`இந்தியா எங்களுக்காக நின்றது, நாங்கள் அவர்களுக்காக நிற்போம்’
இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ``அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேசினேன். இரு நாட்டிலும் உள்ள கொரோனா பாதிப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். அப்போது அமெரிக்க செய்த உதவிக்காக அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்தேன். மருந்துகள், தடுப்பூசிக்கான மூலப்பொருட்கள் சப்ளை செய்வதற்கான பேச்சுவார்த்தை முக்கியமானதாக இருந்தது. இந்தியா- அமெரிக்காவின் சுகாதாரம் தொடர்பான உறவால் உலகளாவிய கொரோனா சவாலை எதிர்கொள்ள முடியும்’’ என்றார்.
இந்த உரையாடல் குறித்து கருத்து தெரிவித்த பைடன், ``இன்று, நான் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன். அப்போது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அவசர உதவி மற்றும் வளங்களை வழங்க அமெரிக்கா தனது முழு ஆதரவை உறுதியளித்தது. இந்தியா எங்களுக்காக நின்றது, நாங்கள் அவர்களுக்காக நிற்போம்” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/news/27-04-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக