source https://www.vikatan.com/spiritual/astrology/weekly-astro-predictions-for-the-period-of-january-3rd-to-8th
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.
Doctor Vikatan: என் 3 வயது மகனுக்கு தினமும் சாக்லேட் கொடுக்க வேண்டும். சாக்லேட் கொடுத்தால்தான் சாப்பாடே சாப்பிடுவான். இந்தப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. தினமும் சாக்லேட் சாப்பிடுவது ஆபத்தானதா? இந்தப் பழக்கத்தை நிறுத்த வேறு வழிகள் உண்டா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்
குழந்தை எப்படியாவது சாப்பிட்டால் போதும் என்ற எண்ணத்தில் அதற்கு சாக்லேட் கொடுத்துப் பழக்குவது சரியானதல்ல. குழந்தைப் பருவத்தில் இருந்தே சாப்பாட்டின் அவசியத்தை, சரியான நேரத்துக்குச் சாப்பிட வேண்டியதன் அவசியத்தைக் குழந்தைக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் இதுபோன்ற தேவையற்ற பழக்கங்களில் இருந்து குழந்தைகளை மீட்க முடியும்.
குழந்தைதானே என்ற எண்ணத்தில் கண்ட உணவுகளையும் கொடுப்பதும் தவறு. அந்த வயதில் இருந்தே சரிவிகித உணவுப்பழக்கத்துக்குப் பழக்குவது அவசியம். ஒருவேளை உங்கள் குழந்தை இனிப்பாக ஏதாவது கேட்கிறது என்றால் சாக்லேட்டுக்கு பதிலாக பழங்கள் மற்றும் உலர் பழங்களைக் கொடுக்கலாம்.
அதற்காக குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுப்பதே தவறு என்று சொல்லவில்லை. எப்போதோ ஒரு முறை கொடுக்கலாம். அது பழக்கமாக மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படியே கொடுக்கும்போதும், நீங்கள் கொடுக்கும் சாக்லேட்டில் கஃபைன் இல்லாததா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
குறைந்த கொழுப்பும் சர்க்கரையும் சேர்த்த சாக்லேட்டாக பார்த்துத் தேர்வு செய்து வாங்கிக் கொடுக்கலாம். இன்னும் சொல்லப்போனால் டார்க் நிற சாக்லேட்டுகள் ஓரளவு சிறந்தவை. அவற்றில் இனிப்பும் பிற சேர்க்கைகளும் குறைவாக இருக்கும்.
எனவே எப்போதாவது, குறைந்த அளவு சாக்லேட் சாப்பிடுவது ஓகே. ஆனால் அதை மட்டுமே சாப்பிடுவது என்பது குழந்தைக்கு உடல் பருமன், பல் சொத்தை உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு காரணமாகலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அனுமன்பள்ளி அருகே சின்ன தொட்டிபாளையத்தை அடுத்த கள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர் (85). இவருக்கு பழனியம்மாள் (66) என்ற மனைவியும், ராஜாகந்தசாமி (43) என்ற மகனும் உள்ளனர். கணவன்- மனைவி இருவரும் கள்ளியங்காட்டு தோட்டத்தில் குடியிருந்து, அவர்களின் சொந்த தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தனர். இதனிடையே பழனியம்மாளி்ன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் கடும் அவதி அடைந்து வந்துள்ளார். அதேபோல கருப்பண்ண கவுண்டருக்கு காது சரியாக கேட்காமலும், கண்பார்வை குறைபாடும் இருந்து வந்தது.
இதனால் கணவன் - மனைவி இருவரும் கடந்த சில நாள்களாகவே மனவேதனையுடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 26 -ம் தேதி இரவு 8 மணி அளவில் கருப்பண்ண கவுண்டரும், பழனியம்மாளும் தற்கொலை செய்ய முடிவு எடுத்து தென்னை மரங்களைத் தாக்கும் வண்டுகளை அழிக்கும் விஷ மாத்திரைகளை சாப்பிட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கணவன்- மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அப்போது அவர்களின் மகன் ராஜா கந்தசாமி வெளியூர் சென்றிருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை வீட்டுக்கு மகன் ராஜா கந்தசாமி வந்தபோது கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. பதற்றத்துடன் உள்ளே சென்று பார்த்த போது அவரின் தாய், தந்தை உயிரிழந்து சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறினார்.
இதுகுறித்து வெள்ளோடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வயது முதிர்வு காரணமாக கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் போஸ் நகரைச் சேர்ந்தவர் சையது அபுல்ஹாசன் சாதலி. இவரின் மகன் ஷேக் அப்துல்லா. இவர் சீனாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு முடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே உலக நாடுகள் முழுவதும் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு இருந்ததால், வீட்டிலிருதே ஆன்லைன் மூலமாகவே மருத்துவக் கல்வியை முடித்து தேர்ச்சியும் பெற்றிருந்தார். இந்த நிலையில் தான், அங்குள்ள மருத்துவ பல்கலைகழகத்தில் மருத்துவ பயிற்சிக்காக சமீபத்தில் அழைப்பு வந்திருக்கிறது. இதையடுத்து கடந்த மாதம் 11-ம் தேதி புதுக்கோட்டையில் இருந்து சீனாவுக்கு அப்துல்லா புறப்பட்டு சென்றுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக, சீனாவின் விதிமுறைப்படி 8 நாள்கள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட ஷேக் அப்துல்லா, அதன்பின் பல்கலைக்கழகத்திற்கு சென்றிருக்கிறார். இதற்கிடையே தான், கடந்த வாரம் ஷேக் அப்துல்லாவின் உடல்நிலையில் பிரச்னை ஏற்பட்டு, ஹர்பன் சிட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற அதிர்ச்சி தகவலை பல்கலைக்கழகம் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறது.

சீனாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பதற்றமடைந்த பெற்றோர், மீண்டும் பல்கலைக்கழக நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு மகனின் உடல்நலம் குறித்து விசாரித்து உள்ளனர்.
அப்போது, ஷேக் அப்துல்லாவுக்கு கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை, ஆனால், கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். மேலும், ஊரிலிருந்து மருத்துவ செலவுக்கு பணம் அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளனர்.
இதையடுத்து, சையது அபுல்ஹாசன் சாதலி தனது உறவினர்கள், நண்பர்கள் அதுபோக கடன் என ரூ.6,40,000 ஆயிரத்தைத் திரட்டி அங்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்பட்ட, ஷேக் அப்துல்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக சீன பல்கலைக்கழக நிர்வாக தரப்பில் அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த அப்துல்லாவின் பெற்றோர் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றிருக்கின்றனர்.
``மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்னையில் தலையிட்டு இறந்த மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உறவினர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதுகுறித்து அப்துல்லாவின் உறவினர்களிடம் பேசினோம்,
``கூலி வேலை பார்த்து கடன் வாங்கி தான் அப்துல்லாவை, சீனாவில் மருத்துவம் படிக்க வச்சாங்க. நல்லா இருந்தவனுக்கு திடீர்ன்னு முடியாம போய் இறந்தது அதிர்ச்சியா இருக்கு. கொரோனா இருந்துச்சான்னு தெரியலை. ஆனா, கல்லீரல், கிட்னின்னு அடுத்தடுத்த பிரச்னைகள் இருந்ததா சொல்றாங்க. அனைத்தும் மர்மமாகவே இருக்குது. சிகிச்சைக்குக் கூட இங்கிருந்து பணத்தை அனுப்பி வச்சிருக்கோம்.
ஆனா, இப்போ அப்துல்லாவின் உடலை, சொந்த ஊருக்குக் கூட கொண்டு வர முடியாத சூழல் தான் இருக்குது. மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு உடனே இறந்த அப்துல்லாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கணும். உயிரிழந்த அப்துல்லாவின் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரண உதவி வழங்கணும்" என்றனர்.
`உங்களுக்கு ஒரு மந்திரம் சொல்கிறேன். அது மிகச் சிறிய மந்திரம். நீங்கள் அதை உங்கள் இதயத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு மூச்சும் அந்த மந்திரச்சொல்லை ஒலிக்கட்டும். அந்த மந்திரம் இதுதான்: `செய் அல்லது செத்து மடி.’ - மகாத்மா காந்தி.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை ஜவஹர்லால் நேரு. வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை மோதிலால் நேரு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தனிப்பட்ட சொகுசு வாழ்க்கையை விட்டுவிட்டு, தேச சேவையில் இறங்கியவர். பெரிய பெரிய தொழில் நிறுவனங்களிலிருந்தெல்லாம் நிறைய சம்பளம் தருவதாக அழைப்புகள் வந்தன. அவற்றையெல்லாம் மறுத்தார். தன்னுடைய வழக்கறிஞர் தொழிலை முறையாகச் செய்திருந்தால்கூட லட்ச லட்சமாக அவர் சம்பாதித்திருக்கலாம். அவரோ, `பொதுத் தொண்டு செய்வதை விட்டுவிட்டு, சொற்பப் பணம் சம்பாதிப்பதற்காக வாழ்க்கை முழுவதையும் செலவிடுவது வீண்’ என்று அழுத்தமாக நம்பினார். காந்தியத்தைக் கைக்கொண்டு எளிய வாழ்க்கை வாழ்ந்தார். இவைகூடப் பெரிதல்ல... அவர் சிறையிலிருந்த நாள்கள் கொடுமையானவை.
அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்யத்தை எதிர்ப்பது சாதாரண காரியமல்ல. ஒவ்வொரு போராட்டத்துக்கும் சிறைத் தண்டனை உண்டு. காந்தியின் `செய் அல்லது செத்து மடி’ வாக்கை அப்படியே அச்சுப் பிசகாமல் கடைப்பிடித்தவர் நேரு. `An Autobiography' என்கிற அவருடைய நூலில் சிறை வாழ்க்கையை எதிர்கொண்ட அனுபவத்தைப் பதிவுசெய்திருக்கிறார். அதை `மாமனிதர் நேரு’ என்கிற நூலில் விவரிக்கிறார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், எழுத்தாளருமான ஆ.கோபண்ணா.
நேருவின் பதிவு இப்படி விரிகிறது... ``டேராடூன் சிறையில் 14 மாதங்கள், 15 நாள்களைக் கழித்தேன். சிறை வாழ்க்கையோடு ஒன்றிவிட்டதாக அப்போது நான் நினைத்துக்கொண்டேன். அந்த அறையில் நான் மட்டும் தனியாக இல்லை. குளவிகளும் வண்டுகளும் குடியிருந்தன. மேற்கூரையில் ஏராளமான பல்லிகள் இருந்தன. மாலையானதும் அவை இரைதேட ஆரம்பிக்கும். பல்லிகள் எழுப்பும் ஒலியிலேயே அவற்றின் எண்ணமும் உணர்ச்சியும் வெளிப்படும். காற்றோட்டம் இல்லாத அந்த அறை அவற்றுக்குப் பிடித்துப்போயிருக்கும் என நினைத்துக்கொள்வேன். அந்தச் சிறிய இடத்திலேயே அவை வாழப் பழகியிருந்தன.
எனக்கும் மூட்டைப்பூச்சிகள், கொசுக்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்துகொண்டேயிருக்கும். என் அறையிலிருந்த நூற்றுக்கணக்கான குளவிகளையும் வண்டுகளையும் நான் பொறுத்துக்கொண்டேன். `குளவிகள் கொட்டிவிடுமோ?’ என்ற பயமும் இருந்தது. கோபத்தில் அவற்றை விரட்ட முயல்வேன். ஆனால், தன்னுடைய இருப்பிடத்திலிருந்து வெளியேறாமல், என்னுடன் அது போராடும். அங்கேயே முட்டையிடும். அதன் பிறகு, `நம்மை அவை தொந்தரவு செய்யாதவரை, நாம் ஏன் அவற்றைத் தொந்தரவு செய்ய வேண்டும்’ என்று ஒரு முடிவுக்கு வந்தேன். இந்தக் குளவிகள், வண்டுகளோடு பல ஆண்டுகள் சிறையில் வாழ்ந்திருக்கிறேன். அவை, என்னை ஒருபோதும் தாக்கியதில்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் நட்பாய் இருந்துகொண்டோம்.
வௌவால்களை மட்டும் எனக்குப் பிடிக்காது. எனினும் நான் சகித்துக்கொள்வேன். மாலை நேரங்களில் சத்தமே இல்லாமல் அவை பறக்கும். அவற்றுக்கு இரவில் மட்டுமே கண் தெரியும். என் முகத்தில் மோதுவதுபோல அவை பறக்கும். அவை என்னைத் தாக்கிவிடுமோ என்று நான் அச்சப்பட்டிருக்கிறேன். தலைக்கு மேல் பறக்கும் வௌவால்களைப் பார்க்கும்போது நரிகள் பறப்பதுபோல இருக்கும்.
எறும்புகளையும் மற்ற பூச்சிகளையும் நீண்ட நேரம் கவனித்துக்கொண்டே இருப்பேன். மாலை நேரத்தில் வரும் பல்லிகளுக்கு அவை இரையாகிவிடும். பொதுவாக பல்லிகள், குளவிகளை நெருங்காது. ஆனால், சில சமயம், குளவிகளின் முன்னே செல்லாமல், அதன் பின்னே சென்று தாக்கிக் கொல்வதைப் பார்த்திருக்கிறேன். குளவிகளின் கொடுக்குப் பகுதியைக் கவ்விப் பிடிக்காமல் அவற்றின் பின்பகுதியைப் பிடிப்பது, அவை கொட்டிவிடும் என்று தெரிந்தா அல்லது யதார்த்தமாகவா என்பது எனக்குத் தெரியவில்லை.
என் அறையில் தேளை அடிக்கடி பார்ப்பேன். குறிப்பாக, இடியுடன் மழை பெய்யும்போது தேள்கள் அதிகமாக நடமாடும். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அந்தத் தேள்கள் என்னை ஒரு முறைகூடக் கொட்டியதில்லை. என் படுக்கையின் மேல் ஊர்ந்து செல்லும்; புத்தகத்தின் மீது அமர்ந்திருக்கும். கறுப்புத் தேளைப் பிடித்து, நான் சிறிது நேரம் ஒரு பாட்டிலில் அடைத்துவைப்பேன். அதற்கு ஈக்களை இரையாகக் கொடுப்பேன். பிறகு சுவரில் விட்டதும் அது தப்பியோடிவிடும். தேளை மீண்டும் சந்திக்க எனக்கு விருப்பமில்லை. அதனால், என் அறையைச் சுத்தம் செய்து தேள்களை வேட்டையாடினேன். அதன் பிறகு, என் அறைப்பக்கம் தேள்கள் வருவதே இல்லை.’’
ஜவஹர்லால் நேரு சிறையில் அனுபவித்த சித்ரவதை நாள்களின் சிறு துளி இந்தப் பதிவு. சுதந்திரப் போராட்டத்தில் ஒன்பது முறை சிறைக்குச் சென்ற அவர் சிறையில் இருந்த மொத்த நாள்கள் எத்தனை தெரியுமா? 3,259 நாள்கள்.
இந்த நிகழ்வு மட்டுமல்ல... நேருவின் பிறப்பு முதல் அவர் மறைந்த தினம் வரை 700-மேற்பட்ட அரிய புகைப்படங்களுடன், 600 பக்கங்களில் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் எழுத்தாளர் ஆ.கோபண்ணா. நவ இந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக, `மாமனிதர் நேரு - அரிய புகைப்பட வரலாறு’ என்கிற கோபண்ணாவின் நூல் மிக முக்கியமான ஆவணம்.
சுதந்திரத்துக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்றது ஒன்றுபட்டிருக்காத ஓர் இந்தியா; ஒன்றுமே இல்லாத இந்தியா. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றபோது அவர் முன் கொட்டிக்கிடந்தவை சவால்கள் மட்டுமே. சுதந்திர இந்தியாவுடன் சமஸ்தானங்களை இணைத்தது தொடங்கி, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை அதிகரித்தது, பல தொழில்களுக்குக் கதவு திறந்துவிட்டது, ஒரு கனவு இந்தியாவை நனவாக்கியது எனத் தொடர்ந்த அவர் பணிகள் அபாரமானவை. அதனால்தான் அவர் `நவீன இந்தியாவின் சிற்பி’ என அழைக்கப்படுகிறார்.
வாழ்க்கையில் நமக்கு எத்தனையோ இடர்ப்பாடுகள். அவை எதிர்ப்படும்போதெல்லாம் நேரு கடைப்பிடித்த காந்தியின் வாக்கை நாமும் நினைவில்கொள்வோம். `செய் அல்லது செத்து மடி.’
சபரிமலையில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் குறித்து சில ஆண்டுகளாக கேரள அரசு விவாதித்து வருகிறது. இந்த நிலையில் சபரிமலை விமான நிலையத்துக்காக எருமேலி பகுதியில் 2,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணையை கேரள அரசு வெளியிடுள்ளது. செறுவள்ளி எஸ்டேட் நிலப்பகுதி போக வெளியே 307 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்காக மணிமலா கிராமத்தில் அதிக நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அதே சமயம் செறுவள்ளி எஸ்டேட் தொடர்பான வழக்கு ஒன்று கோர்ட்டில் நடந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
சபரிமலை விமான நிலையத்திற்கான ஓடுதளம் 3 ஆயிரத்து 500 மீட்டர் நீளத்தில் அமைய உள்ளது. சபரிமலை விமானநிலைய திட்டத்துக்காக நாடாளுமன்ற குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. அதே சமயம் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலை பெறுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது கேரள அரசு. கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் விமான நிலைய திட்டத்துக்காக இரண்டு கோடி ரூபாயை கேரள அரசு ஒதுக்கியிருந்தது.
எருமேலியில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் பக்தர்கள் வருகை பெருமளவில் அதிகரிக்கும் என கேரள அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் லூயிஸ் பர்ஜர் கம்பெனியிடம் விமான நிலைய கட்டுமான திட்டமிடல் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. சபரிமலை விமானநிலையத்துடன் திருவனந்தபுரம், கொச்சி விமான போக்குவரத்தை இணைக்கும் திட்டமும் உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் சபரிமலையில் விமான நிலையத்தை அமைக்கும் திட்டத்தில் தீவிரம் காட்டிவருகிறது கேரள அரசு.