முத்தூட் ஃபைனான்ஸ், சுகாதார பாதுகாப்பில் புத்தாக்கம் மற்றும் கார்ப்பரேட் தலைமைத்துவம் -க்கான CSR எக்ஸலன்ஸ் விருதை திரு. ஏக்நாத் ஷிண்டே அவர்களிடமிருந்து பெற்றது
-
ஆகஸ்ட் 2022 இல் கொச்சியில் உள்ள பெண்களுக்கு 1 இலட்சத்து ஒன்று மாதவிடாய் கப்களை வழங்கிய அவர்களின் முதன்மை CSR திட்டமான ‘கப் ஆஃப் லைஃப்’ திட்டத்திற்காக, இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
-
இந்த கப் ஆஃப் லைஃப் பிரச்சாரமானது, தற்போது கொச்சியில் இந்த மாதவிடாய் கப்களை, வெறும் 24 மணி நேரத்திற்குள் இலவசமாக வழங்கியதற்காக கின்னஸ் உலக சாதனையைப் பிடித்துள்ளது.
-
இந்தியாவின் மிகப்பெரிய தங்கக் கடன் NBFC ஆன முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட், ஆகஸ்ட் 2022இல் கேரளாவின் கொச்சியில் தொடங்கப்பட்ட அவர்களின் CSR முன்முயற்சியான 'கப் ஆஃப் லைஃப்' திட்டத்திற்காக, புத்தாக்கம் மற்றும் கார்ப்பரேட் தலைமைத்துவம் -இன் கீழ், சுகாதார பாதுக்காப்பு பிரிவில் 2022 ஆம் ஆண்டுக்கான, விரும்பப்படும் CSR எக்ஸலன்ஸ் விருதைப் பெற்றுள்ளது. நிறுவனத்தின் சார்பில், முத்தூட் ஃபைனான்ஸ் இன் துணை நிர்வாக இயக்குனர் திரு. ஜார்ஜ் எம் ஜார்ஜ், மும்பை BKC இல் உள்ள தேசிய பங்குச் சந்தையில் (NSE) நடைபெற்ற CSR ஜர்னல் எக்ஸலன்ஸ் அவார்ட்ஸ் 2022 இன் 5வது பதிப்பு விழாவில், மகாராஷ்டிராவின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஏக்நாத் ஷிண்டே அவர்களிடமிருந்து இந்த விருதை பெற்றார்.
கப் ஆஃப் லைஃப் பிரச்சாரமானது, அடிமட்ட நிலையில் மாதவிடாய் ஆரோக்கியத்தின் புறக்கணிப்பு பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டது. இந்த பிரச்சாரத்தின் மூலம், முத்தூட் ஃபைனான்ஸ், கொச்சியில் உள்ள பெண்களுக்கு வெறும் 24 மணி நேரத்திற்குள் 1 இலட்சத்து ஒன்று மாதவிடாய் கப்களை இலவசமாக வெற்றிகரமாக வழங்க முடிந்தது.
நிகழ்வில் பங்கேற்றவர்களிடம் உரையாற்றிய மகாராஷ்டிரா அரசின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஏக்நாத் ஷிண்டே பேசுகையில், “எந்தவிதமான சமூகப் பணியையும் இதயபூர்வமாக செய்ய
வேண்டும். உதவி மற்றும் ஆதரவு தேவைப்படும் நபர்களை அடையாளம் காண்பது பெரிய விஷயமாக இருக்கிறது. இன்று இங்கு இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், மிகவும் தேவைப்படுபவர்களுக்கு உங்கள் உதவி மற்றும் ஆதரவை வழங்குவதன் மூலம் நீங்கள் அனைவரும் சிறந்த பணியைச் செய்கிறீர்கள். அவர்களின் வலியை நீங்கள் உணர்ந்தால் மட்டுமே அதை பகிர்ந்து கொள்ள முடியும். உங்கள் அற்புதமான சமூகப் பணிக்காக வெற்றி பெற்ற அனைவருக்கும் இந்த மாலை வேளையில் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பது நடுவர் மன்ற உறுப்பினர்களுக்கும் மிகப்பெரிய பொறுப்பாக இருக்கிறது. இந்த விருதை பெற்றவர்களுக்கு, அவர்களின் பொறுப்பு அதிகரித்துள்ளது, ஏனென்றால் நீங்கள் இப்போது பலரை முன்னோக்கி வந்து நல்ல பணிகளைச் செய்ய ஊக்குவிப்பீர்கள், இது இறுதியில் சமூகத்திற்கு நன்மை பயக்கும். மற்றவர்களுக்கு உதவுவதை விட பெரிய மதம் எதுவும் இல்லை.
இந்நிகழ்வில் பேசுகையில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் திரு. ஜார்ஜ் எம் ஜார்ஜ் , “எங்கள் ‘கப் ஆஃப் லைஃப்’ முயற்சியை வெற்றிகரமாக முடித்ததற்காக முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் நாங்கள், CSR எக்ஸலன்ஸ் விருதைப் பெறுவதில் பெருமை கொள்கிறோம். மாதவிடாய் தொடர்பான புறக்கணிப்புகளை உடைத்து, மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் தூய்மை குறித்து சமூகத்திற்கு கல்வி கற்பிப்பதே இந்த பிரச்சாரத்தின் நோக்கமாகும். மேலும், மாதவிடாய் தொடர்பான உரையாடலை மேலும் இயல்பாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த அங்கீகாரமானது, எங்களின் முயற்சிகளும் பார்வையும் சரியான திசையில் இருந்ததை மீண்டும் ஒருமுறை எங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளது. இது சமூகத்தில் உள்ள முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், தேசத்தின் நலனுக்காகப் பணியாற்றுவதற்கும் எங்களை மேலும் ஊக்குவிக்கும்."என்று கூறினார்.
முத்தூட் ஃபைனான்ஸ் பற்றி
முத்தூட் ஃபைனான்ஸ் என்பது 20 பல்வகை வணிகப் பிரிவுகளைக் கொண்ட முத்தூட் குழுமத்தின் முதன்மை நிறுவனமாகும். 5000 க்கும் மேற்பட்ட கிளைகளுடன், இந்த குழுமம் ஒவ்வொரு நாளும் 2.5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது. முத்தூட் ஃபைனான்ஸ் ஆனது, பிராண்ட் டிரஸ்டேட் ரிப்போர்ட் -இன்படி இந்தியாவின்
மிகப்பெரிய தங்கக் கடன் NBFC மற்றும் இந்தியாவின் நம்பர்.1 மிகவும் நம்பகமான நிதிச் சேவை பிராண்ட் ஆக இருக்கிறது. இது ஒரு பிரபலமான ‘முறைமையாக முக்கியமான டெபாசிட் எடுக்காத NBFC’ ஆகும். முக்கிய வணிகத்தின் ஒரு பகுதியாக, முத்தூட் ஃபைனான்ஸ் வீட்டுத் தங்க நகைகளுக்கு எதிரான கடன்களை மிகவும் மலிவு விகிதத்திலும் அற்புதமான திட்ட அம்சங்களிலும் வழங்குகிறது. உலகளாவிய ரீதியில், இந்த குழுமமானது, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கோஸ்டாரிகா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் உள்ளது. மேலும் விவரங்களுக்கு www.muthootfinance.com ஐப் பார்வையிடவும்.
source https://www.vikatan.com/business/muthoot-finance-wins-csr-excellence-award-for-innovation-and-corporate-leadership-in-healthcare
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக