Ad

ஞாயிறு, 18 ஜூன், 2023

Matter Aera: ஃபளபகரடடல ஓலவ மநதய மடடர பக; இநத பகல ஏகபபடட மடடர இரககஙக!

நீங்கள் ஃப்ளிப்கார்ட் அல்லது ஆன்லைன் வலைதளங்களில் பொருள்களை ஆர்டர் செய்பவர் என்றால், எப்போதாவது ‘புராடக்ட்ஸ்’ வரிசையில் ‘டூவீலர்கள்’ எனும் ஏரியாவுக்குப் போய்ப் பார்த்திருக்கிறீர்களா? வீட்டு உபயோகப் பொரு்ளகள், கேட்ஜெட்ஸ் – இவற்றைத் தாண்டி இப்போதைக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் இன்னொரு ஏரியாவும் களைகட்டிக் கொண்டிருக்கிறது. அது என்ன தெரியுமா?

டூவீலர்கள்தான் அது. ஆம், ஃப்ளிப்கார்ட், அமேஸான் போன்ற வலைதளங்களில் இப்போது ஸ்கூட்டர் விற்பனையும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது, நீங்கள் ஷோரூமுக்கே போக வேண்டியதில்லை; ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு வீட்டுக்கே உங்களுக்குப் பிடித்த ஸ்கூட்டரை வரவழைத்து டெலிவரி எடுத்துக் கொள்ளலாம். 

Flipkart Online Sale

அப்படி Flipkart வலைளத்தில் இப்போது ஸ்கூட்டர் விற்பனையில் முதலிடம் வகிப்பது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான். அந்த எலெக்ட்ரிக்கில் முன்பு ஓலா ஸ்கூட்டர் இருந்த இடத்தில், இப்போது மேட்டர் எனும் எலெக்ட்ரிக் பைக்தான் முன்னணியில் இருக்கிறது. இன்னும் ரிலீஸே ஆகவில்லை; லாஞ்ச் ஆகி அறிவிப்பு வந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே 40,000 புக்கிங்குகள் ஆகி விட்டிருக்கிறது மேட்டர் நிறுவனத்தின் ஏரா (Matter Aera) என்றொரு எலெக்ட்ரிக் பைக். 

அதென்ன மேட்டர்… என்று நீங்கள் புன்னகை புரிவது புரிகிறது. ஆனால், இயற்பியல் மாணவர்களுக்கு மேட்டர் பற்றி நன்றாகத் தெரியும். ஒரு பிராண்டு நிறுவனத்தின் பெயரே இப்படி என்றால், அதன் மாடல்களை எப்படிப் பார்த்துப் பார்த்துத் தயார் செய்வார்கள்? 

மேட்டர் பைக்கில் ஒரு முக்கியமான மேட்டர் இருக்கிறது. அதாவது, இந்தியாவின் முதல் கியர் சிஸ்டம் கொண்ட எலெக்ட்ரிக் பைக் மேட்டர் ஏராதான். ஆம், இந்த எலெக்ட்ரிக் பைக்கில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருக்கிறது. பொதுவாக, எலெக்ட்ரிக் பைக் என்றால் வேரியோமேட்டிக் அல்லது சிங்கிள் ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் இருப்பது வழக்கம். முதன் முறையாக, 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன், நீங்கள் சாதா பெட்ரோல் பைக் ஓட்டுவதுபோலவே கியர் மாற்றி ஓட்டிக் கொள்ளலாம். இதை ஹைப்பர்ஷிஃப்ட் டிரான்ஸ்மிஷன் என்கிறது மேட்டர். இதில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் தாண்டி, எக்ஸ்ட்ராவாக 4 ரைடிங் மோடுகளும் இருக்கின்றன. அதைச் சுட்டிக்காட்டியே ஃப்ளிப்கார்ட்டில் ஸ்கூட்டர் ஏரியாவில் முன்னணி வகித்திருக்கிறது மேட்டர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி. 

Cooling System
அதேபோல், இன்ஜினுக்கு லிக்விட் கூல்டு இன்ஜின் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், பேட்டரிக்கு முதன் முறையாக லிக்விட் கூல்டு பேட்டரி கொடுத்திருக்கிறது மேட்டர். அதாவது, இது தெர்மல் ரன்அவே எனும் பேட்டரி தீப்பிடிப்பதைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சம்.

இப்படிப் பல மேட்டர்களை வைத்திருப்பதாலோ என்னவோ, ப்ரீ புக்கிங்கில் தயாரிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது மேட்டர். இந்த ஏரா எலெக்ட்ரிக் பைக், 5000 மற்றும் 5000+  என 2 வேரியன்ட்களில் வருகிறது. இந்த பேட்டரி பேக்கின் சக்தி 5kWh பவர் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு வேரியன்ட்டிலும் ஒரே பவர் கொண்ட 10kW எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் இந்த பேட்டரித் தொகுப்புதான் இருக்கும். 

இப்போது ‘ஒண்ணே ஒண்ணு; கண்ணே கண்ணு’ என ஓடிக் கொண்டிருக்கும் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கில் இருப்பது 3.2kWh பவர் பேட்டரிதான். தனது இந்த 5kWh - Ip67 தரம் வாய்ந்த பேட்டரிக்குத்தான் லிக்விட் கூல்டு சிஸ்டத்தைக் கொடுத்து அசத்தியிருக்கிறது மேட்டர்.

இது சிங்கிள் சார்ஜுக்கு 125 கிமீ போகும் என்று க்ளெய்ம் செய்கிறது மேட்டர். நம் சாதாரண 6 Amp சார்ஜரில் சார்ஜ் போட்டால், ஃபுல் சார்ஜிங்குக்கு 5 மணி நேரம் ஆகுமாம். கூடவே இதில் Detachable Battery ஆப்ஷனும் கொண்டு வரலாம் என்கிற தகவல் கிடைத்திருக்கிறது. (ஆனால், இது ஏராவுக்கா … அல்லது மேட்டரின் மற்ற EXU மற்றும் UT போன்ற கான்செப்ட் பைக்குகளுக்கா என்று தெரியவில்லை.) அப்படி – கழற்றி மாற்றக்கூடிய டிட்டாச்சபிள் ஆப்ஷனுடன் வந்தால் – டூயல் பர்ப்பஸ் லித்தியம் அயன் பேட்டரி வழங்குவார்கள். அப்படியென்றால், Home Dock Inverter ஆப்ஷனும் மேட்டர் நிறுவனம் வழங்கலாம். அதாவது, காலியான பேட்டரியை வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு, ஃபுல்லான பேட்டரியைப் பொருத்திவிட்டு வண்டியில் கிளம்பலாம். 

Instrument Cluster

மேலும் ஆல் வீல் டிஸ்க் பிரேக்ஸ், பெட்ரோல் டேங்க் இருக்கும் இடத்தில் யுஎஸ்பி சார்ஜிங் ஸ்டோரேஜ் இடவசதி, கீலெஸ் இக்னிஷன், டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம், மொபைல் ஆப் மூலம் கனெக்ட் செய்து கொள்ள முடியும் கனெக்டட் வசதிகள் என்று இன்னும் பல மேட்டர்களைக் கைவசம் வைத்திருக்கிறது இந்த மேட்டர். இந்த 2 வேரியன்ட்களின் விலை ரூ.1.74 லட்சம் மற்றும் ரூ.1.84 லட்சம். (நீங்க யாராச்சும் மேட்டரை புக் பண்ணியிருந்தீங்கன்னா, அந்த மேட்டரை எங்களுக்குத் தெரிவிக்கவும் மக்கா!)

பொதுவா இந்த மாதிரிக் கதைகளில், டிரெய்லர் எப்போவுமே நல்லாத்தான் இருக்கும்... படம் எப்படி இருக்குனு பார்க்கலாம்!


source https://www.vikatan.com/automobile/bike/indias-first-gear-electric-bike-matter-aera-flipkart-online-sale-revolution

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக