Ad

செவ்வாய், 24 மே, 2022

அமெரிக்கா: பள்ளியில் துப்பாக்கிச் சூடு; 19 குழந்தைகளைச் சுட்டுக்கொன்ற 18 வயது இளைஞன்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலிருக்கும் தொடக்கப்பள்ளியொன்றில், 18 வயது இளைஞர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியாவுக்கு மேற்கே சுமார் 130 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் யுவால்டே நகரில் தொடக்கப்பள்ளி ஒன்றில், 18 வயது இளைஞர் ஒருவர் நேற்று காலை 11 மணியளவில் துப்பாக்கியுடன் நுழைந்திருக்கிறார். அப்போது திடீரென அந்த இளைஞர் பள்ளி வகுப்பறைகளை நோக்கி கண்மூடித்தனமாகச் சுட ஆரம்பித்திருக்கின்றனர். எதிர்பாராத நேரத்தில் நிகழ்ந்த இந்த கொடூர தாக்குதலில் 18 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வெள்ளை மாளிகை-அமெரிக்கா

அதையடுத்து மற்ற குழந்தைகளை காக்கும் பொருட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த இளைஞரை சுட்டுக் கொன்றனர். 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெற்றோர்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், வெள்ளை மாளிகையில் அரைக்கம்பத்தில் கொடி பறக்க விடப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/international/in-america-19-children-dead-in-primary-school-by-unexpected-gunshot

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக