Ad

புதன், 1 டிசம்பர், 2021

``விவசாயிகள் போராட்டத்தால், 2,731 கோடி ரூபாய் வருவாய் இழப்பு!” - நிதின் கட்கரி

பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தால், அரசாங்கத்திற்கு சொந்தமான இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 2731.32 கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்தித்ததாக நாடாளுமன்றத்தில் புதன் கிழமை(Dec 1), தெரிவிக்கப்பட்டது.

நிதின் கட்காரி

எழுத்து பூர்வமாக கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துதுரறை அமைச்சர் நிதின் கட்கரி, ``அக்டோபர் 2020-ல் இருந்தே இந்த போராட்டம் சுங்க கட்டண வசூலை பாதித்ததாகத் தெரிவித்தார். பஞ்சாப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கிருந்த சுங்கச்சாவடிகளை செயல்பட இயலாத அளவுக்கு முடக்கி விட்டனர். இது கொஞ்சம் கொஞ்சமாக ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களுக்கும் பரவியது. இப்படி ஒட்டுமொத்தமாக விவசாயிகள் போராட்டத்தால் மட்டும் 60 முதல் 65 சுங்கச்சாவடிகள் முடக்கப்பட்டு 2,731 கோடிகள் வருவாய் இழப்புக்கு காரணமாய் இருந்திருக்கிறது இந்தப் போராட்டம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே மக்களவையில் நிறைவேற்றம்!

இதற்கிடையே போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகமும் , இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் இணைந்து, கூட்டு முயற்சியில் சுங்கச்சாவடிகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர பல்வேறு தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்

வேறு ஒரு தனி கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கட்கரி, `` 2021-2022-ம் நிதியாண்டில் தன் அமைச்சகம் பன்னிரண்டாயிரம் கிலோமீட்டர் நீளத்துக்கு நெடுஞ்சாலை போடவிருப்பதாகவும், அதில் சில திட்டங்கள் 2021ஆம் ஆண்டே நிறைவடைந்துவிடும்” என்றும் தெரிவித்தார்.

- ராம முத்தையா

மாணவர் பத்திரிகையாளர்



source https://www.vikatan.com/news/general-news/rs-2731-crore-lost-in-revenue-from-toll-plazas-said-by-gadkari

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக