அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் `Political Chef’ என்கிற சுவாரஸ்யமும் சுவையும் நிறைந்த நிகழ்ச்சி விகடன் யூடியூப் சேனலில் தொடர்ந்து இடம்பெறும். இதன் முதல் நிகழ்ச்சியில் ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதி ம.தி.மு.க வேட்பாளருமான மல்லை சத்யா பங்கேற்கிறார். சிறந்த சமையல் கலை நிபுணரான அவர், தன் அரசியல் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய தருணங்களை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
மிகவும் அரிதாகக் கிடைக்கிற லாப்ஸ்டர் என்கிற விலை உயர்ந்த கடல் உணவை சமைப்பதில் மல்லை சத்யா ஒரு ஸ்பெஷலிஸ்ட். மாமல்லபுரத்தைச் சேர்ந்த இவர், மாமல்லபுரம் கடற்கரையில் உணவகம் நடத்திக் கொண்டிருந்தார். திடீரென ஒரு நாள் அந்த உணவகத்தை ஜெயலலிதா அரசு இடித்துத் தரைமட்டமாகியது. அந்த சம்பவம் மல்லை சத்யா வாழ்க்கையின் திசைவழியையே மாற்றியது. அவர் ஓர் அரசியல்வாதி ஆனார். மறக்க முடியாத அந்த அனுபவங்களை இந்த நிகழ்ச்சியில் அவர் விவரித்துள்ளார்.
அதிர்ச்சிக்குரிய ஒரு சம்பவம். ம.தி.மு.க பொதுச்செயலாளரை வைகோ மற்றும் அவரின் குடும்பத்தினரை கட்டுமரத்தில் கடலுக்குள் அழைத்துச்சென்றார் மல்லை சத்யா. எதிர்பாராத விதமாக கடலில் ராட்சத அலைகள் எழும்பின. கட்டுமரம் கவிழ்ந்தது. வைகோவும் அவரின் உறவினர்களும் நடுக்கடலில் தத்தளித்தனர். அப்போது அவர்களை எப்படி காப்பாற்றப்பட்டார்கள் என்ற முழு சம்பவத்தையும் இதில் உணர்ச்சிப்பெருக்குடன் மல்லை சத்யா பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
லாப்ஸ்டர் உணவை சமைத்துக்கொண்டே அவரது அரசியல் பயணத்தில் நிகழ்ந்த மறக்க முடியாத, சுவாரஸ்யமான பல சம்பவங்களை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் மல்லை சத்யா.
வீடியோ கீழே....
source https://www.vikatan.com/news/politics/mallai-sathya-in-political-chef-program
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக