Ad

வியாழன், 15 ஏப்ரல், 2021

போடிநாயக்கனூர்: `அந்த 300 வாக்குகள்? ; மறு வாக்குப்பதிவு வேண்டும்!’ - விளக்கும் தங்க தமிழ்ச்செல்வன்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், தி.மு.க சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிட்டனர். பிரசாரம் முதல் வாக்குப்பதிவு வரை, தேர்தல் களம் பரபரப்பாகவே காட்சியளித்தது. இந்நிலையில், வரும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நேற்று (15.04.2021) தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணியைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றினைக் கொடுத்தார் தங்க தமிழ்ச்செல்வன். உடன், பெரியகுளம் தி.மு.க வேட்பாளர் சரவணக்குமார் மற்றும் கட்சியினர் இருந்தனர்.

ஓ.பி.எஸ் - தங்க தமிழ்ச்செல்வன்

Also Read: ஓ.பி.எஸ் ப்ளானுக்கு வெடிவைக்கும் தங்க தமிழ்ச்செல்வன் ! - போடிநாயக்கனூர் கள நிலவரம்

தங்க தமிழ்ச்செல்வன், தேனி மாவட்டக் கலெக்டரை சந்தித்த பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, “வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில், மின்சாரம் துண்டிக்கப்பட்டு, யூபிஎஸ் பேட்டரியும் வேலை செய்யாமல், சி.சி.டி.வி கேமரா 13 நிமிடங்கள் வேலைசெய்யவில்லை. என்ன காரணம் என கலெக்டரிடம் கேட்டேன். எலெக்ட்ரிக் ஷாக் ஆனதால் தவறு ஏற்பட்டது. இனி இதுபோல நடக்காது என கூறினார். நான் அதை ஏற்றுக்கொண்டேன். கல்லூரி மாணவர் சேர்க்கை நடப்பதால், பலரும் கல்லூரிக்குள் வருகிறார்கள். அவர்களை முறைப்படுத்தி, ஸ்ட்ராங் ரூம் பக்கம் செல்லாமல் தடுக்க எதுவும் செய்யவில்லை. அதே போல, கல்லூரி பின்பக்கம் பென்சிங் சரியாக இல்லை. அங்கே லைட் இல்லை. இவற்றை கலெக்டரிடம் சொன்னேன். சரி செய்து தருகிறேன் என்று சொன்னார்.

தங்க தமிழ்ச்செல்வன்

Also Read: ’அமைதிப்படை’ ஓ.பி.எஸ்! ’தகரம்’ தங்க தமிழ்ச்செல்வன்!’ - போடி பிரசாரத்தில் டி.டி.வி தினகரன்

எல்லாவற்றிற்கும் மேலாக, தேர்தல் ஆணையத்தால், எந்தெந்த வாக்குச் சாவடியில், எவ்வளவு வாக்குகள் பதிவாகியிருக்கிறது என எங்களுக்கு 17C பட்டியல் கொடுக்கப்படும். அந்த படிவத்தையும், கலெக்டர் அலுவலகத்தில் நாங்கள் பெற்ற இறுதி வாக்குப்பதிவு பட்டியலையும் சரிபார்த்தோம். போடி தொகுதிக்கு உட்பட்ட பூத் நம்பர் 17 A, 197, 280 ஆகிய மூன்று பூத்தில் பதிவான வாக்குகளுக்கும், எங்களுக்கு கொடுக்கப்பட்ட 17C பட்டியலில் உள்ள வாக்குகளுக்கும் வித்யாசம் உள்ளது. மொத்தமாக 300 ஓட்டு வித்தியாசம் ஏற்படுகிறது. இதை கலெக்டரிடம் கேட்டேன். தாமதமாக கணக்கிட்டதில் தவறு ஏற்பட்டிருக்கும். அதை சரி செய்து உங்களுக்குச் சொல்கிறேன் என்றார். தவறு இருக்கும் பட்சத்தில், மூன்று பூத்திற்கும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/re-poll-should-be-held-in-bodinayakkanur-thanga-tamilselvan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக