Ad

வெள்ளி, 4 மார்ச், 2022

``இந்து மத புத்தகங்கள் எங்கும் பொய்களைப் பேசவில்லை, ஆனால் மோடியோ..." ராகுல் காந்தி தாக்கு!

உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதனால், உத்தரப்பிரதேசத்தில் விறுவிறுப்பாகத் தேர்தல் பிரசாரம் நடந்துவருகிறது.

நேற்றைய தினம் காசி வாரணாசிக்குத் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும், அவர் சகோதரி பிரியாங்கா காந்தியும் வாரணாசி கோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, பிண்டாரா சட்டமன்றத் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ அவதேஷ் சிங்குக்கு எதிராகவும், காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்க்கு ஆதரவாகவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

வாரணாசி கோயிலில் ராகுல் காந்தி, பிரியாங்கா காந்தி

அப்போது பேசிய ராகுல்காந்தி, ``இந்து மத புத்தகங்கள் எங்கும் பொய்களைப் பேசவில்லை. ஆனால் பிரதமர் பொய்களின் அடிப்படையில் வாக்குகளைச் சேகரிக்கிறார். விவசாயிகளின் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய வாக்குறுதிகளை தற்போது பேசுவது இல்லை. அவரின் சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தமில்லை.

ஆனால், காங்கிரஸ் அரசு ஆளும் சத்தீஸ்கரில் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் என்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி, ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் செய்வதற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 2,500 ரூபாய் என மாற்றி காட்டினோம்.

பிரசாரத்தின் போது ராகுல் காந்தி

உண்மையில் பிரதமரின் 'டபுள் இன்ஜின்' 'அதானி மற்றும் அம்பானி' தான். இந்த வகையான இரட்டை இயந்திரத்தால் மக்களுக்கு ஒருபோதும் வேலைவாய்ப்பை வழங்க முடியாது. போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் இந்திய அரசிடம் இருந்து போதுமான உதவிகள் இல்லாத நிலையில் அவர்களின் வேதனையான நிலையை வீடியோக்களாக அனுப்புகின்றனார்.

கொரோனா வைரஸை போக்குவதற்காக கைகளைத் தட்டச் சொன்ன உலகின் ஒரே தலைவர் எங்களிடம் தான் இருக்கிறார். பிரதமர் மோடியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உத்தரப்பிரதேச மக்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றுடன் மூன்றாவது பிரச்சனையாகத் வந்து சேர்ந்துள்ளனர்" என்றார் காட்டமாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/not-dharma-pm-seeks-vote-on-basis-of-lies-rahul-gandhi-in-ups-varanasi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக