Ad

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் உள்ளிருப்பு போராட்டம்! - வேளாண் மசோதா குறித்து விளக்கிய பிரதமர் மோடி #NowAtVikatan

வேளாண் மசோதா குறித்து பிரதமர் மோடி!

இன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தாங்கள் கோரிய திருத்தங்களை ஏற்காமல் மசோதாக்களை நிறைவேற்றியதாக அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மோடி

இந்த நிலையில் பிரதமர் மோடி வேளாண் மசோதாக்கள் குறித்து மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். ``குறைந்தபட்ச ஆதார விலை, அரசே கொள்முதல் செய்யும் முறை தொடரும் என மீண்டும் சொல்கிறேன்” என்றவர் ‘விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு உள்ளது’என்று குறிப்பிட்டுள்ளார். ``வேளாண் மசோதாக்கள் மூலம் எதிர்கால தொழில்நுட்பத்தை விவசாயிகள் எளிதில் அணுக முடியும். வேளாண் மசோதாக்கள், உற்பத்தியை ஊக்குவிப்பதுடன் சிறந்த பலனையும் தரும்” என்றார் பிரதமர் மோடி.



source https://www.vikatan.com/news/general-news/20-09-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக