தேனி நகர் பங்களாமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 65). தட்சு வேலை செய்துவரும் முருகனுக்கு திருமணம் ஆகவில்லை. அவருக்கு நான்கு சகோதரர்கள் உள்ளனர். இருந்தபோதும், தட்சு வேலை செய்துவந்த அவர், பங்களாமேடு, வெல்ஃபேர் ஸ்கூல் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்துவந்துள்ளார்.
இந்நிலையில், முருகனுக்குச் சொந்தமாக, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே ஆறு சென்ட் நிலம் உள்ளது. காலி இடமாக உள்ள அந்த நிலத்தினை, மூன்று வருடங்களுக்கு முன்னர், உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆடிட்டர் முருகன் என்பவருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு, ரூ 50 ஆயிரம் முன்பணம் பெற்று, ஒப்பந்தமும் செய்துள்ளார் முதியவர் முருகன்.
Also Read: தேனி: பிரேத பரிசோதனைக்குப் பிறகு மாயமான உடல்! - அரசு மருத்துவமனையில் அலட்சியம்... கொதித்த உறவினர்கள்
சில தினங்களுக்கு முன்னர், முதியவர் முருகனுக்கு வக்கீல் நோட்டீஸ் வந்துள்ளது. அதில், ‘ஆடிட்டர் முருகனிடம் ரூ 5 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு, இடத்தினை கிரையம் செய்யாமல் இருப்பதால், 6 சென்ட் நிலம் இனி, ஆடிட்டர் முருகனுக்குச் சொந்தம்’ என குறிப்பிட்டு விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.
இதனைக் கண்ட முதியவர் முருகன், அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக, ஆடிட்டர் முருகனிடம் முறையிடவே, பதில் ஏதும் இல்லாத நிலையில், விரைக்தியடைந்த முதியவர் முருகன், நேற்று (27/04/2021) காவல்கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே இருக்கும் தனது நிலத்திற்கு சைக்கிளில் வந்து, தன்னுடன் எடுத்துவந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீப்பற்றவைத்தார். சுற்றிலும் யாரும் இல்லாத நிலையில், உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார் முதியவர் முருகன்.
Also Read: தேனி: கம்பம் வழியாக கேரளா செல்ல `கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம்! - ஏலக்காய் விவசாயிகள் வேதனை
தகவலறிந்து வந்த தேனி நகர் காவல்துறையினர், முருகனின் சைக்கிளைச் சோதனை செய்தனர். அதில், முருகன் எழுதிய இரண்டு பக்க கடிதம் கிடைத்தது. அதில், ‘என்னுடைய சாவுக்கு ஆடிட்டர் முருகன் தான் காரணம்.!’ என குறிப்பிடப்பட்டிருந்தது. உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீஸார், விசாரணையை துவங்கியுள்ளனர்.
source https://www.vikatan.com/news/crime/an-old-man-who-died-after-setting-fire-by-himself-near-the-sp-office
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக