என்.எஸ்.இ முறைகேட்டில் முக்கியமான குற்றவாளியாகக் கருதப்படும் சித்ரா ராமகிருஷ்ணாவை டெல்லியில் கைது செய்தது சி.பி.ஐ.
இந்த முறைகேட்டில் இன்னொரு முக்கியமான குற்றவாளியாகக் கருதப்படும் ஆனந்த் சுப்பிரமணியன் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
என்.எஸ்.இ பங்குச் சந்தையில் பங்குப் பரிவர்த்தனை தொடர்பான முக்கியமான விவரங்களை சில நிறுவனங்களுக்கு முன்கூட்டியே அளித்தது தொடர்பாக நடந்த முறைகேட்டில் இந்த இருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைக் குறித்து விசாரிக்கவே இந்த இருவரையும் கைது செய்திருக்கிறது சி.பி.ஐ என்பது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/business/finance/cbi-arrests-former-nse-ceo-chitra-ramakrishna-in-delhi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக