Ad

வியாழன், 3 மார்ச், 2022

மாயமாகும் கவுன்சிலர்கள்?! - களைகட்டும் கடலூர் மேயர் தேர்தல்... திமுக அமைச்சர்களுக்கு `செக்’?!

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைப்பெற்றது. 45 வார்டுகளைக் கொண்ட இந்த மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க நேரடியாக 27 இடங்களையும், அ.தி.மு.க 6 இடங்களையும், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலா 3 இடங்களையும், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் தலா ஒரு இடங்களையும், சுயேட்சைகள் 3 இடங்களையும் பிடித்தனர். தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே இரண்டு சுயேட்சைகளை வளைத்துப் போட்டது தி.மு.க. இதன்மூலம் தி.மு.க கூட்டணி கவுன்சிலர்களின் பலம் 36 ஆக அதிகரித்தது.

கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தல்

தொடர்ந்து புதிய மாநகராட்சியின் 45 கவுன்சிலர்களும் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்றுக்கொண்ட வார்டு கவுன்சிலர்கள் தங்களின் மேயர் மற்றும் துணை மேயர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடக்கவிருக்கிறது. போட்டிகள் இருந்தால் தேர்தலும், போட்டிகள் இல்லையென்றால் ஒருமனதாகவே மேயர் மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முதல் மாநகராட்சியின் முதல் மேயர் பதவியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட வேண்டுமென்று நினைத்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தனது தீவிர ஆதரவாளரான கடலூர் நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரியை களமிறக்கினார். அதேபோல மாவட்டப் பொருளாளரான வி.எஸ்.எல்.குணசேகரன் தனது மனைவி கீதாவை மேயராக்கிவிட வேண்டுமென்று களமிறங்கினார். உள்ளாட்சி தேர்தலில் கட்சித் தலைமை இவர்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பாகவே, தி.மு.க கட்சித் துண்டுடன் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார் நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரி.

கீதா குணசேகரன்

”நகரச் செயலாளர் என்றால் கட்சியின் கட்டுப்பாட்டை மீறலாமா ? கட்சித் தலைமை அறிவிக்கும் முன்பே தன்னிச்சையாக எப்படி வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்? வேட்பாளர் பட்டியலில் பெயர் இருப்பதை அவருக்கு சொன்னது யார்?” என்று தலைமைக்கு போன் போட்டு புகார் கடிதம் வாசித்தனர் கட்சியின் மூத்த உறுப்பினர்கள். ஆனால் அந்த புகார்களை தவிடு பொடியாக்கிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தனது அதிகாரத்தால் கே.எஸ்.ராஜா மற்றும் அவரது மனைவி இருவருக்குமே சீட் வழங்க நொந்துபோனார்கள் கட்சி நிர்வாகிகள்.

கீதா குணசேகரன், சுந்தரி ராஜா இருவரும் வெற்றிபெற்ற நிலையில், நகரச் செயலாளரான கே.எஸ்.ராஜா தனது சொந்த வார்டிலேயே தோல்வியடைந்தார். அதையடுத்து மேயர் பதவியை பிடிக்க கே.எஸ்.ராஜாவும், வி.எஸ்.எல் குணசேகரனும் காய் நகர்த்தி வந்த நிலையில், கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரியை மேயர் வேட்பாளராக அறிவித்தது கட்சித் தலைமை. அந்த அறிவிப்பின் பின்னணியில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது செல்வாக்கை செலுத்தினார் என்று தகவல் வெளியாக, உஷ்ணமானது வி.எஸ்.எல் குணசேகரன் தரப்பு.

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

``இதுவரை கட்சி நமக்கு பெரிதாக எதையும் செய்யவில்லை. இனிமேல் செய்யப்போவதும் இல்லை” என்று நினைத்த வி.எஸ்.எல் தரப்பு தனது சதுரங்க ஆட்டத்தை துவக்கியது. அடுத்தடுத்த நிமிடங்களில் செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு மாயமானார்கள் தி.மு.கவின் கவுன்சிலர்கள். மாயமான அந்த கவுன்சிலர்கள் அனைவரும் தற்போது வி.எஸ்.எல் குணசேகரன் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களுடன் பா.ஜ.க மற்றும் பா.ம.கவின் இரண்டு கவுன்சிலர்களும் ஐக்கியமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த காய் நகர்த்தலின் பின்னணியில் கடலூர் தொகுதியின் எம்.எல்.ஏ அய்யப்பன் இருப்பதாக அடித்துக் கூறுகிறது எதிர் தரப்பு.

மாயமான தி.மு.க கவுன்சிலர் ஒருவரிடம் பேசினோம். தனது அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேச ஆரம்பித்தவர், ``எங்களை யாரும் கடத்தவில்லை. நாங்கள்தான் தலைமறைவாக இருக்கிறோம். நாங்கள் ஒவ்வொருவரும் பலமாக செலவு செய்து வெற்றிபெற்றிருக்கிறோம். அதனை ஈடுகட்ட வேண்டும். தலைமை சொல்லிவிட்டதே என்று நாங்கள் போண்டியாக முடியாது” என்றார் ஆவேசமாக. கவுன்சிலர்கள் மாயமான விவகாரம் கடலூர் முழுவதும் பரவியதையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் தொடர் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

அமைச்சர் சி.வி கணேசன்

இது ஒருபுறமிருக்க நெல்லிக்குப்பம் நகராட்சியிலும் தலைமைக்கு எதிராக கம்பு சுற்றுகின்றனர் தி.மு.க கவுன்சிலர்கள். நெல்லிக்குப்பம் நகராட்சியின் சேர்மன் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 30 வார்டுகளைக் கொண்ட இந்த நகராட்சியில் தி.மு.க நேரடியாக 13 இடங்களையும், காங்கிரஸ், முஸ்லிம் லீக், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு இடத்தையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டு இடங்களையும் பிடித்தது. இவர்கள் தவிர 7 சுயேட்சைகள் வார்டுகளைக் கைப்பற்றியிருந்தனர். தி.மு.க தரப்பில் ஆர்.ஆர். மெட்ரிக் பள்ளியின் உரிமையாளரும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கௌரவ செயலாளருமான ராதாகிருஷ்ணன் மனைவி ஜெயந்தி ராதாகிருஷ்ணன்தான் சேர்மன் வேட்பாளர் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் கூட்டணி கட்சியான வி.சி.கவுக்கு அந்த சேர்மன் பதவி ஒதுக்கப்பட்டதால் கடும் அதிருப்தியடைந்த ராதாகிருஷ்ணன் தரப்பு, தி.மு.கவின் 13 கவுன்சிலர்கள் மற்றும் 7 சுயேட்சை கவுன்சிலர்களை இரவோடு இரவாக ரகசிய இடத்துக்கு அழைத்து சென்றதாக தகவல் வெளியாகியிருக்கிறது. “சேர்மன் பதவி உங்களுக்குத்தான் என்று அமைச்சர் சி.வெ.கணேசன் வாக்குறுதி கொடுத்ததால்தான் ராதாகிருஷ்ணன் வைட்டமின்களை தண்ணீர் மாதிரி கடன் வாங்கி செலவு செய்தார். கட்சி பணம் கொடுக்காத நிலையில் சேர்மன் வேட்பாளர் என்ற முறையில் மற்ற வேட்பாளர்களின் செலவையும் ராதாகிருஷ்ணன்தான் பார்த்தார்.

அப்படி இருக்கும்போது கூட்டணி கட்சிக்கு ஒதுக்குவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். கடந்த 4 தேர்தல்களிலும் சேர்மன் பதவி தனிப்பிரிவினரிடம் இருந்ததால்தான் இந்தமுறை பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது கூட்டணி என்ற பெயரில் மீண்டும் தனிப்பிரிவினருக்கே ஒதுக்குவது எப்படி சரியாக இருக்கும் ? மக்கள் எப்படி அதனை ஏற்றுக்கொள்வார்கள் ? இதை முன்பே சொல்லியிருந்தால் நாங்கள் ஏன் கந்து வட்டிக்கு கடன் வாங்கி இவ்வளவு செலவு செய்திருக்கப் போகிறோம் ? எங்களை நம்பவைத்து ஏமாற்றிய கட்சி இனி எங்களுக்கு தேவையில்லை. மறைமுகத் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்” என்று கொதிக்கிறது ராதாகிருஷ்ணன் தரப்பு.

தி.மு.க கவுன்சிலர்களின் இந்த ஆடுபுலி ஆட்டத்தால் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர் மாவட்டத்தின் இரண்டு அமைச்சர்களும்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/in-cuddalore-the-councillors-have-abducted-by-dmk-over-municipal-corporation-mayoral-election

நட்சத்திர பலன்கள் - மார்ச் 4 முதல் 10 வரை! #VikatanPhotoCards

அசுவினி
பரணி
கிருத்திகை
ரோகிணி
மிருகசீரிடம்
திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம்
மகம்
பூரம்
உத்திரம்
அஸ்தம்
சித்திரை
சுவாதி
விசாகம்
அனுஷம்
கேட்டை
மூலம்
பூராடம்
உத்திராடம்
திருவோணம்
அவிட்டம்
சதயம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி


source https://www.vikatan.com/spiritual/astrology/astro-predictions-based-on-star-signs-for-the-period-of-march-4th-to-10th

இன்றைய ராசி பலன் | 04/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today's Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam

12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs



source https://www.vikatan.com/spiritual/astrology/04032022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

புதன், 2 மார்ச், 2022

முந்தும் முன்னாள் எம்எல்ஏ... உறவினரை முன்னிறுத்தும் சிட்டிங் எம்எல்ஏ! -பரபரக்கும் ஓசூர் மேயர் ரேஸ்

பழைமையும், பெருமையும் தாங்கிப்பிடிக்கும் வணிக வீதிகளையும் சந்தைகளையும் கொண்ட ஓசூர் மாநகராட்சியின் மேயர் பதவியைக் கைப்பற்றுவதில் தி.மு.க புள்ளிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. சிறப்பு நிலை நகராட்சியாக இருந்த ஓசூர் 2019-ல்தான் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 45 வார்டுகளை உள்ளடக்கி, முதல் முறையாக மாமன்ற தேர்தலைச் சந்தித்த இந்த மாநகராட்சியும் தி.மு.க-வின் வசமாகியிருக்கிறது. தி.மு.க 21 வார்டுகளிலும், அதன் கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சி 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க 16 வார்டுகளிலும், சுயேட்சைகள் 5 வார்டுகளிலும், பா.ஜ.க மற்றும் பா.ம.க தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. பா.ம.க மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களின் ஆதரவும் தி.மு.க-வுக்குக் கிடைத்திருப்பதால், மேயர் நாற்காலியை அந்தக் கட்சியினரே அலங்கரிக்கிறார்கள்.

எஸ்.ஏ.சத்யா

34-வது வார்டில் வெற்றி பெற்ற எஸ்.ஏ.சத்யா மேயர் நாற்காலியை நோக்கி நகர்கிறார். இவர், 2001முதல் 2006 வரை நகர்மன்ற கவுன்சிலர், 2006 முதல் 2011 வரை நகர்மன்ற சேர்மன், 2019-ல் ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் எம்.எல்.ஏ போன்ற பதவிகளை வகித்துள்ளார். தி.மு.க-வில், ஓசூர் மாநகரச் செயலாளராகவும் கட்சிப் பொறுப்பிலிருக்கிறார். எஸ்.ஏ.சத்யாவுக்கு அடுத்தபடியாக, 7-வது வார்டில் வெற்றி பெற்ற ஆனந்தய்யா மேயர் ரேஸில் அடியெடுத்து வைக்கிறார்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும் ஓசூர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான பிரகாஷின் உறவினர்தான் இந்த ஆனந்தய்யா. மேயர் ரேஸில் முந்தும் முன்னாள் எம்.எல்.ஏ-வான எஸ்.ஏ.சத்யாவும், சிட்டிங் எம்.எல்.ஏ பிரகாஷும் இருதுருவ அரசியலை முன்னெடுக்கிறார்கள். கட்சியினர் மத்தியில் இருவரும் நட்புப் பாராட்டினாலும், மறைமுகமாக ஒருவரையொருவர் வீழ்த்துவதிலேயே குறியாக இருக்கிறார்களாம்.

ஓசூர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ பிரகாஷ் ‘தளி’ தொகுதியைச் சேர்ந்தவர். ஆனால், சட்டமன்றத் தேர்தலின்போது, தளி தொகுதியை விட்டுவிட்டு ஓசூர் தொகுதியில் வந்து அவர் போட்டியிட்டதை எஸ்.ஏ.சத்யா விரும்பவில்லை. ஏனெனில், இடைத்தேர்தல் எம்.எல்.ஏ-வாக இருந்த சத்யாவும் சட்டமன்றத் தேர்தலில் மறுபடியும் சீட் கேட்டிருந்தார். அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு தளி பிரகாஷ்தான் காரணம் என வன்மம் கொள்கிறார் அவர். இப்போதும், தனது வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக, மேயர் பதவியை கிடைக்கவிடாமல் செய்கிறாரோ என்றும் எம்.எல்.ஏ பிரகாஷ் மீது கோபம் கொள்கிறார் எஸ்.ஏ.சத்யா.

ஆனந்தய்யா

அதே சமயம், மேயர் ரேஸில் சாதியப் பின்னணியையும் கையிலெடுத்திருக்கிறது ஒருத்தரப்பு. கவுடா சமூகத்தினருக்கே மேயர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற குரலும் ஒலிக்கிறது. சிட்டிங் எம்.எல்.ஏ பிரகாஷின் உறவினரான 7-வது வார்டு கவுன்சிலர் ஆனந்தய்யா கவுடா சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது அவருக்கு ப்ளஸ் என்றாலும் மேயர் இருக்கைக்கு பொருத்தமானவர் இல்லை என்ற குரலும் அதே சமூகத்துக்குள் கேட்கிறது.

இப்படியிருக்க, மேயர் பதவிக்கு எஸ்.ஏ.சத்யாவின் பெயரையே தி.மு.க தலைமை அறிவிக்கப் போகிறது என்ற தகவலையும் பகிர்கிறார்கள் உள்விவரம் அறிந்த நிர்வாகிகள். அதேபோல, துணை மேயர் பதவிக்கான ரேஸிலும் பரபரப்பான பஞ்சாயத்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஓசூர் நகராட்சியின் முன்னாள் துணைத் தலைவரான மாதேஸ்வரன் உள்ளிட்ட சிலர் துணை மேயர் பதவிக்கான நாற்காலியைப் பிடிக்க வட்டமடிக்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/hosur-corporation-mayor-race-who-is-the-first

தேனி: ``அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும்!'’ -ஓபிஎஸ் வீட்டில் அதிமுக-வினர் தீர்மானம்

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 -ம் தேதி நடைபெற்றது. இதில் சிபிஐ, சிபிஐஎம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் திமுக போட்டியிட்டது. அதிமுக தனது கூட்டணி கட்சியான தமமுக உள்ளிட்ட சில கூட்டணி கட்சிகளுடன் மட்டும் சேர்ந்து போட்டியிட்டது. இதேபோல பாஜக, அமமுக, மநீம, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டன.

கூட்டம்

இதில் பெரும்பாலான இடங்களில் திமுக, அதிமுக இடையே நேரடி போட்டி இருந்தது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்றதில் பெரும்பான்மையான இடங்களில் வென்று உள்ளாட்சியை தன் வசமாக்கியது திமுக. மாநகராட்சியில் திமுக 43.59 சதவிகிதமும், அதிமுக 24 சதவிகிதமும் வாக்குகளை பெற்றன. நகராட்சியில் திமுக 43.49 சதவிகிதமும், அதிமுக 26.86 சதவிகிதமும் வாக்குகளை பெற்றன. இதேபோல பேரூராட்சியில் திமுக 41.91 சதவிகிதமும், அதிமுக 25.56 சதவிகிதமும் வாக்குகளை பெற்றன.

ஓபிஎஸ் பண்ணை வீடு

தமிழத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்தது. குறிப்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோரின் சொந்த மாவட்டங்களிலேயே அதிமுக தனது செல்வாக்கை இழந்தது. இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இந்தப் பின்னடைவுக்கு அதிமுக பிளவுபட்டு கிடப்பதே காரணம் எனவும் பரவலாக பேசப்பட்டு வந்தது.

மாவட்ட செயலாளர் சையதுகான்

இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள ஓபிஎஸ்-ன் பண்ணை வீட்டில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேனி மாவட்டத்தில் உள்ள அதிமுக நகர, ஒன்றிய மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

ஓ.பன்னீர்செல்வம்

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினர், சட்டப்பேரவை தேர்தலைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிமுகவின் தோல்விக்கு கட்சி பிளவு தான் காரணம் எனக் கூறப்பட்டது. கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்றால் பிளவுபட்ட அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். சசிகலா மற்றும் டி.டி.விதினகரன் ஆகியோர்களை கட்சியில் சேர்த்து அமமுகவை அதிமுகவுடன் இணைத்தால் மட்டுமே கட்சியை பலப்படுத்த முடியும் என்று ஓ.பி.எஸ்ஸிடம் தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.‌

ஓ.பி.எஸ்

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையதுகான், ''எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜெயா - ஜானகி அணியாக பிரிந்ததால் தான் அதிமுக தோல்வியடைந்தது. அதே போல ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் கட்சி பிளவுபட்டதால் தான் தற்போது தோல்வியைச் சந்தித்து வருகின்றோம்.‌ எனவே அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்பது தேனி மாவட்ட அதிமுகவினரின் விருப்பமாக உள்ளது. இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றைய தினம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கி உள்ளோம்.‌ அதனை பெற்றுக் கொண்ட ஓ.பி.எஸ். விரைவில் நல்ல தகவல் வெளியாகும் எனத் தெரிவித்தார்.

அமமுகவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற தீர்மானம்தேனியில் நிறைவேற்றப்பட்டது போல தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இது தொடரும். மேலும் மார்ச் 5 ஆம் தேதி தேனி மாவட்ட அளவில் உள்ள கட்சி நிர்வாகிகளின் ஒருங்கிணைத்த ஊழியர் கூட்டத்தைக் கூட்டி அமமுகவை அதிமுகவுடன் ஒருங்கிணைப்பது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும்'' என்றார்.



source https://www.vikatan.com/news/politics/sasikala-should-be-included-in-the-admk

``நான் நடிகைனு சொல்லாம அவரைக் காதலிச்சேன்; உண்மை தெரிஞ்சதும்..!" - Actress Ranjini Personals



source https://cinema.vikatan.com/celebrity/evergreen-actress-ranjini-s-untold-story

5 Minutes-ல அழகாக புடவை கட்டலாம்! | Simple Saree Draping Tips For Beginners | Step by Step Tutorial



source https://www.vikatan.com/lifestyle/fashion/how-to-drape-saree-easily-in-5-minutes