தஞ்சை பெரிய கோவில், தாஜ் மஹால், சீனப் பெருஞ்சுவர், ஈஃபிள் டவர். மனித நாகரிகத்தின் ஒப்பற்ற திறமையான கட்டடக் கலையின் சான்றுகளாக காலத்தைக் கடந்து நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன இந்தக் கட்டுமான அதிசயங்கள்!
உலகம் முழுக்க இவ்வாறான அதிசயிக்கத்தக்க, மனிதர்களால் எழுப்பப்பட்ட வடிவியல் விந்தைகளைப் பார்க்கும்போது வாயைப் பிளந்தபடி 'ஜீனியஸ்' என்று நம்மை அறியாமலேயே கூறியிருப்போம்! கட்டடத்தை நுட்பமாக வடிவமைத்து, திட்டத்தில் உள்ளதை அப்படியே நிஜ வாழ்க்கையில் சாத்தியப்படுத்திய 'கட்டுமானப் பொறியாளர் (Civil Engineer)'தான் காலத்தைத் தாண்டி கலை மூலம் வாழும் அந்த ஜீனியஸ்!
கட்டுமானப் பொறியாளரின் பங்கு அளப்பரியது!
உங்கள் காலுக்குக் கீழ் ஸ்திரமான தளமும், தலைக்கு மேல் வலுவான கூரையும் இருந்தால், உங்கள் வீட்டைக் கட்டிய பொறியாளரை அவ்வப்போது நினைத்து நன்றி கூறுங்கள்! ஆம் வீடோ, அலுவலகமோ, மனிதர்கள் வாழத் தகுதியான, நீண்ட நாள்கள் நீடிக்கக்கூடிய, சந்ததிகள் பலர் புழங்கக்கூடிய கட்டுமானங்களை எழுப்பும் பிரம்மாக்கள் அவர்கள்தான். வெறும் கல்லையும், மண்ணையும், வாழத் தகுதியான இடங்களாக மாற்றும் கட்டுமானப் பொறியாளர்கள் நிச்சயம் போற்றப்பட வேண்டியவர்கள்.
அறிவியலும் கலையும் பிண்ணிப்பிணையும் துறையான கட்டுமானத் துறை தொழிற்புரட்சிக்குப் பின் கண்ட வளர்ச்சி அசுரத்தனமானது. வெறும் கட்டாந்தரையாக இருந்த இடங்களை எல்லாம் வானளாவிய கட்டுமானங்களாக மாற்றிய பெருமை கட்டடப் பொறியாளர்களையே சேரும்.
கட்டுமானப் பொறியாளர்களைக் கௌவுரவிக்கும் 'ACED விருதுகள்'
நிப்பான் பெயின்ட் நிறுவனம் மற்றும் விகடன் இணைந்து வழங்கும், ACED – Architectural and Civil Engineering Awards எனப்படும் 'கட்டடக் கலை மற்றும் கட்டுமானப் பொறியியல் விருதுகள்' தமிழகத்தின் மிகச்சிறந்த கட்டுமானப் பொறியாளர்களை இனம் கண்டு அவர்களின் திறமையையையும் பணிகளையும் கௌரவிக்கவுள்ளது...
கட்டுமானத்தில் புதுப்பிக்கத்தக்க வளங்களின் பயன்பாடு, அந்தந்த ஊர்களில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தியுள்ள விதம், கட்டடத்தின் அழகியல் அம்சங்கள், வடிவமைப்பின் புதுமை, மனிதப் பயன்பாட்டுக்கு ஏற்ற வடிவமைப்பு, இடப் பயன்பாடு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வடிவமைப்பு, கலர் சாய்ஸ், காஸ்ட் ஆப்டிமைசேஷன் என்று பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விருதுகளின் விவரங்கள்.
● சிறந்த நிறம், சிறந்த பசுமை புராஜெக்ட், பிரபலமான புராஜெக்ட் (ஃபேஸ்புக் லைக்ஸ் மூலம் முடிவு செய்யப்படும்) - ஆகிய பிற
விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
● சிறந்த நிறம், சிறந்த பசுமைத் திட்டம், பிரபலமான புராஜெக்ட் (ஃபேஸ்புக் லைக்ஸ் மூலம் முடிவு செய்யப்படும்) - ஆகிய பிற
விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
● 6 பேர் கொண்ட நடுவர்களின் குழுவில் முன்னணி கட்டட வடிவமைப்பாளர்கள், பசுமை ஆலோசகர்கள் மற்றும் கட்டுமானப் பொறியாளர்கள் இடம் பிடிப்பார்கள். இந்நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
பரிசுகள் காத்துள்ளன!
வெற்றி பெறும் புராஜெக்ட்டுகள் ஒவ்வொன்றுக்கும் ரொக்கப் பரிசும். நிப்பான் பெயின்ட் இந்தியாவின் (அலங்காரப் பிரிவு) தலைவர் மகேஷ் ஆனந்த் அவர்கள் கையெழுத்திட்ட சான்றிதழும் வழங்கப்படும்.
வெற்றிபெற்ற புராஜெக்டுகள் அனைத்தும் விகடன் இதழ் மற்றும் விகடன் யூடியூப் சேனலில் இடம்பெறும். வெற்றி பெற்றவர்களுக்குப் பிரத்தியேகமாக, நிப்பான் பெயின்ட் ஃபேக்டரி விசிட் ஏற்பாடு செய்யப்படும்.
நீங்களும் விண்ணப்பிக்கலாம்!
நீங்கள் கட்டுமானப் பொறியாளரா? உங்களின் புராஜெக்ட் வெற்றி பெறத் தகுதியானது என்று நினைக்கிறீர்களா? உங்களின் திறமையை இந்த உலகத்துக்குக் காட்ட நினைக்கிறீர்களா? இந்த நிகழ்வில் நீங்களும் கலந்துகொள்ளலாம் அல்லது உங்களின் திறமையான பொறியாளர் நண்பரையும் கலந்துகொள்ளச் செய்யலாம்! ACED விருதுகள் முழுக்க முழுக்க திறமையை அங்கீகரிக்கும் இலவச நிகழ்ச்சியாகும்!
source https://www.vikatan.com/news/miscellaneous/aced-awards-by-nippon-paints
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக