Ad

வியாழன், 29 ஏப்ரல், 2021

"கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பொதுமக்கள் முன் வரவேண்டும்"- நடிகர் சோனு சூட் அழைப்பு!

இந்தி, தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகர் சோனு சூட் கொரோனா முதல் அலையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்துகொடுத்து அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தார். தனது குடியிருப்பு அடுக்குமாடி கட்டிடம் ஒன்றை கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற வழங்கினார். அதோடு ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல வாகன வசதி செய்து கொடுத்தார்.

sonu sood

தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் உக்கிரமாக இருக்கிறது. இதில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. பாதிக்கப்படுபவர்களுக்கு ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்தி நடிகர் அஜய் தேவ்கன் மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் ஹிந்துஜா மருத்துவமனையோடு இணைந்து கொரோனா அவசர சிகிச்சை பிரிவு ஒன்றைத் தொடங்கியுள்ளார். நடிகர் சல்மான்கான் கொரோனா காலத்தில் சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் முன்களப்பணியாளர்கள், போலீசாருக்கு மும்பை முழுக்க சாப்பாடு இலவசமாக சப்ளை செய்து வருகிறார். ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சோனுசூட் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள செய்தியில், தினமும் உதவி கேட்டு ஏராளமானோர் எனக்கு போன் செய்கின்றனர். அவர்களுக்கு என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு உதவிசெய்து கொண்டுதான் இருக்கிறேன். ஒவ்வொருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். நடிகர் அக்‌ஷய் குமார் தனது மனைவியுடன் சேர்ந்து கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக காற்றிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் 100 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்களை வழங்கி இருக்கிறார்.

மகாராஷ்டிராவில் வரும் ஒன்றாம் தேதி திட்டமிட்டபடி 18 வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்காது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மே இறுதியில் தான் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கினாலும் அதற்கு பணம் கொடுக்க வசதி இருப்பவர்கள் கொரோனா தடுப்பூசிக்கான கட்டணத்தை அரசிடம் வழங்கலாம் என்ற புதிய திட்டத்தை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தடுப்பூசி சென்டர்களில் நன்கொடை பாக்ஸ்கள் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடுவதாக இருந்தால் ரூ.6500 கோடி செலவு பிடிக்கும். ஆனால் மகாராஷ்டிரா ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. எனவேதான் விருப்பப்பட்டு பணம் கொடுப்பவர்களிடம் வாங்கிக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது



source https://www.vikatan.com/news/people-should-come-forward-to-help-the-corona-patients-says-soon-sood

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக