும் தயங்கக் கூடாது.

பெண்கள் முக்கியமாக கர்ப்பிணிகள், உடல் பலவீனமானவர்கள், இதய, சிறுநீரக மற்ற பிற உறுப்புகளில் நோய்கள், சர்க்கரை, உயர்ரத்த அழுத்தம், புற்றுநோய், காசநோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள், முதியோர், மனநோயாளிகள், வெளி வேலை செய்பவர்கள் ஆகியோர் கொளுத்தும் வெயிலில் எளிதில் பாதிக்கப்படலாம்.

மருத்துவர் த.ரா.செந்தில், துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள்

வெப்பத்தை சமன்படுத்தும் வியர்வை

உடலின் வெப்பத்தைக் கூடாமலும் குறையாமலும் பார்த்துக் கொள்ளும் அமைப்பும் செயல்பாடுகளும் நம் உடலில் இயற்கையாகவே அமைந்துள்ளன. அவைதான் வியர்வையும் சுவாசமும்.

வியர்வை... உடல் உள்ளே உள்ள நீரை எடுத்து, சருமத்தின் வழியாக நீர்த்துளிகளாய் வெளிப்படுத்துவதாகும். வியர்வை ஆவியாவதன் மூலம் சருமத்தின் மற்றும் உடலின் வெப்பம் கூடாமல் தவிர்க்கச் செய்கிறது. எனவே, உடலில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம்.

இல்லையெனில், உடல் வெளி வெப்பத்தினின்று தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தடுமாறக்கூடும். இதற்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமான செயல் என்னவெனில், அவ்வப்போது தேவையான அளவுக்கு நீர் அருந்துவதாகும்.

தண்ணீராக மட்டுமல்லாமல், பழச்சாறு, மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களின் கூழ் போன்றவற்றையும் அருந்தலாம். வெளியில் செல்பவர்கள் எப்போதும் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பது அவசியம். நீரின்றி அமையாது உலகு... மட்டுமல்ல, உடலும்கூட என்பதை உணர்ந்து செயல்படுவது சிறந்தது.

வியர்வை

உணவு, உடையில் கவனம் தேவை

அடுத்து, சுவாசம்... உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு அளிப்பதோடு, உடலின் வெப்ப நிலையை சமன்படுத்தும் வேலையையும் சேர்த்தே செய்கிறது. இவை மட்டுமல்லாமல், இன்னும் பல்வேறு தகவமைப்பு முறைகளையும் உடல் கொண்டுள்ளது.

உணவைப் பொறுத்தவரையில், எளிதாக செரிமானமாகக்கூடிய உணவுகள் சிறந்தவை. கடினமான உணவுகள் மந்தமாக உணர வைப்பதுடன், உடலின் வெப்ப நிலையை அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகின்றன.

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளும் இதே விளைவை ஏற்படுத்தக்கூடியவை. மேலும் நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய், முள்ளங்கி, வெள்ளரி போன்ற காய்கறிகள் மற்றும் ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி போன்ற பழங்கள் ஆகியவற்றையும் நேரடியாக உண்பதும் நல்லது. மது, குளிர்பானங்கள், புகைபிடித்தல், அதிகப்படியான தேநீர், காபி போன்றவற்றைத் தவிர்ப்பது. இவையெல்லாம் உடலில் நீர் இழப்பைத் தூண்டுபவை.

அடுத்து உடை. இதற்கு மிகமுக்கிய பங்கு உண்டு. ஏனெனில் உடலை, உடலின் சருமத்தை ஒட்டி இருக்கும் முதல் வெளி உலகம் அதுதான். முக்கியமாக உடை சருமத்திலிருந்து வெளிவரும் வியர்வையைத் தடை செய்யும் விதத்தில் இருக்கக் கூடாது. தளர்வான உடையாக இருப்பது வியர்வை தடையின்றி வெளியேற ஏதுவாக இருக்கும். பருத்தி போன்ற ஆடைகள் எளிதில் வியர்வையை உறிஞ்சி உலரச் செய்யும். வெளிர் நிற உடைகளை அணிவது நலம்.

காபி, டீ

வெளிர் நிறங்கள் வெப்பத்தை உள் நிறுத்தாமல் பிரதிபலிக்கக் கூடியவை. கறுப்பு போன்ற அடர்நிற உடைகள் வெப்பத்தை இழுத்து தன்னுள் நிறுத்திக்கொள்ளும் இயல்பை உடையவை. வெயில் காலங்களில் குடைகளைப் பயன்படுத்தும்போதும் நிறங்களின் இயல்பை மனதில் நிறுத்தி, பயன்படுத்துவது நல்லது.

கோடைக்காலத்தில் அனைவருமே தினமும் இரண்டு முறை குளித்தல் சருமப் பாதுகாப்புக்கு சிறந்தது. வெளியில் செல்லும்போது குடை, தொப்பி, கண்களுக்கு குளிர் கண்ணாடி ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

- மருத்துவர் த.ரா.செந்தில்

துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள்

திருப்பத்தூர் மாவட்டம்.



source https://www.vikatan.com/health/why-is-summer-getting-longer

ஓர் உண்மை: பெட்ரோல்/டீசலைவிட எலெக்ட்ரிக்கில்தான் எமிஷன் அதிகம்! வனவிலங்குகளுக்கும் EV எதிரியா?

‘தடதட’வென நாராசச் சத்தத்துடன், ‘ஃப்ரெண்ட்ஸ்’ வடிவேலு மாதிரி நம் மூஞ்சிகளில் கறும்புகை அடித்துச் செல்லும் வாகனங்களுக்கு மத்தியில், சத்தமே இல்லாமல், எக்ஸாஸ்ட்டே இல்லாமல் போகும் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பார்த்தால் பெரிய கும்பிடு போடத் தோன்றும்.

இதற்குக் காரணம் – எலெக்ட்ரிக் வாகனங்கள் சத்தம் போடாது; இரண்டாவது – இவி–க்களில் புகையே வராது. அட, எக்ஸாஸ்ட் பைப் என்று சொல்லக்கூடிய சைலன்சரே இருக்காது. 

‘அட, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இதைவிட வேறென்னய்யா வேணும்’ என்று நாம் காலர் தூக்கிவிடும் வேளையில் – ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளாக வேண்டும். அந்த உண்மை இதுதான்: ‘பெட்ரோல் டீசலில் ஓடும் வாகனங்களைவிட எலெக்ட்ரிக்கில் ஓடும் வாகனங்களால்தான் சுற்றுச்சூழலுக்குப் பெரிய ஆபத்து!’

இது கொஞ்சம் வியக்கத்தக்க உண்மை. இது காலங்காலமாகச் சொல்லப்பட்டு வந்தாலும், கான்பூரில் உள்ள IIT (Indian Institute of Technology)–யின் மூலம் லேட்டஸ்ட்டாக நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் இந்த உண்மை நச்செனக் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த ஸ்டடி ரிப்போர்ட் இப்படிச் சொல்கிறது: ‘‘ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி வாகனங்களை ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் கார்கள் நாம் நினைப்பதுபோல், எக்கோ ஃப்ரெண்ட்லியான கார்கள் இல்லை!’’

ஒரு ஜப்பானிய நிறுவனத்துடன், இந்த IIT கான்பூர் இணைந்து எலெக்ட்ரிக், ஹைபிரிட் மற்றும் ICE (Internal Combustion Engine) வாகனங்களைப் பற்றிய ஒரு படிப்பு ஆய்வு நடத்தியது. இதில் LCA (Life Cycle Analysis) மற்றும் TCO (Total Cost of Ownership) … அதாவது – எந்த வாகனங்களுக்கு ஆயுள் அதிகம் மற்றும் பணச்சேமிப்புக்கு எது உகந்தது - இதைக் கண்டறியும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் இந்த உண்மையைச் சொல்லியிருக்கிறார்கள். 

Electric Vehicle Charging
வளவன் அமுதன், எலெக்ட்ரிக் பொதுப் போக்குவரத்து நிபுணர்

இந்தப் படிப்பாராய்ச்சியின்படி, எலெக்ட்ரிக் கார்கள், ஒரு சாதாரண ICE வாகனத்தைவிட (பெட்ரோல்/டீசல் வாகனம்) சுமார் 15 – 50% எமிஷனைத் தன் வாழ்நாளில் வெளியிடுகிறதாம். இதை GHC (GreenHouse Gas Emissions) என்று சொல்வார்கள். உற்பத்தி, பயன்பாடு, ஸ்க்ராப்பேஜ் என்று எல்லா விஷயங்களுக்கும் இது பொருந்தும். கூடவே, COP (Cost of Purchasing), இன்ஷூரன்ஸ், பராமரிப்பு, ரன்னிங் காஸ்ட் போன்றவற்றிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் 15 – 60% அதிகமாக இருக்கிறதாம் சாதா ICE வாகனங்களைவிட! 

‘இது உண்மையா?’ என்று நம் ஊர் பன்னாட்டு எலெக்ட்ரிக் எக்ஸ்பெர்ட் மற்றும் பொதுப்போக்குவரத்தில் நிபுணராக இருந்து வரும் வளவன் அமுதனிடம் விசாரித்தோம்!

‘‘உண்மைதான்; நாம் நினைப்பதுபோல் எலெக்ட்ரிக் வாகனங்கள், ICE வாகனங்களை ஒப்பிடும்போது நல்ல எக்கோ ஃப்ரெண்ட்லி கார் கிடையாது. பொதுவாக, நாம் வாகனம் ஓடும்போது வெளியிடப்படும் நச்சுப்புகையை மட்டும் கணக்கிடுகிறோம். TPE (Tailpipe Emission)படி… அதாவது, எக்ஸாஸ்ட் புகையை மட்டும் வைத்துக் கணக்கிட்டால், ICE வாகனங்கள் புகையை உமிழ்வது உண்மைதான். ஆனால், அந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க நாம் எவ்வளவு நச்சுப்புகையை வெளியிடுகிறோம் தெரியுமா?

இதைத்தான் GHC (GreenHouse Gas Emissions) என்கிறோம். அதென்ன GHC? 

EV related to Nature

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு எது முக்கியம்? லித்தியம் அயன் பேட்டரி! அந்த Li பேட்டரிக்கு முக்கியமான 3 மூலப்பொருட்கள் – லித்தியம், கோபால்ட், மாங்கனீசு (Lithium, Cobalt, Manganese). ஒரு எலெக்ட்ரிக் வாகனத்துக்குப் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரியில் சுமார் 8 கிலோ லித்தியம், 14 கிலோ கோபால்ட் மற்றும் 20 கிலோ மாங்கனீசு இருக்கும். இவை தயாரிப்பதற்கு நீர் மற்றும் மண்வளம் நாம் நினைப்பதைவிட அதிகமான அளவில் மாசுபடும் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இது மண் அரிப்பையும் ஏற்படுத்தி, வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தையும் காலி செய்யும் என்பதும் உண்மை.

இது தவிர, நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் மின்சாரம் இருக்கிறதே! அதிலும் ஏகப்பட்ட GHC வெளியாகிறது. மேலும், Grid India வழங்கும் தகவலின்படி, இந்தியாவில் EV-க்களுக்குத் தேவையான மின்சாரம், அதிகளவில் பெட்ரோலிய மூலப்பொருட்களில் இருந்து (குறிப்பாக, 73.09% லிக்னைட்டை மூலப்பொருளாகக் கொண்டு)தான் உற்பத்தி செய்யப்படுகிறது. 

Neyveli Lignite Corporation

நிலக்கரிச் சுரங்கங்களின் மாசு பற்றி உங்களுக்குத் தெரியும். ஒரு புள்ளி விவரம்: இந்தியா  கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவதில், உலகின் மூன்றாவது பெரிய நாடாக மாறியுள்ளது. அதாவது, ஆண்டுக்கு 3.9 பில்லியன் மெட்ரிக் டன் (3.9 billion metric tons CO2) சமமான (GtCO₂e) என்ற அளவில் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளை (GHGs) வெளியிடுகிறது!’’ என்கிறார் வளவன் அமுதன்.

‘அப்போ என்னதான் தீர்வு’ என்றால், இந்த கான்பூர் IIT ஆய்வில், அதற்கு ஒரு வழி சொல்லியிருக்கிறார்கள். அதாவது, ஹைபிரிட் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் இதற்கு நல்ல தீர்வு என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால், அதற்கும் அரசாங்கத்துக்கு எதிராக – வரி, திரை, கிஸ்தி என்று ‘கட்டபொம்மன்’போல் நாம் குஸ்தி போட்டாக வேண்டும்!



source https://www.vikatan.com/automobile/car/derails-about-why-electric-vehicles-are-not-eco-friendly

தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் வெற்றியா..?

சிங்கப்பூர், ஜப்பானுக்கு 9 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுவிட்டுத் திரும்பியிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ‘‘குறைந்தபட்சம் ரூ.3,000 கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டோம்’’ என்று சொன்ன தமிழக முதல்வர், ரூ.3,233 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகளைப் பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருக்கிறார்.

தமிழக முதல்வரின் இந்தப் பயணத்தைப் பாராட்ட வேண்டிய அதே சமயத் தில், சில கேள்விகள் எழுந்திருப்பதையும் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. இந்தப் பயணத்தில் ஐ.பி நிறுவனம், டைசல் நிறுவனம், ஹோம்ரான் ஹெல்த்கேர் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் ரூ.3,233 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் சொல்லி இருக்கிறார்.

கடந்த கால அ.தி.மு.க ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்து ரூ.8,000 கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டார். அதைவிட முதல்வர் ஸ்டாலின் தற்போது போட்டிருக்கும் ஒப்பந்தங்களின் தொகை சுமார் 5,000 கோடி குறைவாகவே இருக்கிறது.

8,000 கோடியோ... 3,233 கோடியோ... வெளிநாட்டு முதலீடுகள் பற்றி இப்படி ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அறிவிப்புகள்தான் வருகின்றனவே தவிர, அந்த அறிவிப்பு எந்தளவுக்கு நிஜமாகி, அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கத் தொடங்கியது என்பது பற்றி பெரிய அளவில் தகவல்கள் எந்த ஆட்சியிலும் வெளியாவதில்லையே... அது ஏன்?

வெளிநாட்டில் இருந்து தொழில் முதலீடுகளைக் கொண்டுவருவது, அவசியம் செய்ய வேண்டிய விஷயம்தான். அதே சமயம், தமிழகத்தில் தொழில் சூழலை மேம்படுத்துவதில் இன்னும் அதிகமான அக்கறையைக் காட்டுவதும் அவசியம் அல்லவா? இன்றைய நிலையில், வெளிநாட்டு நிறுவனங்கள் நமது மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்கான இடத்தைத் தர உதவி செய்வது, பிற அனுமதிகளை கூடிய விரைவில் தருவது, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது என்பது போன்ற விஷயங்களில் அதிக அக்கறை காட்டலாமே! தொழில் சூழல் நன்றாக இருக்கும்பட்சத்தில், வெளிநாட்டு நிறுவனங்கள் நமது மாநிலத்துக்கு வர மாட்டோம் என்று ஏன் சொல்லப்போகிறார்கள்? அவர்கள் வேறு மாநிலங்களைத் தேடிச் செல்வதில் இருந்தே நமது மாநிலத்தில் இன்னும் வசதிகளை எதிர்பார்க்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.

வெளிநாட்டு முதலீடு குறித்த தகவல்களை அடிக்கடி வெளியிடுவதால் மட்டுமே, மக்கள் மனதில் இடம்பிடித்துவிட முடியாது. அவற்றின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் எந்தளவுக்கு உருவாகி, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து, பொருளாதாரம் எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பதைச் சொல்வதன்மூலமே மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டு நடந்தால் சரி!

- ஆசிரியர்



source https://www.vikatan.com/crime/money/tamil-nadu-chief-minister-stalin-singapore-japan-investment-tour

இன்றைய ராசிபலன் 3.6.23 | Horoscope | Today Rasi Palan | சனிக்கிழமை | June 3 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/03062023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

Coromandel Train accident : ரயில் விபத்து; உயரும் பலி எண்ணிக்கை... தொடரும் மீட்புப்பணிகள்! - உதவி எண்கள் அறிவிப்பு!

உதவி எண்கள் அறிவிப்பு!

கிழக்கு ரயில்வே, மேற்கு வங்க அரசு, ஒடிசா அரசு, தெற்கு ரயில்வே ஆகியவை உதவி எண்களை அறிவித்துள்ளன.

Helpline numbers at Howrah: 033 – 26382217

Kharagpur: 8972073925, 9332392339

Balasore: 8249591559, 7978418322

Shalimar: 9903370746

Helpline at Chennai Central: 044- 25330952, 044-25330953 & 044-25354771

`விபத்தில் சிக்கியவர்களை மீட்க, ஒடிசாவுக்கு விரையுமாறு உத்தரவிட்டிருக்கிறேன்!' - முதல்வர் ஸ்டாலின்

`உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்!' - மத்திய ரயில்வே அமைச்சர்

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ``இந்த எதிர்பாராத ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும்" என அறிவித்திருக்கிறார்.

``முதல் கவலை... உயிருடன் இருப்பவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பதுதான்!" - ஒடிசா முதல்வர்

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதல்வர் நவீன் பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக நாளை காலை நான் செல்லவிருக்கிறேன். தற்சமயம் எங்களுடைய முதல் கவலை என்னவென்றால், காயமடைந்து உயிருடன் இருப்பவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்ப்பதுதான். மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்தார்.

``சோகச் செய்தியால் வேதனையடைந்தேன்..!" - ராகுல் காந்தி

ராகுல் காந்தி

``ஒடிசா மாநிலம், பாலசோரில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளான சோகமான செய்தியால், வேதனை அடைந்தேன்..." என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

``மிகுந்த வேதனையடைகிறேன்..!" - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திரௌபதி முர்மு

``ஒடிசாவில் துரதிஷ்டவசமான ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து தகவலறிந்து ஆழ்ந்த வேதனையடைகிறேன். தங்கள் உறவுகளை இழந்தவர்களுடன் என்னுடைய இதயம் இருக்கிறது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்." - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ட்வீட்.

கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கொரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசாவின் புவனேஸ்வர் அருகே பஹாந்தா என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த விபத்தில் நான்கு பெட்டிகள் தடம் புரண்டிருக்கின்றன. இதற்கிடையே விபத்துக்குள்ளான ரயிலோடு மற்றுமொரு பாசஞ்சர் ரயிலும் மோதி விபத்துக்குள்ளாகியிருப்பதாக, ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்திருக்கிறார்.

ஒடிசா ரயில் விபத்து

முதற்கட்டமாக 300-க்கும் அதிகமானோர் இந்தக் கோர விபத்தில் படுகாயமடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. விபத்துக்குள்ளான ரயில்களிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஒடிசா மாநில மீட்புப்படை, தேசிய மீட்பு மற்றும் நிவாரணப்படைகள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. 50-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் பணியில் ஈடுபட்டிருக்கின்றன. இரவு நேரத்தில், காட்டுப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்கும் பணியில் சற்று சிரமம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுவரை 132 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஒடிசா மாநில அரசு கூறியிருக்கிறது. உயிரிழப்பு குறித்து இதுவரை அரசு எந்தத் தகவலும் வெளியிடவில்லை. இதற்கிடையே, ஒடிசா முதல்வருடன் தமிழ்நாட்டின் முதல்வர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அங்கிருக்கும் சூழலைக் கேட்டறிந்திருக்கிறார். மேலும், தேவைப்படும் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஒடிசா ரயில் விபத்து

மேலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தலைமைச் செயலாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் விபத்து நடந்த இடத்துக்குச் செல்லுமாறு வருவாய்த்துறை அமைச்சர் பிரமிளா மாலிக்கிடம் கூறியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த விபத்து குறித்துப் பேசிய ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா,``NDRF மற்றும் SDRF குழுக்கள் சம்பவ இடத்தில் இருக்கின்றன. 600-700 மீட்புப்படை வீரர்கள் பணிபுரிகின்றனர். இரவு முழுவதும் மீட்புப்பணி நடைபெறும். அனைத்து மருத்துவமனைகளும் ஆதரவு அளித்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களை மீட்பதே எங்களின் உடனடி அக்கறை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளனர்” என்றார்.

ஒடிசா ரயில் விபத்து

கிழக்கு ரயில்வே, மேற்கு வங்க அரசு, ஒடிசா அரசு, தெற்கு ரயில்வே ஆகியவை உதவி எண்களை அறிவித்துள்ளன.

Helpline numbers at Howrah: 033 – 26382217

Kharagpur: 8972073925, 9332392339

Balasore: 8249591559, 7978418322

Shalimar: 9903370746

Helpline at Chennai Central: 044- 25330952, 044-25330953 & 044-25354771



source https://www.vikatan.com/crime/accidents/odisha-coromandel-express-train-accident-live-updates