Ad

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

ராஜேந்திர பாலாஜி: சட்டசபை தேர்தல்... ஒரு பார்வை! #TNelections2021

இந்தத்  தேர்தலில் திமுகவின் ஹிட் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்த அதிமுகஅமைச்சர்கள் பட்டியலில், கே.டி.ராஜேந்திர பாலாஜியும் முக்கியமானவர்.

கடந்த 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு தேர்தல்களில் சிவகாசி தொகுதியில்போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் என்ற இறுமாப்பில் சொந்தக் கட்சியினரையே பகைத்துக் கொண்டது, அவர்களுக்கு மிரட்டல் விடுத்தது,.பொது இடங்களில் வாய்க்கு வந்தபடி பேசியது போன்ற காரணங்களால் தொகுதியில்.அவப்பெயர். 'மோடிதான் எங்கள் டாடி' என்ற அவரது பேச்சும்அ.தி.மு.க-வினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

மேலும், சிவகாசி தொகுதியில் பட்டாசுத் தொழிலாளர்களிடையே ஏற்பட்ட அதிருப்தி, உள்ளாட்சித் தேர்தலில் சிவகாசி ஒன்றியத்தில் அதிமுகவுக்கு ஏற்பட்ட தோல்வி போன்ற காரணங்களால், இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிட்டால் தேறுவது கடினம் என்பதாலேயே, ராஜேந்திர பாலாஜி எடப்பாடியிடம் கெஞ்சி, இந்த முறை ராஜபாளையம் தொகுதியைக் கேட்டுப்பெற்று போட்டியிட்டதாக சொல்லப்பட்டது.

ராஜேந்திர பாலாஜி

ராஜபாளையம் தொகுதியை பொறுத்தவரை அதிமுக 5 முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை இந்தத் தொகுதி திமுக வசம் சென்றது. திமுக சார்பில்போட்டியிட்ட தங்கபாண்டியன் 74,787 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஷியாம் 69,985 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

இந்த தேர்தலில்,  ராஜேந்திர பாலாஜி களமிறங்கிய நிலையில், தொகுதி மாறி வந்தவர் என்ற குற்றச்சாட்டை பலமாக எதிர்கொண்டு, அதற்கு விளக்கம் அளித்தே சோர்ந்து போனார் என்று சொல்லும் அளவுக்கு இருந்தது அவரது தேர்தல் பிரசாரம். திமுகவின் வலுவான வேட்பாளராக மீண்டும் தங்கபாண்டியன் போட்டியிட்ட நிலையில், அமமுகவில் காளிமுத்து, நாம் தமிழர்கட்சி சார்பில் ஜெயராஜ், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கொள்கை பரப்புச்செயலர் விவேகானந்தன், புதிய தமிழகம் கட்சி சார்பில் வழக்கறிஞர் தனுஷ்கோடிஎனப் போட்டி கடுமையாகவே காணப்பட்டது.

தனது பழைய தொகுதியான சிவகாசியில் சொல்லிக் கொள்ளும்படியான திட்டங்கள்எதையும் ராஜேந்திர பாலாஜி நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு, அதிமுகவுக்கு விழும் முக்குலத்தோர் வாக்குகள் அமமுக வேட்பாளராகக் களமிறங்கிய ராஜவர்மனால் சிதறலாம் என்ற கணிப்பும், புதிய தமிழகம் கட்சிவேட்பாளரால் பட்டியல் சமூகத்தினரின் வாக்குகள் பிரியலாம் என்ற ஆருடமும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான விஷயங்களாக சொல்லப்பட்டவை. கூடவே ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்றதாக கூறப்பட்ட ஊழல் புகார்களும் துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜிக்கு மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தி இருந்தன.



source https://www.vikatan.com/government-and-politics/politics/rajendra-balaji-a-short-analysis-on-tn-elections-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக