Ad

திங்கள், 26 ஜூன், 2023

வழததஙகளன...

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்.

வாழ்த்துங்களேன்


அன்பார்ந்த வாசகர்களே!

உங்கள் சக்தி விகடன் 20-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதி புதிய வடிவம் பெறுகிறது.

பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை, பெயர்-நட்சத்திர விவரங்களை, இனி உங்களின் மொபைல் போன் மூலமே பதிவு செய்யலாம். அவ்வகையில், இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்திசெய்தால் போதும்.

அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரப்படி, இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான பிரார்த்தனைகள், அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், தமிழகத்தின் வழிபாட்டுச் சிறப்புமிக்க ஆலயங்களில் சமர்ப்பிக்கப்படும்.

11.7.23 முதல் 24.7.23 வரை பிரார்த்தனைக்குப் பதிவு செய்யவேண்டிய கடைசித் தேதி: 8.7.23

நவகோள் லிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை!

11.7.23 முதல் 24.7.23 வரையிலும் சுப நிகழ்வுகள், இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனை, புதுச்சேரி வில்லியனூரை அடுத்துள்ள கண்டமங்கலம் ஒன்றியம், பங்கூர் அருகே அமைந்திருக்கும் `நவம்மாள் காப்பேர்' என்ற கிராமத்தில் உள்ள நவகோள் லிங்கேஸ்வரர் திருக்கோயிலில் சமர்ப்பிக்கப் படுகிறது.

உலகிலேயே இந்தக் கோயிலில் மட்டும்தான் கருவறையிலேயே ஈசனை நவகிரகங்களும் வணங்கி நிற்கிறார்கள். அதனாலேயே இந்தப் பரமன், `நவகோள் லிங்கேஸ்வரர்' எனும் திருப்பெயர் கொண்டு அருள்கிறார். இங்கு சென்று வழிபட்டால், ஏழேழ் ஜன்மங்களுக்குத் தொடர்ந்து வரும் கிரக தோஷங்கள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை. அற்புதமான இந்தத் தலத்தில்... வாசகர்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெறவும் அவர்களின் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறவும் வேண்டி, வாழ்த்துப் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன!



source https://www.vikatan.com/spiritual/wishes-to-sakthi-vikatan-readers-birthday-and-wedding-day

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக