Ad

திங்கள், 27 நவம்பர், 2023

சென்னை மாநகராட்சி: உயிரிழந்த கவுன்சிலர்கள்; பரிதவிக்கும் மக்கள்! - தேர்தலை தட்டிக்கழிப்பது யார்?!

சென்னை மாநகராட்சியில் முதல்வர் வீடிருக்கும் ஏரியா உட்பட நான்கு வார்டுகளில் கவுன்சிலர் பதவிகள் காலியாக இருப்பதால், சம்பந்தப்பட்ட வார்டு மக்கள் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அல்லாடுவதாக நமது அலுவலகத்துக்குப் புகார்க் கடிதம் ஒன்று வந்தது. அதையடுத்து சென்னை மாநகராட்சி, மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்புகளில் விசாரணை மேற்கொண்டோம்.

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில், தி.மு.க 153 இடங்களிலும், அ.தி.மு.க 15 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும், சி.பி.எம்., வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் தலா 4 இடங்களிலும், மற்ற இடங்களில் இதர கட்சிகளும் வெற்றிபெற்றிருந்தன. இந்த நிலையில், கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 165-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் வி.ஈஸ்வரபிரசாத்தும், 2023 பிப்ரவரி மாதம் 122-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் ஷீபா வாசுவும் உடல்நலக் குறைவால் காலமானார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் 146-வது வார்டு தி.மு.க கவுன்சிலரான ஆலப்பாக்கம் சண்முகமும், செப்டம்பரில் 59-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சரஸ்வதியும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தனர்.

இந்தச் சூழலில் காலியாக இருக்கும் நான்கு வார்டுகளுக்கும் மாநகராட்சி மாமன்றச் செயலாளர் சார்பில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டு, இடைத்தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேதி குறித்து மாநில தேர்தல் ஆணையம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடாததால், புதிய கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால், சம்பந்தப்பட்ட வார்டுகளைச் சேர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறாமல் தவித்துவருகின்றனர். கவுன்சிலர்கள் இல்லாத வார்டுகளின் நிலையை அறிய நேரடிக் கள ஆய்வில் இறங்கினோம்.

59-வது வார்டு, சத்தியவாணிமுத்து நகர், அசுத்தமான நிலையில் மூடப்பட்டு கிடக்கும் உடற்பயிற்சிக் கூடம்

அகற்றப்படாத குப்பைகள்...அதிகரித்த கொசுத் தொல்லை!

ராயபுரம் (5-வது) மண்டலத்துக்குட்பட்ட 59-வது வார்டு பகுதியில், பல்லவன் சாலைக்கு அருகிலிருக்கும் சத்தியவாணிமுத்து நகருக்குச் சென்றோம். அங்கு, குப்பைகள் சரிவர அகற்றப்படாமலும், சாலைகளில் சாக்கடைக் கழிவுநீர் தேங்கியும் அசுத்தமாகக் காட்சியளித்தன. அந்தப் பகுதி மக்களிடையே பேசும்போது, ``கவுன்சிலர் இல்லாத எங்கள் பகுதியை யாருமே கண்டுகொள்வதில்லை. எங்கே பார்த்தாலும் அள்ளப்படாத குப்பைகள்தான் காணப்படு கின்றன. மழைக்காலத்தில் சாக்கடையும் அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்கி, சாலைகளில் ஓடுகிறது. மருந்து தெளிக்கப்படாததால் கொசுத் தொல்லையும் அதிகரித்துவிட்டது. மாநகராட்சி உடற்பயிற்சிக் கூடமும், கேரம் போர்டு அலுவலகமும் பராமரிப்பின்றி பல மாதங்களாகப் பூட்டிக் கிடக்கிறது” என்றனர்.

59-வது வார்டு, எல்லீஸ் ரோடு, அண்ணாசாமி தெருவில் பொங்கிவழியும் கழிவுநீர் கால்வாய்

அதேபோல, 59-வது வார்டுக்குட்பட்ட பார்க் டவுன், மின்ட் ஸ்ட்ரீட், ஏகாம்பரேஸ்வரர் கோயில் அக்ரஹாரம் எனப் பல பகுதிகளிலும் குப்பைகள் அள்ளப்படாமலும், மழைநீர் தேங்கியும் மோசமான நிலையில் இருந்தன. மறைந்த கவுன்சிலரின் வீடு அமைந்திருக்கும் திருவல்லிக்கேணியை ஒட்டிய எல்லீஸ் சாலைப் பகுதியில் மழைநீர் தேங்கியிருப்பதோடு, தேவி தியேட்டர் பின்புறமுள்ள அண்ணாசாமி தெருவில் பாதாளச் சாக்கடைக்குள்ளிருந்து கழிவுநீர் வெளியேறி, பல நாள்களாக அந்தப் பகுதியே சாக்கடைக் குளமாகக் காட்சியளிக்கிறது.

“முதலமைச்சர் ஏரியாவிலேயே கவுன்சிலர் இல்லை!”

தேனாம்பேட்டை (9-வது) மண்டலத்துக்கு உட்பட்ட 122-வது வார்டுக்குச் சென்றோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு அமைந்திருக்கும் இந்த வார்டில் கடந்த 10 மாதங்களாக கவுன்சிலர் இல்லாத அவலநிலை நீடிக்கிறது. முதல்வரின் வீட்டைச் சுற்றியிருக்கும் பகுதிகளைத் தவிர வார்டின் மற்ற பகுதிகளின் நிலையும் மோசம்தான். குறிப்பாக, ஆஸ்டின் நகர் முதல் தெருவைச் சேர்ந்த மக்கள் குடிநீரில் கொசுப்புழுக்களும் கலந்துவருவதாக வேதனை தெரிவித்தனர். அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்க ளெல்லாம் பழுந்தடைந்து கிடப்பதால் திருட்டு குறித்த அச்சம் பரவியிருக்கிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் மூன்று இரு சக்கர வாகனங்கள் திருட்டுப்போயிருப்பதாக அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

122-வது வார்டு, சேமியர்ஸ் சாலை, முதல்வர் பகுதி வார்டின் நிலை..

கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் பேசும்போது, ``மழை பெய்தால்போதும், எஸ்.எம்.நகர், அப்போலோ மருத்துவமனைப் பகுதிகளிலிருந்து மொத்த மழைநீரும் எங்கள் குடியிருப்புப் பகுதிக்குள்தான் வந்துவிடும். இதனால் குடிநீரில் கழிவுநீர் கலந்து நாற்றம் அடிக்கிறது” என்றனர் வேதனையுடன். அதேபோல, கணேசபுரம் 3-வது தெருவில் மாநகராட்சி பொதுக்கழிப்பிடம் மக்கள் பயன்பாட்டுக்கு உதவாமல், பல மாதங்களாக பூட்டிக்கிடப்பதாகத் தெரிவித்தனர். இந்த வார்டிலேயே மிகவும் மோசமாகக் காட்சியளிப்பது சேமியர்ஸ் சாலை ஏரியாதான். பாதாளச் சாக்கடையிலிருந்து கழிவுநீர் பொங்கி வழிந்து அந்தப் பகுதிக்கே நோய் பரப்பிக்கொண்டிருக்கிறது. ``குழந்தைகளை வைத்துக்கொண்டு இந்தச் சாக்கடை நாற்றத்துக்குள் குடியிருக்கிறோம். பல தடவை முறையிட்டபோதும் மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்கிறார்கள் வார்டு மக்கள்.

122-வது வார்டு, கணேசபுரம், பூட்டியே கிடக்கும் இலவசப் பொதுகழிப்பிடம்

தோண்டப்பட்ட சாலைகள்... இடிந்துவிழும் நிலையில் பாலம்... ஆபத்தான நிலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்!

ஓராண்டாக கவுன்சிலர் இல்லாத ஆலந்தூர் (மண்டலம்-12) மண்டலத்துக்குட்பட்ட 165-வது வார்டை வட்டமடித்தோம். பாரத் நகர், தாமிரபரணி தெரு, நிலமங்கை நகர், பாரதிதாசன் தெரு, திருவள்ளுவர் தெரு, கோவிந்தராஜு தெரு, கேசரி நகர் எனப் பெரும்பாலான பகுதிகளிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட எந்தச் சாலையும், பணிகள் முடிந்த பிறகும் சீரமைக்கப் படாததால் சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கின்றன. `கடந்த மார்ச் மாதம் கால்வாய் பணிக்காக இந்த ரோட்டை யெல்லாம் தோண்டிப்போட்டாங்க, ஆனால், இன்னமும் சரி பண்ணலை...’ என வேதனை தெரிவிக்கிறார்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள்.

165-வது வார்டு, ஆபத்தான வானுவம்பேட்டை சிதம்பரனார் தெரு பாலம்,

வானுவம்பேட்டை சிதம்பரனார் தெருவில் இருக்கும் கால்வாய் பாலம் எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் தருவாயில், தடுப்புச்சுவர்களின்றி, கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. அதே பாலத்தில் வரிசையாகக் குப்பைத்தொட்டிகளும் வைக்கப்பட்டிருக் கின்றன. இன்றுவரை அது சரிசெய்யப்படாததால் பள்ளிக் குழந்தைகளும் ஆபத்தான முறையில் அந்தப் பாலத்தைக் கடந்துசெல்கிறார்கள்.

165-வது வார்டுக்குட்பட்ட ராம்நகர், நங்கநல்லூர் பகுதிகளில் சாலைகளில் திரியும் மாடுகள்

இவை தவிர, 165-வது வார்டுக்குட்பட்ட ராம்நகர், நங்கநல்லூர் பகுதிகளில் சாலைகளில் திரியும் மாடுகளால் நாள்தோறும் விபத்துகள் ஏற்படுகின்றன. வளசரவாக்கம் (11-வது) மண்டலத்துக்குட்பட்ட 146-வது வார்டுக்குச் சென்றோம். அங்கும் மற்ற வார்டுகளைப்போலவே குப்பை பிரச்னை, கொசுத் தொல்லை, மோசமான சாலைகள் எனப் பல்வேறு பிரச்னைகள் சரிசெய்யப் படாமலிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக நான்கு வார்டுகளைச் சேர்ந்த மக்களும் நம்மிடம் வைத்த கோரிக்கை, ``வார்டுகளின் பிரச்னைகளை மாநகராட்சி மாமன்றத்தில் கோரிக்கையாக எழுப்பி, குறைகளைத் தீர்க்க புதிய கவுன்சிலர்கள் தேர்வுசெய்யப்பட வேண்டும். இதற்கு மேலும் தட்டிக்கழிக்காமல், சென்னை மாநகராட்சி நிர்வாகம் உடனே இடைத்தேர்தலை நடத்த வேண்டும்” என்பதுதான்.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்-ஸைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர், ``சம்பந்தப் பட்ட நான்கு வார்டுகளிலுள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நான்கு வார்டு கவுன்சிலர்களின் மரணத்தையடுத்து காலியான பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்தும் மாநகராட்சி மாமன்றச் செயலாளர் சார்பில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறோம். இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு, தேதி குறித்து மாநில தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்கும். அதிகாரபூர்வமாகத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வெளியாகும்போது, இடைத்தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் சென்னை மாநகராட்சி வழங்கும்” எனத் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி கமிஷனர், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

`சென்னை மாநகராட்சிக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும் காலியாக இருக்கும் கவுன்சிலர் பதவியிடங்களுக்கு ஒட்டுமொத்தமாக இடைத்தேர்தல் நடத்த, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்தத் தாமதம் ஏற்படுகிறது. விரைவில் இடைத்தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகும்’ என்கிறது தேர்தல் ஆணைய வட்டாரம்.

மக்களவைத் தேர்தலுக்கு ஆர்வம் காட்டும் ஆளுங்கட்சி, உள்ளாட்சி இடைத்தேர்தலையும் உடனே நடத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/government-and-politics/politics/chennai-corporation-4-councilors-died-ward-people-suffered-why-not-by-election

ஞாயிறு, 26 நவம்பர், 2023

Suryakumar Yadav: `சூர்யாவை ட்ரோல் செய்வதில் நியாயமில்லை!' - ஏன் தெரியுமா?

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி முடிந்த சூடு குறைவதற்குள்ளாகவே அடுத்ததாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடத் தொடங்கிவிட்டது இந்தியா. முதல் போட்டியில் அதிரடியாக கடைசிப் பந்து வரை சென்று திரில்லாகவும் வென்றிருக்கிறது. ஆனால் இந்த வெற்றியால் ரசிகர்கள் முழுமையான மகிழ்ச்சியில் இல்லை. காரணம், இந்தியாவின் உலகக்கோப்பை தோல்வி. குறிப்பாக, சூர்யகுமார் யாதவ் மீது கடுமையான அதிருப்தியில் இருக்கின்றனர்.

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் அடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் ஒன்றுமே செய்யாமல் விட்டுவிட்டு இப்போது ஒரு சாதாரண டி20 போட்டியில் வந்து வாள் வீசிக் கொண்டிருக்கிறார் என்பதே காரணம்.
Suryakumar Yadav

ரவிசாஸ்திரி: இப்படி ஒரு ஃபார்மில் இருக்கக்கூடிய சூர்யாவை எப்படி ஆட்டமிழக்கச் செய்ய முடியும்?

மேத்யூ ஹேடன்: இது ஓடிஐ உலகக்கோப்பை எனச் சொல்லுங்கள், அதுபோதும்.

வர்ணனையில் இருவரும் இப்படிப் பேசிக்கொண்டதாக மீம்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. அடுத்த ஒரு வாரத்திற்கான கன்டன்ட் என்ன எனத் தேடிக் கொண்டிருந்த இணையதளவாசிகளுக்கு இரையாகியிருக்கிறார் சூர்யா. அவர் என்னதான் சிறப்பாகச் செயல்பட்டாலுமே உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அவர் செய்யத் தவறிய சம்பவத்தை வைத்தே அவரை இனி ட்ரோல் செய்யப்போகின்றனர். ஆனால், இதில் நியாயமே இல்லை என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.

ரசிகர்கள் சில வீரர்களைப் புரிந்துகொண்டு உட்கிரகித்துக் கொள்ளும் விஷயத்திலேயே சில சமயங்களில் தடுமாறிவிடுகிறார்கள். அசோக் டிண்டா ஒயிட் பால் கிரிக்கெட்டில் அதிக ரன்களை கொடுக்கிறார் என்பதற்காக அவரைக் கடுமையாக ட்ரோல் செய்வார்கள். இப்போது வரைக்கும் எந்த பௌலர் அதிகமாக ரன்களைக் கொடுத்தாலும் அவரை 'டிண்டா அகாடமி வீரர்' எனச் சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், அதே அசோக் டிண்டா மேற்கு வங்கத்திற்காக உள்ளூர் போட்டிகளில் துல்லியமாகப் பந்துவீசி மிரட்டியிருக்கிறார்.

அஷோக் டிண்டா

ரஞ்சி கிரிக்கெட்டின் ரெக்கார்டுகளை புரட்டிப் பார்த்தால் பல ஆண்டுகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் டிண்டாவின் பெயர் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். ஆனால், நம்மவர்கள் அவரை வெறுமென ஒயிட் பால் கிரிக்கெட்டராக சில போட்டிகளை மட்டுமே பார்த்து தீர்ப்பெழுதிவிட்டார்கள். அதே டிண்டாவிற்கு முறையாக ரெட் பாலிலும் கவனம் குவியும் வகையிலான வாய்ப்புகள் கிடைத்திருந்தால் அசத்தியிருப்பார். ஆனால், அது அவருக்கு கடைசி வரை கிடைக்கவே இல்லை.

அதேமாதிரி, வாய்ப்புகள் கிடைத்தும் குறிப்பிட்ட ஃபார்மேட்களில் சிறப்பாகச் செயல்பட முடியாமல் சொதப்பிய வீரர்களும் இருக்கிறார்கள். மிகப்பெரிய உதாரணம் யுவராஜ் சிங். டி20 உலகக்கோப்பையையும் ஓடிஐ உலகக்கோப்பையையும் இந்தியா வென்றதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங்தான். அவர்தான் அந்த உலகக்கோப்பைகளின் ஹீரோ. ஆனால், ஒயிட் பால் கிரிக்கெட்டில் சாதித்த யுவராஜால் ரெட் பால் கிரிக்கெட்டில் எதையும் பெரிதாக செய்ய முடியவில்லை. அதற்கான காரணம் புதிர்தான்.

எல்லா வீரர்களும் எல்லா ஃபார்மேட்டிலும் கில்லியாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதே ஞாயமில்லை. சூர்யகுமார் யாதவும் ஒரு யுவராஜைப் போலத்தான். யுவராஜுக்கு எப்படி ரெட் பால் செட் ஆகவில்லையோ அதேமாதிரி சூர்யாவுக்கு லாங் ஃபார்மேட் கிரிக்கெட் செட் ஆகவில்லை. உலகக்கோப்பையிலுமே இந்திய அணி அவரை முதன்மை ஆப்ஷனாக பார்க்கவே இல்லை. ஓடிஐக்களில் தன்னால் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதை சூர்யாவும் உணர்ந்திருந்தார். சூர்யா முழுமையான வீரர் இல்லை என்பதை ரோஹித்தும் டிராவிட்டும் கூட அறிந்திருந்தனர். ஏன், சில சமயங்களில் வெளிப்படையாகவே சூர்யாவின் ஃபார்ம் குறித்து கவலையும் தெரிவித்திருந்தனர்.

Suryakumar Yadav
உலகக்கோப்பையில் வேறு வழியே இல்லாமல்தான் சூர்யாவை லெவனில் எடுத்தனர். காரணம், ஹர்திக்கின் காயம். ஹர்திக் கொடுக்கும் அந்த பேட்டிங் பங்களிப்பை நிரப்ப வேறு ஆப்ஷன் இல்லை. அதனால் மட்டுமே சூர்யாவை எடுத்திருந்தனர்.

ஆக, சூர்யா ஓடிஐக்கான வீரர் இல்லை என்பதையும் அவரின் ஓடிஐ செயல்பாட்டை வைத்து டி20 செயல்பாட்டை குறைத்து மதிப்பிடுவதும் நியாயம் இல்லை என்பதையும் உணர வேண்டும். இன்னும் 6-7 மாதங்களில் அடுத்த டி20 உலகக்கோப்பை தொடங்கவிருக்கிறது. 2007க்குப் பிறகு இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்லவே இல்லை. அதுவும் இந்தியாவிற்கு முக்கியமான தொடர்தான். அதில், சூர்யா இந்தியா அணிக்கு முக்கியமான வீரராக இருப்பார். டி20க்களில் அவரின் ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள். 80% போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டிருப்பார். நேற்று கூட 200+ சேஸிங்கில் 190 ஸ்ட்ரைக் ரேட்டில் 80 ரன்களை அடித்து ஆட்டத்தை இந்தியா பக்கமாகத் திருப்பியிருப்பார்.

ஓடிஐ க்களை வைத்து டி20க்களில் அவரை விமர்சிக்காமல் இந்த ஃபார்மேட்டுக்கான நியாயமான விமர்சனங்கள் ஏதேனும் இருந்தால் வேண்டுமானால் அதை முன் வைக்கலாம். நல்ல அதிரடியாக ஆடும் சூர்யா கடைசி வரை நின்று எந்தப் போட்டியையும் முடித்துக் கொடுக்கமாட்டார். நேற்றும் இதுதான் நடந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் பெயரெடுக்க தொடங்கிய காலத்திலிருந்தே இதுதான் நடக்கிறது. இது சூர்யா கட்டாயம் திருத்திக் கொள்ள வேண்டிய விஷயம்.
Suryakumar Yadav

இவற்றையெல்லாம் தாண்டி, கடந்த காலத்தில் செய்த தவறுகளை மட்டுமே வைத்து நிகழ்காலத்தில் ஒருவனின் காலைப் பிடித்து கீழே இழுப்பதைப் போல ட்ரோல் செய்வதில் எந்த நன்மையும் விளையப்போவதில்லை என்பதையும் உணர வேண்டும்.

ஆல் தி பெஸ்ட் சூர்யா!



source https://sports.vikatan.com/cricket/why-we-shouldnt-troll-suryakumar-yadav-based-on-his-odi-performance

Doctor Vikatan: ஆரோக்கியமான கர்ப்பம்... ஆண்களின் வயதும் கவனிக்கப்பட வேண்டுமா?

Doctor Vikatan: கருத்தரிப்பதில் பெண்ணின் வயது முக்கியம் என பலமுறை வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த விதி பெண்களுக்கு மட்டும்தானா.... ஆண்கள் எந்த வயதில் திருமணம் செய்துகொண்டாலும், குழந்தைபெற , குறிப்பாக ஆரோக்கியமான குழந்தை பெற தகுதியானவர்களாக இருப்பார்களா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை.

ஒரு குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க, தாயின் வயது மட்டுமே முக்கியம் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கும் இருக்கிறது. உண்மையில், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பதில் பெண்ணின் வயது எந்த அளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஆணின் வயதும் முக்கியமே.

இந்தக் காலத்தில் ஆண்கள், பெண்கள் இருவருமே வேலை, பொருளாதார ரீதியான நிறைவு, வாழ்க்கையில் செட்டிலாவது  என பல காரணங்களுக்காக திருமணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள். அதன் விளைவாக குழந்தைப்பேறும் தள்ளிப்போகிறது. பெண்களுக்கு வயதாக, ஆக கருமுட்டைகளின் இருப்பு எப்படி குறைந்துகொண்டே வருமோ, ஆண்களுக்கும் சில விஷயங்களில் பிரச்னை ஏற்படும்.

குழந்தை

அதாவது, வயதாக ஆக, உயிரணுக்களின் தரம் குறையும். விந்தணுக்களின் அளவும் குறையத் தொடங்கும். அது மட்டுமன்றி உயிரணுக்களில் மரபணு ரீதியான திரிபு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதன் விளைவாக, உருவாகும் கருவானது தரமற்றதாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

வயது முதிர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தைக்கு பிறவிக் குறைபாடுகள் வரலாம். லுகிமியா உள்ளிட்ட புற்றுநோய்கள் தாக்கவும் வாய்ப்புகள் உண்டு. ஸ்கீஸோஃபெர்னியா, ஆட்டிசம் போன்ற நரம்பியல் பாதிப்புகளுக்கும் அந்தக் குழந்தை உள்ளாகலாம். குழந்தை உடல் பருமனால் பாதிக்கப்படலாம்.  தாய்க்கு குறைப் பிரசவம் நிகழலாம்.

குழந்தை

எனவே மேற்குறிப்பிட்ட விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு, சரியான வயதில் உள்ள ஆணைத் திருமணம் செய்து கொள்வதுதான் சிறந்த முடிவாக இருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/men/does-mens-age-play-a-role-in-conceiving-a-healthy-baby

``பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், அவரின் மகள் இன்று தோன்றுவார்!” - இயக்குநர் கெளதமன் சொல்வதென்ன?!

`பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவரின் மகள் நவம்பர் 27-ம் தேதி வெளியே வருவார்” எனப் பேசி புயலைக் கிளப்பியுள்ளார் இயக்குநர் கெளதமன்.

இறுதிகட்ட ஈழப்போரில், 2009 மே 17-ம் தேதி, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ``பிரபாகரன் உயிரோடு, நலமுடன் இருக்கிறார். இதை அவரின் குடும்பத்தினர் அனுமதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்” என 2023 பிப்ரவரி மாதமே பேசி சர்ச்சையைத் தொடங்கி வைத்தார் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன். அவர் பேசியதை எந்தவொரு அமைப்புமே ஏற்காத நிலையில் இப்போது இயக்குநர் கெளதமனும் ``பிரபாகரனும் அவரின் மனைவி மதிவதனியும்,மகள் துவாரகாவும் நலமுடன் இருக்கிறார்கள்” என அறிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

பிரபாகரன் உயிரோடு உள்ளார் மீண்டும் ஈழப்போர் தொடங்கும்: பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி!

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும் இயக்குநருமான கெளதமன், ``பிரபாகரனின் மகள் துவாரகா பிரபாகரன் என்னிடம் அலைப்பேசியில் பேசினார், அப்போது, பிரபாகரன் குறித்தும் வினவினேன். அதற்கு அவர் ஒரு நொடி மௌனமாக இருந்துவிட்டு, அப்பாவும், அம்மாவும் நலமுடன் இருக்கிறார் எனச் சொன்னார்.

கெளதமன்

மேலும் மாவீரர் நாளான நவம்பர் 27-ம் தேதி, மாலை 5.30 மணிக்குமேல் துவாரகா பிரபாகரன் காணொலி வாயிலாகத் தோன்றி உலகத் தமிழரிடையே உரையாற்றுவார் என்ற தகவலையும் தெரிவித்தார். துவாரகாவின் வருகையை மத்திய மாநில அரசுகள் வரவேற்க வேண்டும். அவர் அரசியல் ரீதியாக இயங்கவிருப்பதாகத் தெரிகிறது” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/governance/prabhakaran-is-alive-his-daughter-will-appear-on-nov-27-says-director-gauthaman

கார்ட்டூன் - பிரச்`நாய்'...

பிரச்`நாய்'...


source https://www.vikatan.com/government-and-politics/governance/cartoon-vikatan-plus-december-03-2023

சனி, 25 நவம்பர், 2023

கொச்சி: கல்லூரி இசை நிகழ்ச்சியின்போது திடீரென பெய்த மழை; நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சோகம்!

கேரள மாநிலம் கொச்சி களமசேரியில், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (CUSAT) அமைந்துள்ளது. இந்தக் பல்கலைக்கழகத்தில் டெக் ஃபெஸ்ட் என்ற தொழில்நுட்ப விழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.  நிகழ்ச்சியின் இறுதிநாளான நேற்று இரவு, ஆடிட்டோரியத்தில் இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியைக் காண மாணவ மாணவியர் குவிந்தனர். அப்போது திடீரென மழை பெய்ததால், வெளிப்பகுதியில் நின்றிருந்த மாணவ மாணவியர் ஆடிட்டோரியத்துக்குள் புகுந்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 2 மாணவிகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பலர் மயக்கமடைந்தனர். அவர்கள் களமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்கள்

இது குறித்து கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``களமசேரி கல்லூரியில் காயமடைந்த 31 பேர், களமசேரி மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அதில் 2 பேர் ஐ.சி.யு-விலும், ஒருவருக்கு வென்ட்டிலேட்டர் உதவியுடனும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 18 பேர் கில்டன் ஆஸ்பத்திரியிலும், 2 பேர் ஆஸ்டல் மெடிசிட்டியிலும் சிகிச்சையில் உள்ளனர். மேலும், காயமடைந்தவர்கள் குறித்த விவரங்கள், சிகிச்சை விவரங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்ய, களமசேரி மெடிக்கல் காலேஜில் விரைவில் உயர்மட்ட மருத்துவக்குழு கூட்டம் நடக்க உள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது. ``இது நாட்டை உலுக்கிய மிக துயரமான சம்பவம்" என கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

கொச்சி CUSAT கல்லூரியில் நெரிசலில் சிக்கி 4 பேர் மரணம்

மேலும், எர்ணாகுளம் மாவட்ட மருத்துவக்குழுவினர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் தொடர்புகொண்டு காயமடைந்தவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நள்ளிரவு தகவலின்படி வெளியான தகவலின் அடிப்படையில், 64 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இன்ஜினீயரிங் இரண்டாம் ஆண்டு படித்துவந்த அதுல் தம்பி, சாரா தாமஸ், ஆன் ரூப்டோ மற்றும் பாலக்காட்டைச் சேர்ந்த ஆல்வின் ஜோசப் ஆகியோர்தான் இறந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/crime/4-students-dead-in-stampede-at-concert-in-kochi-university-over-60-injured

What to watch on Theatre & OTT: குய்கோ, காதல், Napoleon - இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

80'ஸ் பில்டப் (தமிழ்)

80'ஸ் பில்டப்

கல்யாண் இயக்கத்தில் சந்தானம், கே.எஸ்.ரவிக்குமார், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் '80'ஸ் பில்டப்'. காமெடி கலாட்டாவான இத்திரைப்படம் நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

குய்கோ (தமிழ்)

குய்கோ

த.அருள்செழியன் இயக்கத்தில் யோகிபாபு, விதார்த், இளவரசு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குய்கோ'. சவுதியில் ஒட்டகம் மேய்ப்பவராக இருக்கும் யோகி பாபு, தன் அம்மா இறந்த பிறகு சொந்த ஊருக்குத் திரும்புகிறார். அதன் பின் அவரது வாழ்க்கை என்னாவகிறது என்பதுதான் இதன் கதைக்களம்.

ஜோ (தமிழ்)

ஜோ

ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், அன்புதாசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜோ'. காதல் மற்றும் அதையொட்டி நடக்கும் சண்டைகள் என உருவாகியுள்ள திரைப்படமான இது, நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

லாக்கர் (தமிழ்)

லாக்கர்

ராஜசேகர் நட்ராஜன் இயக்கத்தில் விக்னேஷ் சண்முகம், நிரஞ்சனி அசோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லாக்கர்'. ரொமான்டிக் திரில்லர் திரைப்படமான இது நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சில நொடிகளில் (தமிழ்)

சில நொடிகளில்

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட், கீதா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சில நொடிகளில்'. திரில்லர் திரைப்படமான இது நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

காதல் - தி கோர் (மலையாளம்)

காதல் - தி கோர்

ஜியோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் 'காதல் - தி கோர்'. மம்மூட்டி, ஜோதிகா இருவருக்கும் இடையான காதல், குடும்ப வாழ்வு மற்றும் இருவரின் பொதுவாழ்வு பிரச்னைகள் உள்ளிட்ட எமோஷனல், க்ரைம் திரில்லர் திரைப்படமான இது நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஆதிகேசவா (தெலுங்கு)

ஆதிகேசவா

ஶ்ரீகாந்த் இயக்கத்தில் பஞ்ச வைஷ்ணவ் தேஜ், ஸ்ரீலீலா, ஸ்ரீராம் ரெட்டி பொலாசனே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆதிகேசவா'. ஆக்‌ஷன், காமெடி திரைப்படமான இது நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Kota bommali PS (தெலுங்கு)

Kota bommali PS

தேஜா மார்னி இயக்கத்தில் மேகா ஸ்ரீகாந்த், வரலட்சுமி சரத்குமார், ராகுல் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Kota bommali PS'. அரசியல்வாதிகளால் க்ரைம் வழக்கு ஒன்றில் மாட்டி அதிலிருந்து வெளிவரப் போராடும் காவல் அதிகாரியை மையமாகக் கொண்டது இதன் கதை. இத்திரைப்படம் நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Adrishya Jalakangal (மலையாளம்)

Adrishya Jalakangal

பிஜுகுமார் தாமோதரன் இயக்கத்தில் டோவினோ தாமஸ், நிமிஷா சஜயன், இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Adrishya Jalakangal'. காதல், போர் மற்றும் இழப்பு போன்றவற்றை மையமாகக் கொண்டு வித்தியாசமான பாணியில் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தைப் பற்றிச் சொல்லுவதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Swathi Mutthina Male Haniye (கன்னடம்)

Swathi Mutthina Male Haniye

ராஜ் பி. ஷெட்டி இயக்கத்தில் ராஜ் பி. ஷெட்டி, சிரி ரவிக்குமார், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Swathi Mutthina Male Haniye'. ரொமான்டிக் ஜானர் திரைப்படமான இது நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Farrey (இந்தி)

Farrey

சௌமேந்திர பதி இயக்கத்தில் அலிசே அக்னிஹோத்ரி, ஜூஹி பாபர், பிரசன்னா பிஷ்ட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Farrey'. க்ரைம், திரில்லர் திரைப்படமான இது நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Wish (ஆங்கிலம்)

Wish

கிறிஸ் பக், ஃபான் வீரசுந்தோர்ன் இயக்கத்தில் அரியானா டிபோஸ், கிறிஸ் பைன், ஆலன் டுடிக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Wish'. கார்ட்டூன் பேன்டஸி திரைப்படமான இது நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Napoleon (ஆங்கிலம்)

Napoleon

ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் வகீன் பீனிக்ஸ், வனேசா கிர்பி, தஹர் ரஹீம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Napoleon'. மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார ஓடிடி...

The Village (தமிழ்) - Amazon Prime Video

The Village

மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா, திவ்யா, ஜார்ஜ் மேரியன், பேபி ஆழியா, ஜான் கொக்கன் மற்றும் பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் வெப்சீரிஸ் 'The Village'. ஹாரர், திரில்லர் நிறைந்த இந்த வெப்சீரிஸ் 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓடிடி

லியோ (தமிழ்) - Netflix

லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சாண்டி மாஸ்டர், கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன் சங்சய் தத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படமான இது 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தியோக் நகரத்தில் பார்த்திபன் (விஜய்), தன் மனைவி சத்யா (த்ரிஷா), தன் மகன் மற்றும் மகளுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவரது கஃபேயில் கொள்ளையர்கள் அட்டகாசம் செய்ய, தற்காப்புக்காக ஐந்து பேரைச் சுட்டுவிடுகிறார். உள்ளூர் தொடங்கி தேசிய மீடியாக்கள் வரை அவரைக் கொண்டாட, மாநிலவாரியாகப் பல கேங்ஸ்டர்கள் அவரை 'லியோ' என்று அடையாளப்படுத்தி பின்தொடர ஆரம்பிக்கிறார்கள். 20 வருடங்களுக்கு முன்பு இறந்ததாகச் சொல்லப்படும் 'லியோ'தான் பார்த்திபனா, பார்த்திபன் தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்தாரா என்பதே படத்தின் கதை.

டீமன் (தமிழ்) - Aha Tamil

டீமன்

டீமன்' படத்தை ரமேஷ் பழனிவேல் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் 'Aha Tamil' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

சினிமாவில் இணை இயக்குநராக இருக்கும் கதாநாயகன், தயாரிப்பாளரிடம் கதை ஒன்றைச் சொல்லி படம் எடுக்க ஆயத்தமாகிறார். பட வேலைகளுக்காக தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்குகிறார். அங்கு சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்க, அடுத்தடுத்து அவர் வாழ்வில் என்னென்ன நடக்கிறது என்பதே கதைக்களம்.

கருமேகங்கள் கலைகின்றன - Amazon Prime Video

கருமேகங்கள் கலைகின்றன

தங்கர் பச்சான் இயக்கத்தில் கெளதம் வாசுதேவ் மேனன், யோகிபாபு, பாரதிராஜ உள்ளிட்டோ நடிப்பில் உருவான திரைப்படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இத்திரைப்படம் 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

நிஜத்தில் தந்தையாக இருந்தும், தன் மகளுக்குத் துணை நிற்காத ஒருவர், நிஜத்தில் தந்தையாக இல்லாவிட்டாலும் `தன் மகளுக்காக' உருகும் மற்றொருவர்... இந்த இருவரும் சந்தித்துக்கொள்வதால் ஏற்படும் மாற்றங்களே இதன் கதைக்களம்.

பார்ட்னர் (தமிழ்) - Amazon Prime Video

பார்ட்னர்

மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி, யோகிபாபு, ஹன்சிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பார்ட்னர்'. காமெடி, திரில்லர் திரைப்படமான இது 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

கதாநாயகன் ஆதி, யோகி பாபு இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். இருவருக்கும் பணத்தேவை ஏற்படுகிறது. இதனால் ஆதி, யோகி பாபு இருவரும் சேர்ந்து பல வேலைகள் செய்கின்றனர். ஒரு கட்டத்தில் லேப் ஒன்றில் திருடப் போன யோகி பாபுவிற்குத் தவறுதலாக ஒரு ஊசி குத்திவிடுகிறது. அதன் விளைவால் அவர் ஹன்சிகாவாக மாறிவிடுகிறார். அதற்குப் பின் என்ன நடந்தது என்பதுதான் இதன் கதைக்களம்.

சத்திய சோதனை (தமிழ்)

சத்திய சோதனை

'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் பிரேம்ஜி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சத்திய சோதனை'. கிராமத்துக் காவல் நிலையங்களில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமான இது தற்போது 'SonyLiv' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Chaaver (மலையாளம்)

Chaaver

டினு பாப்பச்சன் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், அர்ஜுன் அசோகன், ஆண்டனி பெப்பே, மனோஜ் கே யு, சஜின் கோபு, அனுரூப் இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படம் 'Chaaver.' க்ரைம் திரில்லர் திரைப்படமான இது 'SonyLiv' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Pulimada (மலையாளம்) - Netflix

Pulimada

ஏ.கே. சஜன் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜானி ஆண்டனி, ஜியோ பேபி, அபின் பினோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Pulimada'. வின்சென்ட் என்ற 40 வயது போலிஸ்காரரான ஜோஜு ஜார்ஜின் திருமணத்தின்போது நடக்கும் சம்பவம் அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட, அதிலிருந்து அவர் எப்படி மீண்டார் என்பதுதான் இதன் கதைக்களம். திரில்லர் திரைப்படமான இது 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Chatrapathi (இந்தி) - Amazon Prime Video

Chatrapathi

வி.வி. விநாயக் இயக்கத்தில் சாய் ஸ்ரீனிவாஸ் பெல்லம்கொண்டா, நுஷ்ரட் பருச்சா, கரண் சிங் சாப்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தித் திரைப்படம் 'Chatrapathi'. இது ராஜமௌலி இயக்கிய தெலுங்குப் படத்தின் ரீமேக். இத்திரைப்படம் 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Fukrey 3 (இந்தி) - Amazon Prime Video

Fukrey 3

மிருக்தீப் சிங் லம்பா இயக்கத்தில் புல்கித் சாம்ராட், வருண் ஷர்மா, மன்ஜோத் சிங், ரிச்சா சதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி திரைப்படம் 'Fukr3y'. காமெடி கலாட்டாவான இத்திரைப்படம் 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஈஸியான வழியில் பணக்காரர்களாக வேண்டும் என்று திட்டமிடும் நண்பர்கள், பிசினஸ் செய்ய முயன்று பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் திட்டம் நிறைவேறியதா? என்பதுதான் இதன் கதைக்களம்.

Gran Turismo (ஆங்கிலம்) - Netflix

GRAN TURISMO

நீல் ப்ளோம்காம்ப் இயக்கத்தில் டேவிட் ஹார்பர், ஆர்லாண்டோ ப்ளூம், ஆர்ச்சி மேடெக்வே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Gran Turismo'. அட்வன்சர் கார் ரேஸிங் திரில்லர் திரைப்படமான இது 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

கார் ரேஸ் பிசினஸ் செய்யும் கம்பெனி, கம்ப்யூட்டரில் கார் ரேஸிங் கேம் விளையாடுபவர்களுக்குப் பயிற்சியளித்து உண்மையில் அவர்களைக் கார் ரேஸில் களமிறக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறது. இந்த முயற்சி சாத்தியமானதா, சிறு வயதிலிருந்து கார் ரேஸிங் கேம்கள் விளையாடும் கதாநாயகன் ஒரு சிறந்த கார் ரேஸர் ஆனாரா என்பதுதான் இதன் கதைக்களம்.



source https://cinema.vikatan.com/kollywood/what-to-watch-on-theatre-ott-this-november-last-week-movies