Ad

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

பிரச்னைகளுக்குத் தீர்வாகுமா ரசமணி... அறிந்துகொள்ள வேண்டிய 5 தகவல்கள்!

இன்றைய பஞ்சாங்கம்

28. 4. 21 சித்திரை 15 புதன்கிழமை

திதி: பிரதமை காலை 7.35 வரை பிறகு துவிதியை

நட்சத்திரம்: விசாகம் இரவு 8.04 வரை பிறகு அனுஷம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: பகல் 12 முதல் 1.30 வரை

எமகண்டம்: காலை 7.30 முதல் 9 வரை

நல்லநேரம்: காலை 9.30 முதல் 10.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை

சந்திராஷ்டமம்: ரேவதி இரவு 8.04 வரை பிறகு அசுவினி

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

லிங்கம்

சகல சித்திகளையும் அளிக்குமா ரசமணி?

ரசமணி என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்டது. தெய்விக சிலைகளை நவபாஷாணங்கள், தச பாஷாணங்கள் கொண்டு செய்தபோது, மனிதர்கள் நோயின்றியும் சகல சௌபாக்கியங்களோடும் வாழ சித்தர்கள் உருவாக்கியதே ரசமணிகள். திரவத் தன்மையை கொண்ட பாதரசத்தை அரிய மூலிகைகளுடனும், உதக நீருடனும் பாஷானத்துடனும் சேர்த்து கடினமான உலோகமாக மாற்றுவது ரசவாதம். தெய்வ ஆற்றலை மனிதனுக்கு தரக்கூடியது ஆறாவது முகம், அதுவே சடாச்சரம் என்ற முருகனாக வணங்கப்படுகிறது. ஐந்து பூதங்களும் ஈஸ்வர அம்சம் என்றால் ஆறாவது பூதமான பாதரசம் முருகனின் அம்சம். அதனாலேயே சித்தர்களால் சடாட்சரனான முருகப்பெருமானின் சிலை ரசங்களாலே உருவானது.

குற்றமில்லாத, சுத்தமான ரசமணியை செய்பவர்கள் வெகு அபூர்வம். ரசமணியை உருவாக்குவதும் பிரம்ம பிரயத்தன வேலைதான். நியமப்படி உருவாகும் ரசமணியே சகல சித்திகளையும் அளிக்கும். போலியானவை எதிர்மறையாக தீமையையே அளித்துவிடும். எனவே கவனத்தோடு வாங்கி அணியவேண்டும். ரசமணி குறித்த தகவல்களோடு அது தரும் பயன்கள் குறித்தும் மேலும் அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய சுருக்கமான ராசிபலன்

இன்றைய விரிவான ராசிபலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

மேஷம்

அனுகூலம் : செயல்கள் அனுகூலமாக முடியும் நாள். முக்கியப்பணிகளை ஒத்திவைக்காமல் இன்றே முடித்துவிடுங்கள். பணிச்சுமை காரணமாக உடல் அசதி ஏற்படும். - ஆல் இஸ் வெல்

ரிஷபம் :

நன்மை : பலவிதங்களிலும் நன்மைகள் நடைபெறும் நாள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. - நாள் நல்ல நாள்

மிதுனம்

விவாதம் : பணவரவு உண்டு. செயல்களும் அனுகூலமாகும். இருந்தபோதும் தேவையற்ற விவாதங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. வார்த்தைகளால் வம்பு வரலாம். - நோ ஆர்கியுமென்ட்ஸ்

கடகம்

தாமதம் : உதவிகள் வந்து சேர்வதில் தாமதம் ஏற்படும். செலவுகளும் அதிகரிக்கும். கடன் விஷயங்களில் கவனம் தேவை. பிற்பகலுக்குமேல் அனைத்தும் சாதகமாகும். - தாமதமாகலாம் ஆனால் தடைப்படாது!

சிம்மம்

உதவி : எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். உங்கள் முயற்சிகளுக்குக் குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. மனம் மகிழ்ச்சியாக இருக்கும். - என்ஜாய் தி டே

கன்னி

மகிழ்ச்சி : மனதில் மகிழ்ச்சி குடியிருக்கும். குடும்பத்தினர் உங்கள் மனம் அறிந்து நடந்துகொள்வார்கள். திடீர் பணவரவும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும். - ஜாலி டே

துலாம்:

அலைச்சல் : காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தினரின் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்குக் குடும்பம் தொடர்பாகச் சிறு அலைச்சலை மேற்கொள்ள வேண்டிவரும். - டேக் கேட் ப்ளீஸ்

விருச்சிகம்

கவனம் : செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தேவையற்ற பிரச்னைகளில் தலையிடாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. - கேர் ஃபுல் ப்ளீஸ்

தனுசு:

பணவரவு : எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். அதனால் மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சை மதித்து நடப்பார்கள். நன்மைகள் நடைபெறும் நாள். - ஜாலி டே

மகரம்

சாதகம் : சாதகமான நாள். எடுக்கும் முடிவுகளில் உங்களில் தன்னம்பிக்கை வெளிப்படும். சிலருக்குத் தேவைக்குப் புதிய ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். - சாதகமான ஜாதகம் இன்று.

கும்பம்

நிதானம் : அனைத்தும் சாதகமாக இருந்தபோதும் சொல்லிலும் செயலிலும் நிதானம் தேவை. பிற்பகலுக்குமேல் சாதகமாக இருப்பதால் முக்கிய வேலைகளை அப்போது மேற்கொள்ளலாம். - ஆல் தி பெஸ்ட்

மீனம்

பொறுமை : இன்று நாள் முழுவதும் இறைவழிபாட்டில் மனதைச் செலுத்த வேண்டிய நாள். பணவரவு தாமதமாகும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற அலைச்சலைச் சந்திப்பீர்கள். - இதுவும் கடந்துபோகும்.



source https://www.vikatan.com/spiritual/astrology/glory-of-rasamani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக