Ad

புதன், 28 ஏப்ரல், 2021

'வலிமை' அப்டேட் : ‘’அஜித் படம் நேரடி OTT ரிலீஸுக்கு சரிவருமா?’’ - போனி கபூரின் கேள்வியும், பதிலும்!

கொரோனா காலத்திலும் விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸாகிவிட, அஜித்தின் ’வலிமை’க்காக காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். ‘’அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும்’’ என்கிற தயாரிப்பாளர் போனி கபூரின் முந்தைய அறிவிப்பை கொண்டாடித் தீர்த்தார்கள் ரசிகர்கள். ஆனால், கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை தள்ளிவைத்துவிட்டார் போனி.

இதற்கிடையே படத்தின் நிலை என்ன, எப்போது ரிலீஸ் என ‘வலிமை’ அப்டேட்டுக்காக அப்பட வட்டாரத்தில் விசாரித்தோம்.

‘’ஷூட்டிங் முழுமையாக முடிந்துவிட்டது. அஜித் பார்த்துவிட்டு கடைசியில் ஏதாவது கரெக்ஷன் சொன்னால் அதை மறுபடியும் செய்வார்கள். அஜித் முன்பெல்லாம் படத்தின் Rough cut பார்க்கப் பிரியப்படுவார். இப்போது எல்லாம் தயாராகி முடித்த first copy தான் பார்க்கிறார். கொரோனா சூழலில் மீண்டும் எடிட்டிங் வேலைகள் எல்லாம் நிதானமாகவே நடக்கிறது. அஜித் இன்னும் டப்பிங் பேசி முடிக்கவேண்டியிருக்கிறது. கொரோனா சூழல் சரியானப்பிறகுதான் அவர் டப்பிங் பேச வருவார் எனத்தெரிகிறது.

ஸ்ரீதேவியுடன் போனி கபூர் உருக்கம்

போனி கபூருக்கு நிறைய பொருளாதார பிரச்சனைகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், ‘வலிமை’ படத்தை நேரடி OTT ரிலீஸுக்குத் தர போனி விரும்பவில்லை. ‘பொருளாதார சிக்கல்தான். ஆனால், அஜித் படம் OTT-க்கு சரிவருமா... அஜித் படத்தை எல்லாம் தியேட்டரில் வெளியிடும்போதுதான் அதற்கான வரவேற்பும், ரசிகர்களின் பேராதரவும் இடைக்கும்’ என்று போனி சொல்லியிருக்கிறார். அதனால் இப்போதைக்கு தியேட்டர் ரிலீஸ் மட்டுமே மனதில் இருக்கிறது.

2021 சுதந்திர தினத்தன்று படத்தை வெளியிடலாம் என முன்னர் முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போதைய சூழலில் தியேட்டர்கள் மீண்டும் எப்போது திறக்கும் என்பது கேள்விக்குறியாகி இருப்பதால் தீபாவளி அல்லது தசரா பண்டிகைக்காலத்துக்குப் பட ரிலீஸ் தள்ளிப்போகும்’’ என்றார்கள்.

தீபாவளிக்குத்தான் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ‘வலிமை’யும் தீபாவளிக்கு வந்தால் ‘விஸ்வாசம்’ - ‘பேட்ட’ போன்று மீண்டும் ஒரு ரஜினி - அஜித் மோதல் இருக்கும் என எதிர்பார்க்கலாம்!



source https://cinema.vikatan.com/tamil-cinema/valimai-update-on-ott-or-theatrical-release

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக