ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய யூபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி ஆகிய போட்டித் தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் திருச்சியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் ஜூலை 31-ம் தேதி நடைபெற்றது.
இந்த ஆலோசனை முகாமில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் IAS கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக யூபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு ஒருவருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வினை சிவராஜவேல் ஐஏஎஸ் அகாடமி நடத்தியது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் பேசுகையில், “என்னுடைய தந்தையின் ஆசைக்கேற்ப, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் நான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு சிவில் சர்வீஸ் தேர்விற்குப் படிக்க ஆரம்பித்தேன். அனைத்து பாடங்களுமே படிக்க முடிபவைதான். எனக்கு இது வராது, அது வராது என மற்றவர்கள் கூறுவதைப் பற்றியோ, அல்லது உங்களுக்கே தோன்றுகிறது என்றோ தவிர்க்காதீர்கள். முக்கியமாக உங்களுக்கு எதில் பயம் இருக்கிறதோ, எந்த விஷயம் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களோ அதனைத் திரும்பத் திரும்பச் செய்யுங்கள். கண்டிப்பாக உங்களால் அவற்றை வெல்ல முடியும். என்னுடைய பயிற்சி காலத்தில் நான் எழுதிய மாதிரித் தேர்வுகள்தான் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தன. பயிற்சித் தேர்வுகளும், ஒவ்வொரு செய்திகளிலும் நுணுக்கமாக நாம் கற்கும் விஷயங்களும்தான் நம்மை இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற வைக்க உதவும். ஆர்வம் (interest) மட்டும் இல்லாமல் வேட்கையும் (passion) இருந்தால் கண்டிப்பாக நம்மால் வெற்றி பெற முடியும்.
ஆலோசனை முகாம்
ஒரு டாபிக்கைப் படிக்கையில் நானாகத் தேடி அதுகுறித்து ஒரு நோட்ஸ் எடுத்து வைத்துக் கொள்வேன். குறைவாகவே புத்தகங்களை வைத்திருப்பேன். அதையே திரும்பத் திரும்பப் படிக்கும் போது, எனக்கு முழுதாக அந்தப் புத்தகங்களில் இருக்கும் அனைத்துமே தெரியும். அப்படி படித்துத்தான் வெற்றி பெற்றேன். தேர்விற்குப் பயந்து கொண்டே இருக்காமல், அந்தப் பயத்தை உங்களுடைய வாய்ப்பாக மாற்றும் போது நீங்கள் வெற்றி பெறுவது நிச்சயம். படிக்கும்போது என்ஜாய் செய்து படியுங்கள். தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பது போரடிக்கிறது என்றால், அதுவரை நீங்கள் படித்தவற்றை எழுதிப் பாருங்கள். ஒருமுறை எழுதுவது ஐந்து முறை படிப்பதற்குச் சமம். உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் செதுக்கியதாக இருக்க வேண்டும். அதை மகிழ்வாகச் செதுக்குங்கள்” என்றார்.
தொடர்ந்து யூபிஎஸ்சி தேர்வில் 2021-2022 பேட்சில் அகில இந்திய அளவில் 338-வது இடம் பெற்று தேர்ச்சி பெற்ற ஏஞ்சலின் ரெனிட்டா பேசும்போது, “தஞ்சாவூர் மாவட்டம்தான் என்னுடைய சொந்த ஊர். அரசுப் பள்ளியில்தான் படித்தேன். அதனாலேயே கல்லூரி காலத்தில் எனக்கு நிறைவே தாழ்வு மனப்பான்மை இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது, விகடனின் மாணவ பத்திரிகையாளராகத் தேர்வானேன். அதன்பிறகுதான் எனக்கு பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவம்தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறது. யூபிஎஸ்சி தேர்வெழுதிய முதல் முயற்சியில் நான் தோல்வியடைந்தேன். இரண்டாம் முயற்சியில் முதல்நிலை தேர்விற்கு மட்டுமல்லாது, முதன்மைத் தேர்விற்கும் சேர்த்தே தீவிரமாகப் படித்து வெற்றி பெற்றேன்” என்றார்.
சிவராஜவேல்
சிவராஜவேல் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனரும் இயக்குநருமான S.சிவராஜவேல், யூபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயார் செய்வதற்கான சுலபமான வழிமுறைகள் பற்றி விரிவாகப் பேசினார். போட்டி தேர்வுகளுக்கான சிலபஸின் முக்கியத்துவம் குறித்தும், அதனை எவ்வாறு கவனமாகப் படிக்க வேண்டும் என்றும், முந்தைய வருடக் கேள்வித்தாள்களைப் படிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் கூறினார். தேர்வுகளின் பேட்டர்ன், நடப்பு நிகழ்வுகளின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களிடம் பேசினார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ரமணி மற்றும் சத்யனந்தி ஆகியோரும் தங்களுடைய பயிற்சி அனுபவங்களையும், தொடர்ந்து போட்டித் தேர்வர்களுக்கான ஊக்க உரைகளையும் வழங்கினர். தொடர்ந்து மாணவர்கள் கேள்விகள் கேட்க அதற்கு மாவட்ட ஆட்சியர், மற்றும் சிவராஜவேல் ஐஏஎஸ் அகாடமியில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் பதிலளித்தனர்.
இறுதியாக, ஸ்காலர்ஷிப் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 1400-க்கும் அதிகமான மாணவர்கள் இந்த ஆலோசனை முகாமில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதியில் வேட்டைநாய்களுடன் பலர் சுற்றித்திரிவதாக பழனி வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து பழனி வனச்சரக அலுவலர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் தொப்பம்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
வேட்டைநாய்களுடன் கைது செய்யப்பட்டவர்கள்
அப்போது நாற்பதுக்கும் மேற்பட்டோர் வேட்டை நாய்களுடன் காட்டுப்பகுதிக்குள் சுற்றி திரிந்தது தெரியவந்தது. அவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் அனைவரும் கரூர் மாவட்டம், தோகைமலை அடுத்த உள்ள பாதிரிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு பாரிவேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பழனி வனச்சரக அலுவலர் பழனிகுமார் தலைமையில் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு ஒரே சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் ஆண்டுதோறும் பாரிவேட்டையில் ஈடுபடுவதும், இந்த ஆண்டு பழனி பகுதியில் பாரிவேட்டையில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.
வனவிலங்கு வேட்டை
பாரிவேட்டையில் வேட்டையாடப்படும் முயல்களை திருச்சி மாவட்டத்தில் உள்ள வீரப்பூரில் உள்ள பொன்னர்-சங்கர் கோயிலில் வைத்து வழிபாடு நடத்துவதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து 26 வேட்டை நாய்களுடன் 46 பேரைக் கைதுசெய்த வனத்துறையினர் பாரிவேட்டையில் ஈடுபடுவது சட்டப்படி தவறு என்றும், இனி வேட்டையாடக்கூடாது எனவும் எச்சரித்தனர். தொடர்ந்து வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் விதித்த வனத்துறையினர் கைதுசெய்யப்பட்டவர்களை எச்சரித்து அனுப்பினர்.
நான்காம் நாள் முடிவில் புள்ளிபட்டியலில் இந்திய ஆறாவது இடம்!
Table tennis Men’s team: பதக்கத்தை உறுதி செய்தது இந்திய அணி!
நைஜீரியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது இந்தியா! தமிழ்நாட்டு வீரர்கள் சத்யனும் ஷரத்தும் அசத்தல்!
Swimming - Men’s 50m Backstroke: இறுதிப்போட்டியில் ஐந்தாவது இடம் பிடித்தார் ஸ்ரீஹரி நடராஜ்!
இதற்குமுன் 100M இறுதிப்போட்டியில் ஏழாவது இடம் பிடித்திருந்தார்! பதக்கம் வெல்லாவிட்டாலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கண்களையும் அவர்மேல் திரும்பியுள்ளார் ஸ்ரீஹரி!
Boxing men’s 80kg - ஆஷிஷ் குமார் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்!
Men's Judo 61 kg: ஜாஸ்லின் சிங் சைனி வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தோல்வி!
Badminton - Mixed team: சிங்கப்பூருக்கு எதிரான அரைஇறுதியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை!
பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் சிந்து 21-11,21-12 என்ற நேர் செட்களில் வெற்றி!
சிந்து
Badminton - Mixed team: சிங்கப்பூருக்கு எதிரான அரைஇறுதியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை!
ஆண்கள் இரட்டையர் போட்டியில் சாத்விக் மற்றும் சிரக் வெற்றி!
To let a 4-1 lead to slip in the final qtr from India vs England is poor. Yes, harsh umpiring decisions against us, but the indiscipline which led to 3 cards is inexcusable. Good news - We escaped with a 4-4 draw defending with 9 men & still have a good chance of topping the pool
Judo, women -57 kg: காலிறுதியில் சுச்சிக்கா தரியால் தோல்வி. ஆனால் Repechage முதல் சுற்றில் வெற்றி பெற்றதால் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்பார்!
சுச்சிக்கா தரியால்
Squash Women's Singles - Plate Quarter-Final: சுனைனா சாரா குருவில்லா இலங்கையின் சனித்மா சினலியை 11-3, 11-2, 11-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்! இதன்மூலம் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்!
Men's Judo 61 kg: அரையிறுதியில் ஜாஸ்லின் சிங் சைனி தோல்வி. அடுத்து வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் நாத்தனை எதிர்கொள்கிறார்!
ஜாஸ்லின் சிங் சைனி
Boxing Men's 51 kg: காலிறுதிக்கு தகுதி பெற்றார் அமீத் பன்கல்!
அமீத் பன்கல்
Judo, Men -60 kg: காலிறுதியில் விஜய் குமார் யாதவ் தோல்வி!
Judo - women’s 48 kg: அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் சுசிலா தேவி!
சுசிலா தேவி
Judo, Men -60 kg: விஜய் குமார் யாதவ் காலிறுதிக்கு தகுதி பெற்றார்!
விஜய் குமார் யாதவ்Weightlifting Men's 81kg - Final
Weightlifting Men's 81kg - Final: அஜய் சிங் நான்காவது இடம் பிடித்தார்!
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா கடந்த ஜூலை 28ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பிரமாண்டமாக நடைபெற்ற இவ்விழா நிகழ்ச்சியில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் பாடலாசிரியர் அறிவு எழுதி, சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான 'என்ஜாயி எஞ்சாமி' பாடல் அனைவரது முன்னிலையிலும் பாடப்பட்டது. இதைப் பாடகி தீ, கிடாக்குழி மாரியம்மாள் சேர்ந்து பாடியிருந்தனர். ஆனால் இதை எழுதிப் பாடியிருந்த அறிவு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவரின் பெயர் ஏன் எந்த இடத்திலும் பதிவு செய்யப்படவில்லை என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வியெழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், அறிவு இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் "இப்பாடலை எழுதி, கம்போஸ் செய்து பாடியது நான். இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சிதான், அதில் சந்தேகமில்லை. ஆனால் இதை எழுதுவதற்கு யாரும் எனக்கு மெட்டுகள் தரவில்லை, ஒரு வார்த்தையைக்கூட யாரும் தரவில்லை. கிட்டதட்ட 6 மாதங்களாக தூங்காமல் கடுமையாக இதற்காக உழைத்திருக்கிறேன்.
இப்பாடல் வள்ளியம்மாள் போன்ற நிலம் இல்லாத தேயிலைத் தொழிலாளர்களைப் பற்றியது மட்டுமல்ல. என்னுடைய எல்லாப் பாடல்களும் ஒடுக்கப்பட்டத் தலைமுறைகளின் வலியைப் பற்றியது. இது போல் இன்னும் 10,000 நாட்டுப்புறப் பாடல்கள் இந்த மண்ணில் இருந்துள்ளது. இவை அனைத்தும் நம் முன்னோர்களின் வாழ்வியல், அவர்களின் நிலம் பற்றியது. இப்பாடலை இன்று அனைவரும் ஒரு அழகானப் பாடலாகப் பார்க்கிறார்கள். பல தலைமுறைகளின் வியர்வையும் இரத்தமும் கலந்த வலியைக் கேட்கும் படி இனிமையான பாடலாக உருவாக்கியுள்ளோம். நம் மரபுகளைப் பாடல் வழியாகக் கடத்தியுள்ளோம்.
நீங்கள் தூங்கும் போதுதான் உங்கள் செல்வங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன, விழித்திருக்கும்போது அல்ல. ஜெய்பீம் கடைசியில் உண்மைதான் எப்போதும் வெல்லும்" என்று கூறியுள்ளார்.
`கல்வி என்பது வியாபாரப் பண்டமல்ல; அது அனைத்து குடிமக்களுக்குமான உரிமை!' என மேடைப்பேச்சில் முழங்கும்போது கைத்தட்டல்கள் கிடைக்கலாம். ஆனால், நிதர்சனம் என்னவென்றால் கல்வி சேவைப் பட்டியலிலிருந்து மாற்றலாகி எப்போதோ வியாபாரப் பட்டியலுக்குச் சென்றுவிட்டது. படிப்பது அடிப்படை உரிமை, அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி என்பது அரசின் கொள்கை என பட்டிதொட்டியெங்கும் பள்ளிகளை அரசு திறந்தாலும், தரமான கட்டணக் கல்வி, சரளமான ஆங்கிலப் பேச்சு, 100% தேர்ச்சி என்ற தனியார் பள்ளிகளின் தாரக மந்திரத்தை நோக்கியே தமிழ்நாடு பெற்றோர்கள் தவம் கிடக்கின்றனர். தங்கள் சக்திக்கும் அப்பாற்பட்டு தங்கள் குழந்தைகளைத் தனியார்ப் பள்ளிகளில் சேர்க்கின்றனர். பல பெற்றோர்கள் தாங்கள் நினைத்ததுபோல குழந்தைகளைத் தலைசிறந்த மாணவர்களாக படிப்பை முடித்து வெளியில் கூட்டிச்சென்றாலும், பல இன்னல்களால் படிப்பைத் தொடரமுடியாமல் பாதியிலேயே தற்கொலை செய்துகொண்ட குழந்தைகளின் சடலத்தைச் சுமந்துசெல்லும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்... என்னக்காரணம்?'
கள்ளக்குறிச்சி வன்முறை..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் தனியார்ப் பள்ளி மாணவியின் மர்ம மரணம் தமிழ்நாட்டையே பதற்றத்தில் ஆழ்த்தியது. மாணவியின் மரணத்துகான உண்மைக் காரணம் என்னவென்று முழுமையாக உறுதிப்படுத்தப்படாத நிலையில் பள்ளி நிர்வாகிகள், போராட்டக்காரர்கள் என இருதரப்பிலும் கைது நடவடிக்கையை முடுக்கி விட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இதேபோல கடந்த ஓராண்டில் பாலியல் தொந்தரவு, படிப்புச் சுமை, ஆசியர்களின் அழுத்தம், தாழ்வுமனப்பான்மை என பல காரணங்களால் தனியார் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. தொடர்ச்சியானப் புகார்களில் சிக்கும் தனியார்ப் பள்ளிகளின் பட்டியலும் நீண்டுகொண்டிருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், கணியாமூர் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தனியார்ப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் சூறையாடியதில் `பள்ளிக்கு ரூ.50 கோடி நட்டம், 4,000 மாணவர்களின் மாற்றுச்சான்றிதழ்கள் தீயில் எரிந்து நாசம்' எனக்கூறி தனியார்ப் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என தனியார்ப் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். எதிர்தரப்பில், `பள்ளி மாணவர்களின் உயிர் முக்கியமா சான்றிதழ்கள் முக்கியமா? தொடர் குற்றச்சாட்டுகளில் சிக்கும் தனியார்ப் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும்' என சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்களும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். இருதரப்பு நியாயங்களையும் கேட்டறிந்தோம்.
தனியார் பள்ளி
`தனியார்ப் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும்'
``தனியார்ப் பள்ளிகளில் நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்பதற்கு ஆளில்லை; பணபலத்தாலும், பயமுறுத்தலாலும் எந்தத் தகவலும் வெளியில் கசியாதபடி பார்த்துக்கொள்கிறார்கள். படிப்பு, மதிப்பெண்களைக் காரணம்காட்டி மாணவர்கள், பெற்றோர்களை வாய்மூட வைத்திருக்கின்றனர். மாணவர்கள் தங்கள் பிரச்னைகளை வெளியில் சொல்வதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது" என்கிறார் கல்வியாளர் எஸ்.உமா மகேஸ்வரி.
கல்வியாளர் எஸ்.உமா மகேஸ்வரி
குறிப்பாக, ``பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்பதற்காக பெற்றோர்களின் வற்புறுத்தலாலும், ஆசிரியர்களின் அறிவுறுத்தாலும் தனியார்ப் பள்ளிகளின் ஹாஸ்டலில் தங்கி படிக்கவைக்கப்படும் மாணவர்கள்தான் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். பள்ளியில் நடக்கக்கூடிய பிரச்னைகளை வீட்டில் பெற்றோர்களிடம் கூற முடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். ஹாஸ்டல், ரெசிடென்சியல் பள்ளிகளில் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்பதே வெளியில் தெரிவதில்லை.
சமீபத்தில்கூட விடுமுறையில் வந்த தனியார்ப் பள்ளிக் குழந்தைகள் சிலரிடம் நான் சாதாரணமாகப் பேசியபோது, பள்ளியில் அவர்களுக்கு என்னென்னக் கொடுமைகள் நடக்கின்றன, பாலியல் சுரண்டல்கள் நடக்கின்றன என்பதையெல்லாம் 13 வயதுக்குள்ளான குழந்தைகளே சொல்கிறார்கள். காலங்காலமாகவே ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் பள்ளிகளில் Abuse நடக்கிறது. தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்றுத் தெரியாமல் இருந்துவரும் மாணவர்கள் வளரிளம் பருவத்தில் விவரம் தெரிந்து புரிந்துகொள்ளும்போதுதான் இதை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் பெற்றோர்களிடம் சொன்னாலும்கூட பெரிய அளவில் பள்ளி நிர்வாகத்தை கேள்விகேட்காமல், படிப்பையே முக்கியமாகப் பார்க்கிறார்கள். இதனால் ஏற்றுக்கொள்ள முடியாத பல விளைவுகள் நேரிடுகிறது. அரசு, தனியார் என எல்லாப் பள்ளிகளிலுமே இது நடக்கிறது. வெளியில் வருவது 10% தான், வராதது 90%.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை
எந்தப் பள்ளியாக இருந்தாலும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள்தானே வருகிறது, ஒரு பள்ளியில் நடக்கும்போதே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எல்லாப் பள்ளிகளுக்கும்சென்று ஆய்வு நடத்தவேண்டுமா இல்லையா? ஆனால் செய்யமாட்டார்கள். காரணம், எல்லாமே இங்கு பணம்தான். பணத்தைக்கொடுத்து அதிகாரிகளை சரிகட்டிவிடுகிறார்கள் தனியார்ப் பள்ளி நிர்வாகிகள். இதுமட்டுமல்ல, அரசியல்வாதிகள்தான் எங்குபார்த்தாலும் தனியார் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அரசும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை. குற்றவாளிகள் யார் என்று தேடினால் அவர்களுக்குள்ளாகத்தான் இருப்பார்கள்.
கல்வியாளர் எஸ்.உமா மகேஸ்வரி
தனியார்ப் பள்ளிகளை அரசாங்கமே வளர்த்துவிடுகிறது. கல்வி உரிமை சட்டம் (Right To Education Act) மூலம் தனியார் பள்ளிகளில் 25% இலவச இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் படிக்க, தனியாருக்கு கோடிக்கணக்கில் அரசாங்கம் பணம் கொடுக்கிறது. ஏன்? அரசுதானே மக்களுக்கு கல்வி கொடுக்க வேண்டும். ஒருபக்கம் தனியார் பள்ளிகளுக்கு தாராளமாக அங்கீகாரம் கொடுத்துவிட்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிறது, அதனால் ஆசிரியர்களை தூக்குகிறோம் என்றால் என்ன நியாயம்? யார் காசுகொடுத்தாலும் அங்கீகாரம் கொடுத்துவிடுவதா? இருப்பினும் நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகள் இன்று அங்கீகாரம் இல்லாமல்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அரசு உத்தரவுகள், விதிமுறைகளெல்லாம் வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. செயல்பாட்டில் இல்லை. அரசின் எந்த உத்தரவுகளையும் தனியார் பள்ளிகள் மதிப்பதில்லை; குழந்தைகளை அடிக்கக்கூடாது என்பதும் அரசுப் பள்ளிகளுக்குதான், தனியார் பள்ளிகளில் போய்ப்பாருங்கள் உண்மை புரியும்" என்றார்.
மேலும், ``அரசாங்கம் முறையாக அரசுப் பள்ளிகளை சீரமைத்து, அனைத்து தொழில்நுட்பக் கட்டமைப்புகளையும் கொண்டுவந்தால் பெற்றோர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்லப்போகிறார்கள். இப்போதும்கூட அரசு பள்ளிகள் திறந்து இத்தனை நாள்களாகியும் நோட்டு, புத்தகங்கள் கொடுக்கப்படவில்லை. உண்மையாலுமே மக்களுக்கான அரசாக இருந்தால் ஒரே உத்தரவில் இவை அனைத்தையும் மாற்றவேண்டும். துணிந்து முடிவெடுக்கவேண்டும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் சுதந்திரமாக செயல்பட அரசு அனுமதிக்கவேண்டும். அரசுப் பள்ளிகளில் இருப்பதுபோல தனியார் பள்ளிகளிலும் `பள்ளி மேலாண்மைக் கமிட்டி(SMC)' ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து பிரச்னை வரக்கூடிய தனியார் பள்ளிகளை அரசாங்கமே எடுத்து நடத்த வேண்டும். முதலில் ஒரு நான்கு பள்ளிகளை அரசுடமையாக்கிப் பாருங்கள், பிறகு எல்லாம் தன்னால் மாறும்!" என்கிறார் கல்வியாளர் எஸ்.உமா மகேஸ்வரி.
பள்ளிக்கல்வித்துறை
`தனியார் பள்ளிகளைப் பாதுகாக்க தனிச்சட்டம் வேண்டும்'
``தனியார் பள்ளிகள் மிகமிக முக்கியம். தமிழ்நாட்டில் 15,000 பள்ளிகள் இருக்கின்றன. அரசு கணக்குப்படி அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் 12,500. மேலும், 55,000 பள்ளி வாகனங்கள் இயங்குகின்றன. சுமார் 6 லட்சம் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பிற ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அரசு விதிப்படி, அனைத்து அனுமதிகளையும் பெற்றுதான் பள்ளிகள் நடத்தப்பட்டுவருகின்றன. பள்ளிகளின் தரம், தேவையைப் பொறுத்து கட்டணங்கள் நியமிக்கப்படுகின்றன. வருவாயைப் பொறுத்து ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது" என்கிறார் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் நந்தகுமார்.
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் நந்தகுமார்.
தொடர்ந்து பேசிய அவர், ``அரசுக்கு பெரும் பணச்சுமையை, பணிச்சுமையை குறைத்து, வேலைவாய்ப்பை கொடுத்து, தரமான கல்வியை கொடுத்து வருகிறோம். அதனால்தான் இன்றைக்கு சாதாரண கூலித்தொழிலாளிகள் முதல் அமைச்சர்கள், நீதியரசர்கள், தொழிலதிபர்கள் வரை தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். நாட்டிலும் விமானம், ரயில்வேதுறை என எல்லாமே தனியாரை நோக்கிதான் சென்றுகொண்டிருக்கின்றன. இன்றைக்கு எத்தனையோ அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிட்டு இறந்துபோனவர்கள், மயக்கம்போட்டு விழுந்தவர்கள் இருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் ஆயிரம் சம்பவங்கள் நடந்தாலும் வெளியில் வருவதில்லை, தனியார் பள்ளியில் ஒரு சம்பவம் நடந்துவிட்டால் எல்லோருக் எகிறி குதிக்கிறார்கள். ஏன் இந்த பாரபட்சம். இன்று பாலியல் புகார்களில் சிக்கி சிறையில் இருப்பவர்களில் அதிகம்பேர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான்" என குற்றம் சாட்டினார்.
மேலும், ``சிறிய சிறிய தனியார் பள்ளிகளில் அதிகாரிகள் விசிட் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அங்கு வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள். பெரிய பெரிய பள்ளிகளுக்குப்போகமாட்டார்கள். ஏனென்றால் அது அரசியல்வாதிகளின் பள்ளிகள். இதில் யாரை குற்றம் சொல்வது? வீட்டில் இருந்தால் மாணவர்கள் படிக்க மாட்டார்கள், சினிமா பார்ப்பார்கள் எனக்கருதி பெற்றோர்கள்தான் ஹாஸ்டலில் சேர்த்துவிடுகிறார்கள். பெரிய பள்ளிகளில் படிக்க வைத்தால் கௌரவம்; அதிக மதிப்பெண் எடுத்தால் கௌரவம் என்று பெற்றோர்கள் நினைப்பதும் தவறு.
அன்பில் மகேஷ் - பள்ளிக் கல்வித்துறை
தனியார் பள்ளிகளில் பல்வேறு கட்சிக்காரர்கள் சீட்டு கேட்பார்கள், டொனேசன் கேட்பார்கள்; கொடுக்கவில்லை என்றால் இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு பிரச்னையை கிளப்புவார்கள். இந்தக் காரணங்களுக்காக எத்தனையோ ஜோடிக்கப்பட்ட பொய் வழக்குகள் தனியார் பள்ளிகள்மீது போடப்பட்டிருக்கிறது. அப்படித்தான் பல பள்ளிகள் சிக்கியிருக்கின்றன. இவர்கள் சொல்வதைப்போல, தனியார் பள்ளிகளை அரசிடம் கொடுத்தால், மாணவர்கள் படிக்கமாட்டார்கள்; ஒழுக்கமாக இருக்க மாட்டார்கள்; படிக்காதே, அடிக்காதே என்றெல்லாம் சொல்லமுடியாது. மாணவர்களால் எக்ஸாம் ரிசல்ட் கொடுக்க முடியாது. யார் எக்கேடு கெட்டுப்போனால் என்ன... எனக்கு அரசாங்கம் சம்பளம் கொடுத்துவிடுகிறது, பள்ளிக்கு வாடகை கொடுத்துவிடுகிறது, எல்லா வரிகளையும் கட்டிவிடுகிறது என்ற மனோபாவம்தான் மேலோங்கும்" என்றார்.
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் நந்தகுமார்.
``பொய்யான மருத்துவ சிகிச்சை அளித்ததால் இறந்துவிட்டார்கள் எனக்கூறி மருத்துவமனையை தாக்கும் சம்பவங்கள் அரங்கேறியதால் அரசாங்கம் மருத்துவமனையை பாதுகாக்க தனிச்சட்டம் கொண்டுவந்தது. அதன்படி மருத்துவமனைக்கு சேதம் விளைவித்தால் அவர்கள்மீது குண்டர் சட்டம் பாயும். அதேபோல, தனியார் பள்ளிகளையும் பாதுகாக்கவும் தனிச்சட்டம் கொண்டுவரவேண்டும்" என கோரிக்கை வைக்கிறார் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் நந்தகுமார்.