நவீன மருத்துவ முன்னேற்றங்கள் பல்வேறு புதிய சிகிச்சைகளை நமக்கு வழங்கியிருக்கின்றன. மாறிவரும் வாழ்க்கைச் சூழல், மனிதர்களின் விருப்பங்கள், சமுதாயக் கட்டமைப்புகளுக்கு ஏற்ப இச்சிகிச்சைகள் நமக்குக் கைக்கொடுக்கின்றன. அதுபோன்றதொரு முறைதான் லேசர் ஜெனிட்டல் டைட்டனிங் (Laser Genital Tightening). இம்முறையின் மூலம் பெண் உறுப்பின் வலுவிழந்த தசைகளை இறுக்கி, அதன் வடிவம் மற்றும் இயங்குதன்மை சீர்ப்படுத்தப்படுகிறது... காஸ்மெட்டிக் சிகிச்சையாக ஜெனிட்டல் டைட்டனிங் அறியப்படுகிறது, இருப்பினும் ஆரோக்கியம் மற்றும் உளவியல்ரீதியான இருவேறு பயன்களை இது தருகிறது.
'சோஷியல் ஸ்டிக்மா' இருக்கிறதா?
ஜெனிட்டல் டைட்டனிங் குறித்து பலவாறான சமூகக் கருத்துகள் நிலவுவது உண்மைதான். வெளிப்படையாகப் பார்க்கப்போனால் கணவன் மனைவி இடையிலான தாம்பத்ய மகிழ்ச்சியை அதிகரிக்க மட்டும்தான் இது பயன்படுகிறது என்று பலரும் கருதுகின்றனர். மேலும், குழந்தை பெற்ற பிறகு தங்களுடைய அழகு குலைந்துவிட்டது என்று எண்ணும் பெண்கள் மட்டுமே இதனை எடுத்துக்கொள்கிறார்கள் என்றும் சிலர் கருதுவதுண்டு.
மேற்கத்திய நாடுகளில் கணவனும் மனைவியும் கலந்து பேசி இதற்குச் சம்மதிப்பதைக் காண முடிகிறது. இதுபோன்ற ஆரோக்கியமான சூழல் இன்னும் இந்தியாவில் ஏற்படவில்லை என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம் என்றாலும் இந்தச் சூழ்நிலை மெள்ள மெள்ள மாறிவருகிறது. இருவரும் கலந்து பேசி முடிவெடுத்தால் ஜெனிட்டல் டைட்டனிங் குறித்த தவறான புரிந்துகொள்ளல்கள் தவிர்க்கப்படும். கணவன் மனைவியின் பரஸ்பர அன்பை வளர்க்க உதவி செய்யும் முறை இது என்பதில் ஒரு தெளிவு பிறக்கும்.
குழந்தை பிறந்து பெண்ணின் அங்கம் அதன் இயல்பு நிலையிலிருந்து குலையும்போது, தசைகளை இறுகச் செய்ய மிகவும் பாதுகாப்பான முறையாக இருக்கிறது லேசர் ஜெனிட்டல் டைட்டனிங். பிரத்தியேக கருவி மூலம் CO2 லேசர் பெண்ணுறுப்பின் தசைகளில் செலுத்தப்படுகிறது. இது தசைகளைச் சீர்ப்படுத்தி புதிய கொலாஜென் உற்பத்திக்கு வழி வகுக்கிறது. இதனால் பிறப்புறுப்பின் மியுக்கோஸா மற்றும் யூரினோஜெனிட்டல் பகுதிகள் பலமடைகின்றன.
ஜெனிட்டல் டைட்டனிங் - பிற பலன்கள்
பல மாதங்கள் வரை நீடிக்கக்கூடிய தசை மறுசீரமைப்பு செயல்முறை இதனால் தூண்டப்படுகிறது. முதல் முறை இதனை எடுத்துக்கொள்ளும்போதே நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும். மியுக்கோஸாவுக்குத் தேவையான ஊட்டம் கிடைப்பதுடன் எபிதீலியம் படலம் வலுவடைகின்றது, அதன் சவ்வுத்தன்மையும் வழவழப்பும் மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றது. அப்பகுதியின் அமிலத்தன்மை சரியான நிலையை எட்டுவதால், இயற்கை அரணாக அமைந்து நோய்த்தொற்று ஏற்படாமல் காக்கிறது. இதனால் விரும்பத்தகாத வாடை என்ற பிரச்னையும் சரி செய்யப்படும்.
பெண்ணுறுப்பின் தசைகளும் வலுவடைவதால் தாம்பத்தியதுக்கும் இது பெரிதும் உதவி புரிகிறது. இருப்பினும் ஒரு தம்பதியின் பரஸ்பர அன்பே அவர்களின் நெருக்கத்தை அதிகரிக்கும் என்பதை இந்நேரத்தில் நினைவூட்ட வேண்டியுள்ளது, அதற்கு துணை புரியும் ஒரு செயல்பாடாகவே ஜெனிட்டல் டைட்டனிங் செயல்பாட்டைப் பார்க்க வேண்டும். இதைத் தவிர மேற்கண்ட பல அனுகூலங்கள் இதற்குண்டு என்பதால், பெண்களின் வாழ்வை, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தித் தரும் முறை இது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் பாதுகாப்பான சிகிச்சை.
'கருவி கொண்டு செய்யப்படும் செயல்முறை இது என்பதால், அதன் மூலம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்று ஏற்படுமா?' என்ற கேள்வி நியாயமானது. நிச்சயம் இல்லை. முழுக்க முழுக்க சுகாதாரமான முறையில், கருவிகளை சுத்திகரித்து, கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் இதனைச் செய்கிறோம். ஒவ்வொருவருக்கும் தனித்தனி டிஸ்போஸபல் ஷீத் (Disposable Sheath) பயன்படுத்தப்படுகிறது. மேலும், 24x7 அனைத்துவிதமான மருத்துவ வசதியும் இங்கே இருப்பதால், தொற்று/ஒவ்வாமை பாதிப்பில்லாமல் இதனைச் செய்துகொள்ளலாம்!
யாருக்குத் தேவைப்படும்? பிரசவத்துக்குப் பின்னர், 30 வயதுக்கு மேற்பட்ட பெண் மணிகள் அல்லது பிறப்புறுப்பின் தசை இறுக்கம் குறைவால் அவதியுறுவோர் எங்களை அணுகினால் பெண் நல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் லேசர் ஜெனிட்டல் டைட்டனிங் வழங்கப்படும்.
மருத்துவ ஆய்வுகளுக்கு உட்பட்டதா? எங்களிடம் உள்ள CO2 லேசர் கருவி, அமெரிக்க மருத்துவ தரச் சான்றிதழ் நிறுவனமான FDA-வால், மகளிருக்கான மருத்துவத்தில் (Gynecology) பயன்படுத்தலாம் என்று அங்கீகரிக்கப்பட்ட கருவியாகும்.
வலி இருக்குமா? சிகிச்சையின்போதும், பிறகு இரண்டொரு நாட்கள் மிக மெல்லிய வலி இருக்கும், காரணம் அங்கிருக்கும் செல்கள் புதிதாக வளர்கின்றன. அதிகபட்சம் 5 நாட்களில் முழுக்க முழுக்க இயல்புநிலைக்குத் திரும்பலாம். முன்பை விட நல்ல முன்னேற்றம் இருப்பதை உணரலாம்.
எவ்வளவு காலம் பலனளிக்கும்?
கொலாஜென் மாடுலேஷன் செயல்பாடு ஒவ்வொருவரின் உடலைப் பொறுத்தும் மாறுபடும். அதிகபட்சம் 2 வருடங்கள் வரை இது பலனளிக்கும் என்று கொள்ளலாம். இது அரை மணி முதல் ஒரு மணி நேரம் மட்டுமே ஆகும், ஆபரேஷன் தியேட்டரில் நடத்தப்படாத எளிய OP Procedure என்பதால் தேவைப்படும் நபர்கள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் செய்துகொள்ளலாம்!
source https://www.vikatan.com/news/miscellaneous/laser-genital-tightening-at-gleneagles-global-health-city
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக