Ad

வியாழன், 3 செப்டம்பர், 2020

கன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிப்பு! - இடைத்தேர்தலுக்குத் தயாராகும் காங்கிரஸ், பா.ஜ.க #NowAtVikatan

கன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

காங்கிரஸ் எம்.பி ஹெச்.வசந்தகுமார் மறைவை அடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இதையடுத்து அந்தத் தொகுதிக்கு அடுத்த 6 மாதக்த்தில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வசந்தகுமார் எம்.பி

கட்சி வாய்ப்பளித்தால் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடத் தயார் என பா.ஜ.க துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்துத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், காங்கிரஸ் கட்சி உறுப்பினரான தாம், கட்சி எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படத் தயார் என வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தெரிவித்திருக்கிறார். அதேபோல், அரசியல் ஆர்வமிருந்தாலும் தேர்தலில் தற்போது போட்டியிட வாய்ப்பில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார்.

Also Read: `கட்சி வாய்ப்பளித்தால் கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டி!’ - நயினார் நாகேந்திரன்

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39,36,747-ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில், 83,341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

corona

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 1,096 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 68,472-ஆக அதிகரித்திருக்கிறது. ஒரே நாளில் 66,659 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிய நிலையில்,குணமடைந்தோர் எண்ணிக்கை 30.37 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

Also Read: கோவை: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... படுக்கை பற்றாக்குறை! - அவதியுறும் மக்கள்



source https://www.vikatan.com/news/general-news/04-09-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக