Ad

சனி, 24 ஏப்ரல், 2021

முழு ஊரடங்கு - குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே உணவு டெலிவரி; அனுமதிக்கப்பட்ட சேவைகள் எவை? #NowAtVikatan

அனுமதிக்கப்படும் சேவைகள்!

முழு ஊரடங்கு நாளான இன்று, அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவ துறை சார்ந்த பணிகள் அனைத்தும் இன்று அனுமதிக்கப்படும்.

அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போதும் அனுமதிக்கப்படும்.

உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

ஸ்விக்கி, சோமோட்டோ போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.

உணவு டெலிவரி தவிர்த்து இதர மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு இன்று அனுமதியில்லை.

திருமணம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட கட்டுப்பாட்டுடன் நடத்திக் கொள்வதற்கும் எவ்வித தடையும் இல்லை

சென்னை - முழு ஊரடங்கு

2021-ம் ஆண்டின் முதல் முழு ஊரடங்கு!

கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருக்கும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒவ்வொரு ஞாயிறும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமையான இன்று, 2021-ம் ஆண்டின் முதல் முழு ஊரடங்கு நாள் கடைபிடிக்கப்படுகிறது. நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய ஊரடங்கு நாளை அதிகாலை 4 மணி வரைத் தொடரும். முழு ஊரடங்கு காரணமாக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஊரடங்கு


source https://www.vikatan.com/news/general-news/25-04-2021-tamilnadu-complete-lockdown-corona-virus-news-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக