Ad

வெள்ளி, 4 மார்ச், 2022

இன்றைய ராசி பலன் | 05/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today's Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam

12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs



source https://www.vikatan.com/spiritual/astrology/05032022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

வியாழன், 3 மார்ச், 2022

`போட்டோஷாப்பா, நிஜமா?!' இந்தியாவுல இப்படிலாமா டிராஃபிக் ரூல்ஸை ஃபாலோ பண்றாங்க? வைரல் போட்டோ பின்னணி!

ஒரு பேருந்து இருக்கையில் அமர்கிறீர்கள். இரண்டு இருக்கைகளுக்கும் சேர்த்து நடுவில் ஒரே ஒரு ஆர்ம் ரெஸ்ட்தான் இருக்கும். ‘ஆர்ம்ரெஸ்ட் உனக்கா எனக்கா’ என்று முழங்கையை வைத்துச் சண்டை போடுபவர்களைப் பார்த்திருப்பீர்கள்.

பெட்ரோல் பங்க்கில் நிற்கிறீர்கள். சர்ரென ஒரு பைக்கின் முன் வீல் நம்மை முந்தினால்... ‘ஹலோ பின்னாடி வாங்க’ என்று முறைத்துப் பார்த்துவிட்டு ரெண்டு இன்ச் முன்னேறுபவர்களைப் பார்த்திருப்பீர்கள்!

‘இந்த டிராஃபிக்கில் இருந்து தப்பிக்க இதான்பா ஒரே வழி’ என்று ஆம்புல்ன்ஸ் பின்னாடியே ஓடுபவர்களையும் பார்த்திருப்பீர்கள்!

ஆனால், கிடைத்த கேப்பில் புகுந்து புறப்படாமல்… ‘போனால் என் பாதையில்தான் போவேன்’ என்று வாகனம் ஓட்டும் நேர்மையான வாகன ஓட்டிகளைப் பார்த்ததுண்டா! மேம்போக்காக நடக்காமல் டிராஃபிக் விதிமுறைகளைக்கூட சத்தியத்தைப்போல் காத்து வருகிறார்கள், இந்தியாவில் உள்ள ஒரு மாநில மக்கள். அந்த மாநிலம் மிசோரம். அப்படி ஒரு வியக்க வைக்கும் படம்தான் இப்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அந்தப் படத்தில், நம் ஊர் பீக் அவர்ஸ் ஓஎம்ஆர் சாலை மாதிரி கடுமையான டிராஃபிக் தெரிகிறது. இடது பக்கம் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. அதே சாலையின் எதிர்ப்புறம்… அதாவது வலது பக்கம் மிட் நைட் ஈசிஆர் சாலை மாதிரி அத்தனை காலியாகக் கிடக்கிறது. ஆனால், இடது பக்கத்தில் இருப்பவர்கள், தங்களுக்கான பார்டரைத் தாண்டாமல் அப்படியே டிராஃபிக்கில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பைக்கின் வீல்கூட அந்தச் சாலையின் நடுவே இருக்கும் வெள்ளைக் கோட்டைத் தொட்டிருக்கவில்லை என்பதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம். (நீங்களே படத்தைப் பாருங்க!)

இந்த ஒரு படமே மிசோரம் மக்களின் பொறுப்புணர்வையும், சட்டத்தைச் சத்தியத்தைப்போல் காப்பதையும் சொல்கிறது. இந்தப் படத்தைப் பல விஐபிக்கள் தங்கள் ட்விட்டரில் பகிர்ந்து, பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் ஒருவர்.

‘‘ஒரு வாகனம்கூட சாலையின் டிவைடர் மார்க்கைத் தாண்டவில்லை. நமது வாழ்வின் தரத்தைக் கூட்டுவது நம் கையில்தான் என்பதை உணர வேண்டும். மிசோரம் மக்களுக்குப் பெரிய சல்யூட்!’’ என்று தனது ட்விட்டர் வலைதளத்தில் அவர் சொல்லியிருக்கிறார்.

இது எதேச்சையாக எடுக்கப்பட்ட புகைப்படமா? அல்லது மிசோரம் மக்கள் சட்டத்தை மதிக்கிறவர்களா?

உண்மையிலேயே மிசோரம் மக்கள் ஒழுக்கத்தையும் சட்டத்தையும் மதிப்பவர்கள். இங்கே ஃபேன்ஸியான கார்/பைக்குகள் கிடையாது; ‘சர் புர்’ரென்று ஒன்வேயில் புகுந்து புறப்படும் ஆட்டோக்கள்/டூ–வீலர்கள் கிடையாது; முக்கியமாக யாருமே வாகனத்தில் போகும்போது, தேவைப்பட்டால் தவிர ஹார்ன் அடிப்பதே இல்லை. அத்தனை பொறுமைசாலிகளாம்.

கார்களும் பைக்குகளும் தனித் தனி லேன்களில்...

அதேபோல் யூடியூபில் இன்னொரு வீடியோவும் உலா வருகிறது. கார் போகும் லேன்களில் பைக்குகள் வரவில்லை; பைக் லேன்களில் கார்கள் போகவில்லை. இதையும் தங்கள் தார்மீகக் கடமைகளில் ஒன்றாகக் கடைப்பிடிக்கிறார்கள் மிசோரம் மக்கள். இதனாலயே மிசோரத்தில் விபத்து எண்ணிக்கைகளும் குறைவாகத்தான் இருக்கின்றனவாம்.

இதற்கு அவர்கள் கடைப்பிடிப்பது ஒன்றே ஒன்றுதானாம்! 10.00 மணி அலுவலகத்துக்கு 9.45–க்கு வீட்டிலிருந்து கிளம்பமாட்டார்களாம். அவசர அவசரமாகப் பயணம் செய்வதைத் தவிர்த்தாலே இதுபோன்ற ஒழுங்குமுறைகளை நாமும் கடைப்பிடிக்கலாம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள் மிசோரம் மக்கள்.

Uttarkhand traffic
Andhra Traffic

இது மிசோரம் மாநிலத்தில் மட்டுமில்லை; மேகாலயா, அஸ்ஸாம் போன்ற கிழக்கிந்திய மாநிலங்களிலும் இப்படி டிராஃபிக் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். எத்தனை மணி நேரம் காத்திருந்தாலும், லேன் மாறுவதே இல்லையாம்.

‘‘ஹலோ எங்க ஊர்லேயும் இப்படித்தான்… டிராஃபிக் ரூல்ஸை ஃபாலோ பண்ணுவோம்… நீங்களே பாருங்க!’’ என்று ஆந்திரா, உத்தரகாண்ட் போன்ற மாநிலத்தைச் சேர்ந்த நெட்டிசன்கள் சிலர், தங்கள் பங்குக்குச் சில விதிமீறல் இல்லாத படங்களை சோஷியல் மீடியாக்களில் போஸ்ட் செய்து வருகின்றனர்.

‘இது மாதிரி ஒழுங்கு, நம்ம ஊரிலும் உண்டு’னு யாராவது போட்டோஷாப் ஒர்க்காச்சும் செஞ்சு அனுப்புங்க மக்கா!



source https://www.vikatan.com/news/viral/viral-photo-mizoram-people-adhering-to-o-traffic-rules

சீட் வாங்கவே கஷ்டப்பட்டவர் கோவை மேயர் வேட்பாளர் ஆனது எப்படி?! - திருப்புமுனையான அந்த `அழைப்பு’

கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு தி.மு.க மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா. கார்த்திக் தன் மனைவி லக்குமி இளஞ்செல்வியை முன்னிறுத்தினார். மறுபுறம் புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தனது மகள் நிவேதாவை முன்னிறுத்தினார். இருவரும் தங்களது சாதியையும் கூடுதல் பலமாக முன்னிறுத்தினர். ஆனால், தேர்தல் உள்ளடி வேலை காரணமாக மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மீது செந்தில் பாலாஜி அப்செட்டில் இருந்தார்.

கோவை மாநகராட்சி

எனவே, பெரிய அளவுக்கு சர்ச்சையில் சிக்காத ஒருவரை செந்தில் பாலாஜி தேடினார். அதேநேரத்தில் தனக்கு நிகராக யாரும் வந்துவிடக்கூடாது என்பதால் பிரமாண்டங்களை உதறித் தள்ளி எளிமையானவரை தேடினார். அப்போது கிடைத்தவர் தான் 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா.

இதுகுறித்து தி.மு.கவினர் கூறுகையில், “பாரம்பர்ய தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்தவர். கணவர் மணியகாரம்பாளையம் பொறுப்புக்குழு உறுப்பினராக உள்ளார். கல்பனா சாதாரண அடிப்படை உறுப்பினர். தங்களுக்கு ரூ.73 லட்சம் சொத்து இருப்பதாக வேட்புமனுவில் கூறியுள்ளார். ஆனாலும், வாடகை வீட்டில்தான் வசிக்கிறார். மிகவும் எளிமையானவர் என்பதால், சீட் வாங்குவதற்கே படாதபாடுபட்டுள்ளார். கல்பனா போட்டியிட சக உடன்பிறப்புகள் எதிர்ப்புகூட தெரிவித்தனர்.

கல்பனா

ஒருவழியாக சீட் வாங்கி, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் பதவிக்கு தான் முயற்சித்து வந்தார் கல்பனா. கோவை மேயர் பதவிக்காக சுமார் 40-க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் எல்லாம், “பார்த்துக்கலாம்.. தலைவர் தான் முடிவு பண்ணுவார்…” என்பதைத்தவிர செந்தில் பாலாஜி வேறு ஏதும் பேசவில்லை.

கவுன்சிலராக பதவி ஏற்பதற்கு சில நாள்களுக்கு முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து கல்பனாவுக்கு அவசரமாக, “சென்னைக்கு வாருங்கள்.” என்று ஓர் அழைப்பு வந்தது. அதுதான் அவரின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தேர்தலில் வெற்றிவுடன் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க பேருந்தில் சென்றவர், அழைப்பின் அவசரம் காரணமாக இந்தமுறை விமானத்தில் சென்று செந்தில் பாலாஜியை சந்தித்தார்.

கல்பனா

யாரிடமும் அதிகம் பேசாத செந்தில் பாலாஜி மற்றும் அவரின் தம்பி அசோக்குமார் உள்ளிட்டோர் சுமார் அரை மணி நேரம் கல்பனா மற்றும் அவர் கணவர் ஆனந்திடம் பேசியுள்ளனர். அப்போதே மூத்த நிர்வாகிகள் புகைய தொடங்கிவிட்டனர்.

10-ம் வகுப்பு தான் படித்தவர் என்றாலும், தங்களுக்கு விசுவாசமாக இருப்பார் என்பதால் செந்தில் பாலாஜி தரப்பு கல்பனாவை டிக் அடித்துள்ளனர். கல்பனாவும், கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை முன்னாள் மேயராக இருந்த கணபதி ராஜ்குமார் உறவினர் என்றும் சொல்லப்படுகிறது.

செந்தில் பாலாஜி கல்பனா

தலைமை அறிவிக்கும் முன்புவரை கல்பனாவை உள்ளூர் தி.மு.க நிர்வாகிகள் பலருக்கும் தெரியாது. ஒருவகையில் கல்பனாவை டிக் அடித்தது, முக்கிய நிர்வாகிகளுக்கு அப்செட்டாக இருந்தாலும் எளிய உறுப்பினரை மேயராக்கும் முயற்சி பரவலாக வரவேற்பைப் பெற்று வருகிறது.” என்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/how-did-kalpana-announced-as-coimbatore-mayor

'ஒரு வார்டும் போச்சே'... 'ஆப்சன்ட்' தங்கமணி, `ஆஃப்லைன்’ பாஸ்கர்! - புலம்பும் நாமக்கல் அதிமுக-வினர்

நாமக்கல் நகராட்சியில் மொத்தமுள்ள 39 வார்டுகளில் அதிமுக ஒரே ஒரு வார்டை மட்டுமே கைப்பற்றியது. இந்த நிலையில், 'ஒத்தை அ.தி.மு.க கவுன்சிலராக இருந்து ஒன்றும் செய்யமுடியாது' என்று தி.மு.கவில் இணைந்து, அ.தி.மு.கவினரை அதிர வைத்திருக்கிறார்.

தங்கமணி

அதிமுக கோட்டையாக இருந்த நாமக்கல், மெல்ல மெல்ல தி.மு.க கோட்டையாக மாறி வருகிறது. கடந்த, சட்டமன்றத் தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 4 தொகுதிகளை தி.மு.க கூட்டணி கைப்பற்றியது. தற்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 5 நகராட்சிகளில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் ஆகிய 4 நகராட்சிகளை தனிப்பெரும்பான்மையுடம் திமுக கைப்பற்றியிருக்கிறது. குமாரபாளையம் நகராட்சியை சுயேச்சை கவுன்சிலர் விஜய்கண்ணன் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாவட்டத்தின் தலைமைபீடமான நாமக்கல் நகராட்சியில் தி.மு.க, அ.தி.மு.கவை 'ஒயிட் வாஷ்' செய்துள்ளது. நாமக்கல் நகராட்சியில் மொத்தமுள்ள 39 வார்டுகளில், தி.மு.க 36 வார்டுகளை கைப்பற்றியது. தவிர, சுயேச்சைகள் 2, அ.தி.மு.க 1 வார்டு என கைப்பற்றினர். கடைசியில், சுயேச்சைகள் இருவரும் தி.மு.கவில் இணைய, தி.மு.கவின் எண்ணிக்கை 38 ஆனது. 'அப்பாடா, ஒரு வார்டாச்சும் தப்பிச்சதே' என்று அ.தி.மு.கவினர் மகிழ்ந்த நிலையில், அந்த ஒரு கவுன்சிலரும் தி.மு.கவுக்கு ஆதரவு கொடுத்து, அந்த கட்சியியில் ஐக்கியமாகி, அ.தி.மு.கவினருக்கு 'ஷாக்' கொடுத்திருக்கிறார். 29 வது வார்டில் வெற்றிப்பெற்ற ரோஜா ரமணி, தி.மு.கவை சேர்ந்தவர் தான். ஆனால், தி.மு.க சார்பில் சீட் தராததால், அ.தி.மு.கவில் இணைந்து, அந்த கட்சி சார்பில் நின்று வெற்றிப்பெற்றார்.

கே.பி.பி.பாஸ்கர் (அ.தி.மு.க நாமக்கல் நகர செயலாளர்)

இந்த நிலையில், 'அ.தி.மு.கவில் ஒத்தை ஆளாக இருந்து செயல்படமுடியாது' என்று கூறி, நாமக்கல் தி.மு.க கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் தனது 'தாய்க்கழகமான' தி.மு.கவில் இணைந்துவிட்டார். இதனால், நாமக்கல் அ.தி.மு.கவினர், 'ஒரு வார்டும் போச்சே' என்று அங்கலாய்க்கின்றனர்.

``நாமக்கல் நகராட்சியில் வாஷ் அவுட் ஆனதோடு, மாவட்டம் முழுக்க பெரும்பான்மையான நகராட்சி, பேரூராட்சிகளை அ.தி.மு.க இழந்துள்ளது.

இதற்கு காரணம், .அ.தி.மு.க மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, சரியாக தேர்தல் பணியாற்றாததுதான். உடல்நிலையை காரணம் காட்டி, குமாரபாளையத்திலேயே இருந்துவிட்டார் என்கிறார்கள் கட்சியினர். நாமக்கல் நகராட்சியில் அ.தி.மு.க வாஷ் அவுட் ஆனதற்கு காரணம், அ.தி.மு.க நகர செயலாளர் கே.பி.பி.பாஸ்கர், வேலை பார்காததுதான். கடந்த 2011 ல் இருந்து 2021 வரை இரண்டு முறை தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். ஆனால், நாமக்கல் நகராட்சியில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க எந்த முயற்சியும் எடுத்துக்கலை. செலவும் பண்ணலை. இப்படியே போனால், இனி நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.கவுக்கு தேய்பிறை மட்டும்தான். வளர்பிறை கிடையாது" என்று அ.தி.மு.கவினர் வெடிக்கின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/namakkal-local-body-election-admk-councillor-back-to-dmk-after-election-win

குண்டாஸ் போடாமல் இருக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டாரா?! - வைரலான ஆடியோ; பதவியை ராஜினாமா செய்த எஸ்.ஐ

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சூரங்குடி, குளத்தூர், எப்போதும்வென்றான், மாசார்பட்டி, சாயர்புரம், குரும்பூர், கயத்தாறு, சேரகுளம், திருச்செந்தூர், புதுக்கோட்டை தட்டார்மடம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் திருடு போனதால் அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளை போலீஸார் பார்வையிட்ட போது, ஒரு கும்பல் காரில் வந்து ஆடுகளை திருடிச் சென்றது. இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி வாகனச் சோதனையின் போது அந்த கும்பல் பிடிபட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த செல்வராஜ், ஆறுமுகம் ஆகிய 2 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்த 14 ஆடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள 3 கார்களையும் பறிமுதல் செய்தனர்.

கங்கைநாத பாண்டியன்

காரைக்குடியில் மட்டன் கடை நடத்தி வந்த முகம்மது அராபத் , ஆசிக் ஆகிய இருவருக்கும் ஆடுகளைத் திருடிக் கொண்டு வந்து கொடுப்பதற்காக முகம்மது அராபத்தின் கூட்டாளிகளான பாண்டிச்செல்வம், பாலமுருகன் மற்றும் நவநீதகிருஷ்ணன் ஆகிய 4 பேரும், அதேபோன்று ஆசிக் என்பவரின் கூட்டாளிகளான செல்வராஜ், ஆறுமுகம் மற்றும் ஆசிக்ராஜா ஆகிய 4 பேரும் என மொத்தம் 8 பேரும் சேர்ந்து சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆடுகளைத் திருடி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதில், முகம்மது அராபத், பாண்டிச்செல்வம் மற்றும் பாலமுருகன் ஆகிய 3 பேர் புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி காவல் நிலையக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளனர். இந்த கும்பலுடன் தொடர்புடைய மேலும் சிலரையும் தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் தான் தனிப்படையில் இருந்த விளாத்திகுளம் உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன், ஆடு திருடும் வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆடு திருடும் கும்பலிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்யமால் இருக்கவும், அதில் இருந்து காப்பாற்றுவதற்காகச் சொல்லியும் ரூ.3 லட்சம் பணம் கேட்டதாக சில ஆடியோக்கள் வைரலாகி வருகிறது.

முன்னாள் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற கங்கைநாதப் பாண்டியன்

திருச்சியில் ஆடுதிருடும் கும்பலை பிடிக்கப் சென்ற உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை, உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் கைது செய்ய முயற்சி செய்வதாகவும் சமூக வலைதளங்களில் சில ஆடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. அதில் ஒரு ஆடியோவில், “குண்டாஸ் கேஸ் போடணும்னா நான்தான் அதைச் செய்யணும்” எனச் சொன்னதும், “சார் கேஸ்லாம் போட்டுடாதீங்க சார். நான் நேர்ல வர்றேன்” என வழக்கில் தொடர்புடையவர் சொல்கிறார். அவரின் அம்மா என ஒரு பெண் பேசி, “எவ்வளவு பணம்னாலும் தர்றோம். குண்டாஸ் போட வேண்டாம்” எனச் சொல்கிறார்.

பதிலுக்கு பேசிய உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் என சொல்லப்படும் நபர் மூணு லட்சம் தாங்க எனச் சொல்கிறார். அடுத்த சில ஆடியோக்களில் காவல்நிலையத்தில் குற்றவாளிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போன், வாகனங்களை மீட்பது தொடர்பாக பேசப்பட்டது போல உள்ளது. இந்த செல்போன் உரையாடல் குறித்து விளாத்திகுளம் உதவி ஆய்வாளர் கங்கைநாதப்பாண்டியனிடம் கேட்டோம் " என்னை பழிவாங்கும் நோக்கில் எடிட் செய்யப்பட்டு அந்த ஆடியோ பதிவேற்றப்பட்டிருக்கு.

கைது செய்யப்பட்ட ஆடு திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள்

இந்த வழக்குல தொடர்புடைய மேலும் 2 குற்றவாளிகளை பிடிப்பதற்காகத்தான், இப்படி குற்றவாளிகளிடம் அவர்களை காப்பாற்றுவது போலவும், அவர்களை நம்ப வைக்க பணம் கேட்டுபேசினேன். இதனையறிந்த குற்றவாளிகள் என்னை சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தற்போது நான் பேசிய ஆடியோக்களை முழுமையாக பதிவிடாமல் எடிட் செய்து பதிவிட்டுள்ளனர். நான் நிலுவையில் உள்ள பல குற்ற வழக்குகளை கண்டுபிடிச்சிருக்கேன். தன்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காகத்தான் சம்பந்தமில்லாத, ஆதரமில்லாத தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது” என்றார்.

இந்த நிலையில் உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ”இந்த உதவி ஆய்வாளர் கங்கைநாதப்பாண்டியன், திருட்டு, கொள்ளை போன்ற நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வழக்குகளை கையில் எடுத்து துரிதமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து திருடப்பட்ட பொருட்களை மீட்பதில் அதிக கவனம் செலுத்தி திறம்படச் செயல்பட்டார். அதற்காக இவர் பலமுறை பாராட்டுச் சான்றிதழ்கள், வெகுமதிகளை எஸ்.பியிடமிருந்தும், கலெக்டரிடமிருந்தும் பெற்றுள்ளார்” என்கின்றனர் சக போலீஸார்.

உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆடுகள்

இந்த நிலையில், உதவி ஆய்வாளர் கங்கைநாதப்பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்த கடிதத்தில், “என்னிடம் எந்த விசாராணையும் மேற்கொள்ளாமல் என்னை ஆயுதப்படைக்கு மாற்றியது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக எனது பணியை துறக்க முன் வந்துள்ளேன். இதற்கு ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/bribe-of-rs-3-lakh-not-to-put-kundas-viral-audio-si-who-resigned-from-the-post

அய்யா வைகுண்டர் அவதார தினம்: "எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே!" | பொன்மொழிகள்

அய்யா வைகுண்டர் பொன்மொழிகள்

கோபமாய் விள்ளாதே குவியச் சிரியாதே

பாவத்தைக் காணாதே பாராக்கிரமம் காட்டாதே

ஆக்கிரமம் எல்லாம் அடக்கியிரு என்மகனே

தாக்கிரவான் ஆகிடினும் சற்றும் பகையாதே

அய்யா வைகுண்டர் பொன்மொழிகள்

பொல்லாதாரோடு பொறுமை உரை மகனே

கோபத்தைக் காட்டாதே கோளோடு இணங்காதே!

அய்யா வைகுண்டர் பொன்மொழிகள்

சத்தியம் தான் மறந்து மத்திபத்தைச் செய்யாதே

மத்திபசெய்தாயானால் மனநாகம் தீண்டிவிடும்

அய்யா வைகுண்டர் பொன்மொழிகள்

நீ பெரிது நான் பெரிது

நிச்சயங்கள் பார்ப்போம் என்று

வான் பெரிது என்று அறியாமல்

மாள்வார் வீண் வேதம் உள்ளோர்

அய்யா வைகுண்டர் பொன்மொழிகள்

அன்பு குடிகொண்ட அதிகமங்கா நீங்களெல்லாம்

பொறுத்து இருங்கோ பூலோகம் ஆள வைப்பேன்

அய்யா வைகுண்டர் பொன்மொழிகள்

ஆசை வையாதுங்கோ அவகடம் செய்யாதுங்கோ

ஞாயமுறை தப்பி நன்றி மறவாதுங்கோ

அய்யா வைகுண்டர் பொன்மொழிகள்

எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே

வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!

அய்யா வைகுண்டர் பொன்மொழிகள்

கொத்தைக் குறையாதே குறை மரக்கால் வையாதே

உபதேசம் சொல்லும் கூலி உடன் கையில் கொடுத்திடுங்கோ

அய்யா வைகுண்டர் பொன்மொழிகள்

எளியோடைக் கண்டால் ஈந்து இரங்கிடு நீ

வரம்பு தப்பாதே வழி தவறி நில்லாதே

அய்யா வைகுண்டர் பொன்மொழிகள்

நல்ல மகனே வரும் நற்காலம்

செல்ல மகனே தொலையுமே என் கணக்கு



source https://www.vikatan.com/ampstories/spiritual/gods/some-philosophical-quotes-of-ayya-vaikundar

மாயமாகும் கவுன்சிலர்கள்?! - களைகட்டும் கடலூர் மேயர் தேர்தல்... திமுக அமைச்சர்களுக்கு `செக்’?!

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைப்பெற்றது. 45 வார்டுகளைக் கொண்ட இந்த மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க நேரடியாக 27 இடங்களையும், அ.தி.மு.க 6 இடங்களையும், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலா 3 இடங்களையும், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் தலா ஒரு இடங்களையும், சுயேட்சைகள் 3 இடங்களையும் பிடித்தனர். தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே இரண்டு சுயேட்சைகளை வளைத்துப் போட்டது தி.மு.க. இதன்மூலம் தி.மு.க கூட்டணி கவுன்சிலர்களின் பலம் 36 ஆக அதிகரித்தது.

கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தல்

தொடர்ந்து புதிய மாநகராட்சியின் 45 கவுன்சிலர்களும் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்றுக்கொண்ட வார்டு கவுன்சிலர்கள் தங்களின் மேயர் மற்றும் துணை மேயர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடக்கவிருக்கிறது. போட்டிகள் இருந்தால் தேர்தலும், போட்டிகள் இல்லையென்றால் ஒருமனதாகவே மேயர் மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முதல் மாநகராட்சியின் முதல் மேயர் பதவியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட வேண்டுமென்று நினைத்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தனது தீவிர ஆதரவாளரான கடலூர் நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரியை களமிறக்கினார். அதேபோல மாவட்டப் பொருளாளரான வி.எஸ்.எல்.குணசேகரன் தனது மனைவி கீதாவை மேயராக்கிவிட வேண்டுமென்று களமிறங்கினார். உள்ளாட்சி தேர்தலில் கட்சித் தலைமை இவர்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பாகவே, தி.மு.க கட்சித் துண்டுடன் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார் நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரி.

கீதா குணசேகரன்

”நகரச் செயலாளர் என்றால் கட்சியின் கட்டுப்பாட்டை மீறலாமா ? கட்சித் தலைமை அறிவிக்கும் முன்பே தன்னிச்சையாக எப்படி வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்? வேட்பாளர் பட்டியலில் பெயர் இருப்பதை அவருக்கு சொன்னது யார்?” என்று தலைமைக்கு போன் போட்டு புகார் கடிதம் வாசித்தனர் கட்சியின் மூத்த உறுப்பினர்கள். ஆனால் அந்த புகார்களை தவிடு பொடியாக்கிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தனது அதிகாரத்தால் கே.எஸ்.ராஜா மற்றும் அவரது மனைவி இருவருக்குமே சீட் வழங்க நொந்துபோனார்கள் கட்சி நிர்வாகிகள்.

கீதா குணசேகரன், சுந்தரி ராஜா இருவரும் வெற்றிபெற்ற நிலையில், நகரச் செயலாளரான கே.எஸ்.ராஜா தனது சொந்த வார்டிலேயே தோல்வியடைந்தார். அதையடுத்து மேயர் பதவியை பிடிக்க கே.எஸ்.ராஜாவும், வி.எஸ்.எல் குணசேகரனும் காய் நகர்த்தி வந்த நிலையில், கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரியை மேயர் வேட்பாளராக அறிவித்தது கட்சித் தலைமை. அந்த அறிவிப்பின் பின்னணியில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது செல்வாக்கை செலுத்தினார் என்று தகவல் வெளியாக, உஷ்ணமானது வி.எஸ்.எல் குணசேகரன் தரப்பு.

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

``இதுவரை கட்சி நமக்கு பெரிதாக எதையும் செய்யவில்லை. இனிமேல் செய்யப்போவதும் இல்லை” என்று நினைத்த வி.எஸ்.எல் தரப்பு தனது சதுரங்க ஆட்டத்தை துவக்கியது. அடுத்தடுத்த நிமிடங்களில் செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு மாயமானார்கள் தி.மு.கவின் கவுன்சிலர்கள். மாயமான அந்த கவுன்சிலர்கள் அனைவரும் தற்போது வி.எஸ்.எல் குணசேகரன் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களுடன் பா.ஜ.க மற்றும் பா.ம.கவின் இரண்டு கவுன்சிலர்களும் ஐக்கியமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த காய் நகர்த்தலின் பின்னணியில் கடலூர் தொகுதியின் எம்.எல்.ஏ அய்யப்பன் இருப்பதாக அடித்துக் கூறுகிறது எதிர் தரப்பு.

மாயமான தி.மு.க கவுன்சிலர் ஒருவரிடம் பேசினோம். தனது அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேச ஆரம்பித்தவர், ``எங்களை யாரும் கடத்தவில்லை. நாங்கள்தான் தலைமறைவாக இருக்கிறோம். நாங்கள் ஒவ்வொருவரும் பலமாக செலவு செய்து வெற்றிபெற்றிருக்கிறோம். அதனை ஈடுகட்ட வேண்டும். தலைமை சொல்லிவிட்டதே என்று நாங்கள் போண்டியாக முடியாது” என்றார் ஆவேசமாக. கவுன்சிலர்கள் மாயமான விவகாரம் கடலூர் முழுவதும் பரவியதையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் தொடர் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

அமைச்சர் சி.வி கணேசன்

இது ஒருபுறமிருக்க நெல்லிக்குப்பம் நகராட்சியிலும் தலைமைக்கு எதிராக கம்பு சுற்றுகின்றனர் தி.மு.க கவுன்சிலர்கள். நெல்லிக்குப்பம் நகராட்சியின் சேர்மன் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 30 வார்டுகளைக் கொண்ட இந்த நகராட்சியில் தி.மு.க நேரடியாக 13 இடங்களையும், காங்கிரஸ், முஸ்லிம் லீக், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு இடத்தையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டு இடங்களையும் பிடித்தது. இவர்கள் தவிர 7 சுயேட்சைகள் வார்டுகளைக் கைப்பற்றியிருந்தனர். தி.மு.க தரப்பில் ஆர்.ஆர். மெட்ரிக் பள்ளியின் உரிமையாளரும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கௌரவ செயலாளருமான ராதாகிருஷ்ணன் மனைவி ஜெயந்தி ராதாகிருஷ்ணன்தான் சேர்மன் வேட்பாளர் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் கூட்டணி கட்சியான வி.சி.கவுக்கு அந்த சேர்மன் பதவி ஒதுக்கப்பட்டதால் கடும் அதிருப்தியடைந்த ராதாகிருஷ்ணன் தரப்பு, தி.மு.கவின் 13 கவுன்சிலர்கள் மற்றும் 7 சுயேட்சை கவுன்சிலர்களை இரவோடு இரவாக ரகசிய இடத்துக்கு அழைத்து சென்றதாக தகவல் வெளியாகியிருக்கிறது. “சேர்மன் பதவி உங்களுக்குத்தான் என்று அமைச்சர் சி.வெ.கணேசன் வாக்குறுதி கொடுத்ததால்தான் ராதாகிருஷ்ணன் வைட்டமின்களை தண்ணீர் மாதிரி கடன் வாங்கி செலவு செய்தார். கட்சி பணம் கொடுக்காத நிலையில் சேர்மன் வேட்பாளர் என்ற முறையில் மற்ற வேட்பாளர்களின் செலவையும் ராதாகிருஷ்ணன்தான் பார்த்தார்.

அப்படி இருக்கும்போது கூட்டணி கட்சிக்கு ஒதுக்குவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். கடந்த 4 தேர்தல்களிலும் சேர்மன் பதவி தனிப்பிரிவினரிடம் இருந்ததால்தான் இந்தமுறை பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது கூட்டணி என்ற பெயரில் மீண்டும் தனிப்பிரிவினருக்கே ஒதுக்குவது எப்படி சரியாக இருக்கும் ? மக்கள் எப்படி அதனை ஏற்றுக்கொள்வார்கள் ? இதை முன்பே சொல்லியிருந்தால் நாங்கள் ஏன் கந்து வட்டிக்கு கடன் வாங்கி இவ்வளவு செலவு செய்திருக்கப் போகிறோம் ? எங்களை நம்பவைத்து ஏமாற்றிய கட்சி இனி எங்களுக்கு தேவையில்லை. மறைமுகத் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்” என்று கொதிக்கிறது ராதாகிருஷ்ணன் தரப்பு.

தி.மு.க கவுன்சிலர்களின் இந்த ஆடுபுலி ஆட்டத்தால் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர் மாவட்டத்தின் இரண்டு அமைச்சர்களும்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/in-cuddalore-the-councillors-have-abducted-by-dmk-over-municipal-corporation-mayoral-election