Ad

ஞாயிறு, 18 ஜூன், 2023

தவரமலயன சறபபகள: கடவரக கயலம பரமழலக கரமப நயனரன ஜவசமதயம!

புதுக்கோட்டை மாவட்டம், பேரையூர் அருகே மல்லாங்குடி கிராமத்தில் உள்ள தேவர்மலையில் இருக்கிறது அருள்மிகு தேவநாயகி அம்பிகை சமேத தேவநாத சுவாமி திருக்கோயில். இங்குள்ள மலையைக் குடைந்து இக்கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது.

குடைவரைக் கோயிலில் இறைவன் தேவநாதராகவும், இறைவி தேவநாயகியாகவும் கோயில் கொண்டிருக்கின்றனர். சந்நிதியில் பெரிய குடைவரைப் பிள்ளையார் அருள்பாலிக்கிறார். வேறு எங்கும் இல்லாத வகையில் இரண்டு நந்திகள் உள்ளன. இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பாக, 63 நாயன்மார்களில் ஒருவரான பெருமிழலைக் குரும்ப நாயனார் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

தேவர்மலை

குரும்ப நாயனார் உருவம் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. சோழ நாட்டின் உள்நாடாகிய மிழலை நாட்டில் பெருமிழலை என்னும் ஊரின் தலைவராக விளங்கியவர் பெருமிழலை குரும்ப நாயனார். இவர் சிவனடியார்களுக்கான  திருப்பணிகளை விருப்பமுடன் செய்பவர். சுந்தரர் மீது பெரும்பற்று வைத்து குருவாக மனதிற்குள் வழிபட்டு வந்திருக்கிறார்.

ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரர் முக்தி அடைய இருக்கிறார் என்ற தகவல் பெருமிழலைக்  குரும்பநாயனாருக்குத் தெரியவர, குருவை விட்டு வாழ முடியாது என்ற ஏக்கம் வர, இறைவனை நினைத்துத் தொழுது அழுகிறார். சிவபெருமானும், அம்பாளும் காட்சி கொடுக்கின்றனர்.

உடனே, பெருமிழலை கிராமத்திலிருந்து புதுக்கோட்டை தேவர்மலைக்கு வந்தவர், சுவாமியை அம்பாளையும் வணங்கி தியானம் செய்கிறார். அஷ்டமா ஸித்திகளைப் பயன்படுத்தி கைலாயம் சென்று சிவகதி அடைந்துவிடுகிறார்' என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

ஆடி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் ஜீவ சமாதி அடைந்திருக்கிறார் குரும்ப நாயனார். இதனால், ஒவ்வொரு வருடமும், ஆடி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பெருமிழலை குரும்ப நாயனார் குரு பூஜை நடக்கிறது.

தேவர்மலை
மலையின் மேல் சுனை ஒன்று இருக்கிறது. வருடம் முழுவதும் இந்தச் சுனையில் தண்ணீர் இருக்கிறது. இந்தச் சுனை நீரைக் கொண்டுதான் சுவாமிக்கும், பெருமிழலை குரும்பநாயனாருக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

எப்படிச் செல்வது?

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 28 கி.மீ தொலைவில் இருக்கிறது தேவர்மலை. புதுக்கோட்டை நமுணசமுத்திரத்தில் இருந்து பேரையூர் விளக்கு செல்ல வேண்டும். பேரையூர் விளக்கில் இருந்து சுமார் 5கி.மீ தொலைவில் தேவர்மலை குடைவரைக் கோயில் இருக்கிறது. காட்டுப்பாதை என்பதால், பேரையூர் விளக்கில் இருந்து ஆட்டோ எடுத்துச் செல்லலாம். டூவிலரிலும் சென்று வரலாம்.



source https://www.vikatan.com/spiritual/temples/devarmalai-kudavarai-temple-and-kurumba-nayanars-final-resting-place

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக