Ad

ஞாயிறு, 6 மார்ச், 2022

"வெளிப்படைத்தன்மை நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும்"- விவியன் ரிச்சர்ட்ஸ் வாழ்க்கை சொல்லும் 5 பாடங்கள்!

பிரச்னைகள் தடைகளாக வேண்டியதில்லை

1984-ல் அவருக்கு கண்களில் ஒரு பிரச்னை ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவர் பார்வை சிறிது பாதிக்கப்பட்டது. இமைகளைச் சற்று அழுத்தமாக ​மூடித் திறக்க வேண்டிய நிலை உண்டானது. இந்த நிலையிலும் அதற்கு அடுத்த நான்கு வருடங்களுக்கு அவர்தான் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கினார்.

விவியன் ரிச்சர்ட்ஸ்

அழுத்தமான ஆர்வம் எதற்கும் தயாராக வைக்கும்

விவியன் ரிச்சர்ட்ஸ் போட்டிகளில் பங்கு பெறும்போது பாதுகாப்பு கவசம், ஹெல்மெட் போன்றவற்றை அணிவதில்லை. இதுபற்றி ஒரு பேட்டியில் முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் இவரைக் கேட்டபோது, "கிரிக்கெட்டின் மீது நான் கொண்டிருக்கும் ஆர்வம் அவ்வளவு ஆழமானது. ஆடும்போது நான் இறந்தால் கூடப் பரவாயில்லை" என்று உணர்ச்சி பொங்கக் கூறினார் விவியன் ரிச்சர்ட்ஸ்.

நேர்மையான நடத்தை சுற்றியுள்ளவர்களின் ஆதரவைப் பெற்றுத் தரும்

பள்ளியில் படித்த பிறகு தனது பதினெட்டாவது வயதில் மதுக்கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார் விவியன் ரிச்சர்ட்ஸ். அதன் உரிமையாளரான ஆர்சி வில்லியம்ஸ் என்பவருக்கு ரிச்சர்ட்ஸின் அதீத கிரிக்கெட் ஆர்வம் நன்கு தெரியும். என்றாலும் போட்டிகள் நடக்கும் போதும் ஒளிபரப்பப்படும் போதும் தனது பணி தொடர்பான எந்தக் கடமையையும் விவியன் ரிச்சர்ட்ஸ் தவறவிட்டதில்லை. இதன் காரணமாக பின்னர் செயின்ட் ஜான் கிரிக்கெட் கிளப்பில் விவியன் ரிச்சர்ட்ஸ் சேர்ந்தபோது அவருக்கு கிரிக்கெட் உடையிலிருந்து கையுறைகள் வரை அத்தனை பொருள்களையும் மகிழ்வுடன் வாங்கிக் கொடுத்தார் வில்லியம்ஸ்.

கொள்கைகள் பணத்தைவிட முக்கியம்

இனவெறி காரணமாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு தடை விதித்திருந்தது சர்வதேச கிரிக்கெட் குழு. எனவே அந்த நாட்டிலுள்ள மேற்கிந்திய வீரர்கள் தனியாக ஒரு குழுவை அமைத்து போட்டியிட முடிவெடுத்தனர். 1983 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் அந்தக் குழுவில் கலந்துகொள்ள விவியன் ரிச்சர்ட்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கான தொகையாக அவருக்குக் கையெழுத்திட்ட காசோலை அளிக்கப்பட்டது. அதாவது தனக்கு விருப்பப்பட்ட தொகையை விவியன் ரிச்சர்ட்ஸ் அதில் நிரப்பி எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சிறிதும் தயக்கமின்றி அதை மறுத்தார் ரிச்சர்ட்ஸ்.

வெளிப்படைத்தன்மை நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும்

ஏற்கெனவே திருமணமாகி இருந்த போதிலும் இந்தி நடிகையான நீனா குப்தாவுடன் சிறிது காலம் ரிலேசன்ஷிப்பில் இருந்தார். நீனா தொடக்கத்தில் தயங்கியபோதும் இந்த உறவைத் தொடக்கத்திலேயே பிறரிடம் ஒப்புக்கொண்ட விவியன் ரிச்சர்ட்ஸ் தங்கள் மகளான மசாபாவையும் பகிரங்கமாக அங்கீகரித்தார். இதன் காரணமாக அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இன்னமும்கூட வருடத்துக்கு ஒருமுறை தன் மகளுடன் சிறிது காலம் கழித்து வருகிறார் விவியன் ரிச்சர்ட்ஸ்.



source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/five-life-lessons-to-learn-from-the-life-of-viviyan-richards

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக