Ad

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

`5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும் என்ற தகவல் தவறு!' - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கடும் வெயில் இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் டிகிரி வரை வெயிலின் அளவு அதிகரிக்கும் என்ற தகவல் ஒன்றும் பரவியது. இதை பற்றி அறிந்து கொள்ள சென்னை வானிலை நிலைய இயக்குனர் பாலச்சந்திரனைத் தொடர்பு கொண்டோம்.

அப்போது பேசிய அவர், ``காற்றின் ஈரப்பதத்தின் காரணத்தாலும் வெஸ்டெர்லி காற்றாலும் தான் வெப்பம் அதிகமாக உள்ளது. அந்த செய்தியில் கூறியது போல் டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என்பது தவறான புரிதல். கடேலார மாவட்டங்களில் காற்றில் ஒப்ப ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 9௦ விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிைலைதான் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும் என்று கூறப்பட்டது" என்றார்.

'தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும்' - வானிலை ஆய்வு மையம்

இந்த வெயிலிலிருந்து தப்பித்துக்கொள்ள மக்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்," பொது மக்கள், உச்சி வெயில் நேரமான பகல் 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை அத்தியாவசிய வேலைக்காக மட்டும் செல்வதோடு, வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்வது நல்லது. உடலில் நீரின் அளவு குறையாமல் இருக்க நீர் சத்து நிறைந்த பழங்களை அதிகாமாக எடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரையில் அடர்நிற துணிகள் உடுத்துவதை தவிர்த்துக்கொள்ளலாம்" என்றார்.

தற்போதே வெயில் வாட்டியெடுக்கும்போது மே மாதத்தில் இன்னும் வெயிலின் தன்மை எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, ``பொதுவாகவே அட்சரேகை, தீர்க்கரேகை மற்றும் கடல் மட்ட உயரத்தைப் பொறுத்துதான் வெயிலின் தன்மை இருக்கும். கன்னியகுமாரியும் சென்னையும் வெவ்வேறு உயரத்தில் உள்ளது. அதனால்தான் வெப்ப நிலையும் வெவ்வேறாக உள்ளது. காலநிலை மாற்றத்திற்கேற்ப வெப்ப நிலையும் மாறிக்கொண்டு வருகிறது.

எனவே வெயிலின் அளவு எவ்வாறு இருக்கும் என்று முன்கூட்டியே கணிப்பது சற்று கடினம் தான். ஆனால், எங்கே மேகக்கூட்டங்கள் அதிகாமாக காணப்படுகிறதோ, அங்கு வெப்பம் அதிகமாக இருக்கும். அதனால் ஏற்படும் ஈரப்பததால் இரவில் மழை பெய்யவும் வாய்ப்புண்டு" என்றார்.

பாலச்சந்திரன்

மேலும் பேசியே அவர், `` இந்த கோடை வெயிலின் தாக்கத்தால், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி, வடமேற்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பொழியலாம். மற்ற மாவட்டங்களில், பகல் வெப்பநிலையிலிருந்து இரவு நேரத்தில் வெப்பநிலைக்கு மாற்றம் ஏற்படும் வேளையான மாலை நேரத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஒரு சில இடங்களில் மழைக்கும் வாய்ப்பு உள்ளது" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/westerly-winds-is-the-reason-for-temperature-rise-in-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக