Ad

வியாழன், 29 ஏப்ரல், 2021

கொரோனா தொற்றால் மாரடைப்பா… கே.வி.ஆனந்த் மரணத்துக்குக் காரணம் என்ன?

இயக்குநர் கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது திடீர் மரணம் திரையுலகினர், சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கே.வி.ஆனந்த் சென்னை அடையாறில் தன் அம்மா, மனைவி மற்றும் இரண்டு மகள்களோடு வசித்துவந்தார். இதில் அவரது மனைவி மற்றும் மகளுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சைப்பெற்று வந்திருக்கிறார்கள்.

கே.வி.ஆனந்த்

அடுத்ததாக இயக்குநர் கே.வி.ஆனந்துக்குக்கும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. நேற்று இரவு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணித்திருக்கிறார்.

இயக்குநர் கே.வி. ஆனந்த் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்ட நிலையில் இரண்டாவது டோஸுக்காக காத்திருந்த நிலையில்தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று அவருக்கு இருந்ததால் அவரது உடல் வீட்டுக்குப்போகாது. மருத்துவமனையில் இருந்து நேரடியாக மாநகராட்சி மூலம் அடக்கம் செய்யப்படும் எனத்தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



source https://cinema.vikatan.com/tamil-cinema/director-kv-anand-tested-positive-for-corona-and-died-due-to-heart-attack

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக