Ad

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

ஓ.பன்னீர்செல்வம்: சட்டசபை தேர்தல்... ஒரு பார்வை! #TNelections2021

தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதி 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலேயே நட்சத்திர வேட்பாளரை பார்த்த தொகுதி. ஜெயலலிதா முதன் முதலாக 1989-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது போடி தொகுதியின் மூலமாகத்தான். அவரைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் போட்டியிட்டதன்  மூலம் தற்போது  இத்தொகுதி மீண்டும் விஐபி தொகுதியாக மாறியது.

2001 மற்றும் 2006 ஆம் ஆண்டு தேர்தல்களில் பெரியகுளம் தொகுதியிலும், பின்னர் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் போடி  தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். கடந்த முறை திமுக வேட்பாளர் இலட்சுமணனை 15,608 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஓபிஎஸ்,  இந்த தேர்தலிலும் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கினார்.

பன்னீர்செல்வம்

இதுவரை போடி தொகுதியில்  நடந்த 14 சட்டமன்ற தேர்தல்களில் 7 முறை அ.தி.மு.க.வும், 3 முறை தி.மு.க.வும், காங்கிரஸ் 4 முறையும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த முறை போடி தொகுதியை அதிமுக மீண்டும் தக்க வைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

போடி தொகுதியில் பல்வேறு கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும் அதிமுக, திமுக, அமமுக வேட்பாளர்களிடையேதான் கடும் போட்டிநிலவியது.  இதுவரை, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு, இந்த முறை பெரும் சோதனையை எதிர்கொள்ளவேண்டியதிருந்தது என்றே சொல்லலாம். முக்குலத்தோர் வாக்குகளையே அதிகம்நம்பி களம் இறங்கிய பன்னீரை எதிர்த்து தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும், தினகரனின் அமமுக. சார்பில் முத்துச்சாமியும் போட்டியிட்டனர். ஒரு காலத்தில் அதிமுகவில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய இந்த 3 பேருமே, இந்த தேர்தலில் மூன்று எதிர் துருவங்களாக போட்டியிட்டனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து நம்பிக்கையுடன் வலம் வந்த  பன்னீர்செல்வம், தேர்தல் தேதி நெருங்க நெருங்க தினகரனின் அமமுக வேட்பாளர் பிரிப்பது தனது வாக்குகளைத்தான் என எண்ணி ரொம்பவே கலங்கிப் போனார். கூடவே வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட 10.5% உள் ஒதுக்கீடுக்கு முக்குலத்தோர்சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட எதிர்ப்பும் பன்னீரின் அச்சத்தை அதிகரித்திருந்தது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/opannerselvam-a-short-analysis-on-tn-elections-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக