தூத்துக்குடி திமுகவில் மாவட்டச் செயலாளராக கோலோச்சிய பெரியசாமியின் மகள்தான் கீதா ஜீவன். தந்தை பெரியசாமியைப் போல் மாவட்ட திமுகவிலும் பொறுப்பில் உள்ள கீதா ஜீவனுக்கு, வழக்கம்போல் இந்த முறையும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது திமுக கட்சித் தலைமை. 2006-11 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராகவும் பணியாற்றியவர். 2016-ல் நடந்த தேர்தலில் போட்டியிட்ட கீதா ஜீவன் 88,045 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட செல்லப்பாண்டியன் 67,137 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் இதுவரை 17 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தலா 6 முறையும், காங்கிரஸ் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை திமுக வேட்பாளர் கீதாஜீவன், த.மா.கா. கட்சியின் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், தேமுதிக வேட்பாளர் சந்திரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேல்ராஜ், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் சுந்தர் உள்ளிட்ட 26 பேரை எதிர்கொண்டார்.
"தூத்துக்குடி திமுகவின் வடக்கு மாவட்ட செயலாளரான கீதா ஜீவன், கட்சியின் சீனியர் நிர்வாகிகளை கண்டுகொள்வதில்லை. தலைமைக்கு பலமுறை சொல்லியும் எந்தப் பலனும் இல்லை. அவரது தொகுதிக்கு மட்டும்தான் முக்கியத்துவம் தருகிறார். மற்ற இடங்களில் அவரது நடவடிக்கைகள் சிறப்பாக இல்லை" என்ற புகார்கள் கட்சித் தலைமை வரை சென்றன. ஆனாலும், தந்தையைப் போன்று அதிரடி அரசியலுக்குப் பெயர் போனவர் என்பதாலும், தற்போதைய சூழலில் புதிதாக வேறு ஒருவரை நிறுத்தி ரிஸ்க் எடுக்க விரும்பாததாலும், கீதா ஜீவனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு பக்கபலமாக நின்றது, எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்கள் வலுவாக இல்லாதது போன்றவை, இந்த முறை கீதாஜீவனுக்கு சாதகமான விஷயங்களாக முன்வைக்கப்பட்டிருந்தது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/geetha-jevan-a-short-analysis-on-tamilnadu-assembly-elections-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக