Ad

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 3,46,786 பேருக்கு தொற்று! - 2,624 மரணங்கள் #NowAtVikatan

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 3,46,786 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,66,10,481என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,624. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,89,544-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,38,67,997-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 25,52,940 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 13,83,79,832 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/24-04-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக