Ad

வியாழன், 19 மே, 2022

கியான்வாபி மசூதி விவகாரம்: ``அயோத்தியில் ராமர் எப்படியோ அதுபோலத்தான் காசியில் சிவன்" - கங்கனா ரனாவத்

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியின் சுற்றுப்புறச் சுவர்களில் உள்ள இந்துக் கடவுள்களை வழிபட அனுமதிவேண்டி தொடரப்பட்ட வழக்கில், விசாரணைக்குழு ஒன்றை அமைத்து ஆய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டதில், மசூதியினுள் சிவலிங்கம் இருப்பதாக விசாரணைக்குழு கூறியதையடுத்து, அந்தப் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல நீதிமன்றம் தடைவிதித்தது. பின்னர் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோது, ஏற்கெனவே அலகாபாத் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி, மசூதியினுள் முஸ்லிம்கள் தொழுகை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் கூறியது. இந்த நிலையில், ``காசியின் ஒவ்வொரு துகளிலும் சிவன் இருக்கிறார்" என நடிகை கங்கனா ரனாவத் கூறியிருக்கிறார்.

`தாகத்' எனும் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு வழிபாட்டுக்காக, படக்குழுவினருடன் நடிகை கங்கனா ரனாவத் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேற்று சென்றிருந்தார்.

அப்போது வழிபாடு முடித்துவிட்டு, வெளியே வந்த கங்கனா ரனாவாத்திடம், கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த கங்கனா, ``மதுராவின் ஒவ்வொரு துகளிலும் பகவான் கிருஷ்ணரும், அயோத்தியின் ஒவ்வொரு துகளிலும் பகவான் ராமரும் எப்படி இருக்கிறார்களோ, அதேபோல காசியின் ஒவ்வொரு துகளிலும் சிவபெருமான் இருக்கிறார். அவருக்கென தனியாக ஓர் அமைப்பு தேவையில்லை. ஒவ்வொரு துகளிலுமே அவர் வசிக்கிறார்" எனக் கூறினார்.



source https://www.vikatan.com/news/india/lord-shiva-is-in-every-particle-of-kashi-actress-kangana-ranaut-said-in-gyanvapi-mosque-row

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக