Ad

வியாழன், 22 ஜூன், 2023

Tamil News Today Live: படனவல இனற எதரககடசத தலவரகளன கடடம!

பாட்னாவில் இன்று எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம்!

ஸ்டாலின், மம்தா, ராகுல் - எதிர்க்கட்சிகள்

பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார் அழைப்பு விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கார்க்கே, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், சரத் பவார், மெகபூபா முஃப்தி, ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு இந்த கூட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இந்த கூட்டம் தேசிய அளவில் அதிக கவனம் பெற்ற கூட்டமான மாறியுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tamil-news-today-live-updates-dated-on-23-06-2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக