Ad

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

ஜெயக்குமார்: சட்டசபை தேர்தல்... ஒரு பார்வை! #TNelections2021

மீனவ மக்கள் நிறைந்த சென்னை, ராயபுரம் தொகுதியில் தொடர்ந்து 25 ஆண்டுகாலம் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் ஜெயக்குமாருக்கு, இந்ததேர்தல் அத்தனை சுலபமாக அமையவில்லை.

இந்த தொகுதியில்  1957, 1962-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் மாயாண்டி வெற்றி பெற்றார். 1967 மற்றும் 71ல் திமுக வேட்பாளர் வேதாச்சலம் வெற்றி பெற்றார். 1977, 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் பி.பொன்னுரங்கம் தொடர் வெற்றி பெற்றார். 1989-ல் திமுக வேட்பாளர் ஆர்.மதிவாணனும், 1991-ல் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட டி.ஜெயக்குமாரும் வெற்றி பெற்றனர். அதன் பின்னர் 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது அ.தி.மு.க-வுக்கு எதிர்ப்பு அலை வீசியபோது நடந்த தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெற்ற நிலையில், 2001, 2006, மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற ஜெயக்குமார், நான்காவது முறையாக 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக  கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளரான ஆர்.மனோகரை 8,031 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பாஜக, பாமக, தமாகா கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் உள்பட 15 பேர் டெபாசிட் இழந்தனர்.

அமைச்சர் ஜெயக்குமார்

ஆனால் இத்தனை முறை வெற்றி பெற்றும், ராயபுரம் தொகுதி மக்களுக்கு பெரிதாக எந்த நன்மைகளையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும், தொகுதியின் முக்கிய பிரச்னைகளைத் தீர்க்கவில்லை என்ற புகாரும் இந்த முறை தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக எதிரொலித்தது. கூடவே, தி.மு.க தரப்பில் களமிறங்கிய திரையரங்க உரிமையாளரான ஐட்ரீம் மூர்த்தி, தேர்தலின்போது ஜெயக்குமாருக்கு ரொம்பவே டஃப் கொடுத்தார்.தொகுதியில் குடியிருக்காமல், மயிலாப்பூரில் குடியிருப்பதாக ஜெயக்குமாருக்கு எதிராக அவர் வைத்த குற்றச்சாட்டுகள் அதிமுகவினரை கலங்கடித்தது என்றே சொல்லலாம்.

25 ஆண்டுகளாகத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பதால் தொகுதியின் சந்து, பொந்துகள் எல்லாம் அவருக்கு அத்துப்படி. ஆனாலும், தொகுதிக்குள் வலம்வரும்போது, காரில் இருந்து இறங்காமல், கண்ணாடியை மட்டும் இறக்கிவிட்டுக்கொண்டு, கட்சிக்காரர்களிடம் பேசிவிட்டு, வணக்கம் வைத்து விட்டுக் கிளம்பிவிடுவார் என்ற புகார்களும் கிளம்பியது. ஆனாலும் தொகுதிக்குள் நடக்கும் கட்சிக்காரர்கள் வீட்டுத் திருமணங்கள், முக்கியப் பிரமுகர்களின்குடும்ப விழாக்களில் தவறாமல் ஆஜராவது, தொகுதி இளைஞர்களுக்கு அவ்வப்போது கிரிக்கெட் மட்டை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து அசத்தியது போன்றவையெல்லாம் தனக்கான வாக்குகளாக மாறும் என மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் ஜெயக்குமார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/jayakumar-a-short-analysis-on-tn-elections-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக