Ad

சனி, 9 ஏப்ரல், 2022

Parkinson's disease: அதிநவீன சிகிச்சை மையத்தை திறந்த Gleneagles Global Health City

பார்கின்சன் நோய்க்கான பிரத்தியேக க்ளினிக் மையம் ஒன்றை தொடங்கியுள்ளது சென்னையில் உள்ள ஒரு முன்னணி மல்டி-ஸ்பெஷாலிட்டி மையமான க்ளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி (GGHC). மூளையின் ஆழ்ந்த பகுதியில் தூண்டுதல் (DBS) அறுவை சிகிச்சைக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய பார்கின்சன் நோய்க்கான விரிவான பராமரிப்பை வழங்குகிறது இந்த சிகிச்சை மையம்.

இங்கு பொருத்தப்பட்டுள்ள மெட்ரோனிக் ஸ்டீல்த் - 8 நியூரோநாவிகேஷன் கருவிகள் மூளையின் மையக்கருவை அபாரமாக இலக்கு வைப்பதற்கும், DBS எலக்ட்ரோட்களை துல்லியமாக வைப்பதற்கும், நோயாளிக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது.

உலகளவில் சுமார் 10 மில்லியன் மக்கள் பார்கின்சன் நோயுடன் வாழும் நிலையில் சமீப காலங்களில் DBS அறுவை சிகிச்சையின் மூலம் 1,60,000 க்கும் அதிகமான நோயாளிகள் பயனடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது.

Parkinson's disease

பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதிற்கு முன்பே 4% பேருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்நோயாளிகளுக்கான விரைவான சிகிச்சையை தடையற்ற முறையில் வழங்குவதே புதிதாக தொடங்கப்பட்டுள்ள இச்சிகிச்சை மையத்தின் முதன்மை நோக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளில் CPDC ஆனது 50க்கும் மேற்பட்ட தீவிர பார்கின்சன் நோயாளிகளை சிகிச்சை அளித்தது மட்டுமல்லாது கொரோனா பெருந்தொற்று இருந்த இந்த 2 ஆண்டுகளில் 10 நோயாளிகளுக்கு DBS அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து க்ளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி - சென்னையின் நரம்பியல் மற்றும் வலிப்பு நோய்க்கான மேம்பட்ட மையத்தின் இயக்குனரான டாக்டர் தினேஷ் நாயக் பேசுகையில் “ நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசும்போது “பார்கின்சன் நோயாளிகளுக்கு தேவைப்படும் விரிவான கவனிப்பு இங்கு இல்லாமலேயே இருந்தது, CPDC சென்னை இந்த இடைவெளியைக் குறைக்க உதவும் ” என்று கூறினார்.

Parkinson's disease

அம்மையத்தின் நரம்பியல் அறுவை சிகிச்சை மூத்த ஆலோசகரான டாக்டர் நைஜல் பீட்டர் சிம்ஸ், "பெரும்பாலான பார்கின்சன் நோய் பிரச்சனைகளுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை, ஆனால் மற்ற சிகிச்சைகள் பலனளிக்காத நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. மேம்பட்ட தொழில்நுட்பம், பல வருட அனுபவம் ஆகியவை DBS அறுவை சிகிச்சைகளை இன்று மிகவும் பாதுகாப்பானதாக ஆக்கியுள்ளன” என்று கூறினார்.

நரம்பியல் நிபுணர் டாக்டர் வெங்கட்ராமன் கார்த்திகேயன் பேசுகையில் "பார்கின்சன் நோய் ஒரு நரம்பியல் சிதைவு நிலை, இது மூளை செல்களில் டோபமைன் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. நோய் முற்றும் நிலையில் மருந்துகளின் செயல்திறன் குறைகிறது. மூளையின் ஆழ்ந்த பகுதியில் மேற்கொள்ளப்படும் தூண்டுதல் அறுவை சிகிச்சையானது டிஸ்கினீசியா போன்ற மருந்துகள் தொடர்பான பக்க விளைவுகளைக் குறைப்பதற்கும் பெரிய அளவில் உதவும்” என்று கூறினார்.

க்ளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னையின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டாக்டர். அலோக் குல்லர் கூறுகையில் “பார்கின்சன் நோய்க்கான அதிநவீன தொழில்நுட்பங்கள், அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் ஆகியவை கொண்ட இந்த மேம்பட்ட மையத்தின் துவக்கம், பார்கின்சன் நோய் தொடர்பான பிரச்சினைகளுக்கு சிறந்த சிகிச்சைக்கு வழி வகுக்கிறது. இது பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு வரம்”



source https://www.vikatan.com/health/healthy/gleneagles-global-health-city-gghc-chennai-launched-an-advanced-comprehensive-parkinsons-disease-clinic

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக