சந்தோஷமான இதயம் = சந்தோஷமான வாழ்க்கை, என்று சொல்லலாம். சர்வதேச இருதய தினம் உலகம் முழுவதும் செப்டம்பர் 29 அன்று கொண்டாடப்படுகிறது. ராஜ உறுப்புகளில் ஒன்றாகக் கொள்ளப்படும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி?, என்பது குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இந்நாளில் உலகம் தழுவி நடத்தப்படுவது வழக்கம்.
இந்தியாவின் இடம் என்ன?
இதய நலன் குறித்த விழிப்புணர்வு இந்தியர்களுக்கு அதிகமாகவே தேவைப்படுகிறது எனலாம். காரணம், இந்தியாவில் நிகழும் தினசரி உயிரிழப்புகளில் கிட்டத்தட்ட 28%, இதய நோய் சார்ந்த பாதிப்புகளாலேயே ஏற்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நான்கு இந்தியரில் ஒருவருக்கு இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்படுகிறது. வருடாவருடம் 17 லட்சம் எனும் அளவில் இருக்கக்கூடிய இதய நோய் சார்ந்த உயிரிழப்புகள், இன்னும் பத்து வருடங்களில் கோடியைத் தொட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், இதற்காக பயப்பட வேண்டாம்!
என்ன செய்யலாம்?
'கொஞ்சம் உடற்பயிற்சி, சத்தான உணவுகள், மகிழ்ச்சியான மனம் - முக்கியமாக இவை போதும் இதய நோயிலிருந்து நம்மைக் காக்க' என்கின்றனர் இதயநல மருத்துவர்கள். 20+ வயதிலிருந்தே ஒரு நாளில் 20 - 60 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்யப் பழக வேண்டும். இதனால் இதயத்தின் தசைகள் பலம் அடைகின்றன. 40 வயதுக்கு மேல் இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்யாமல் இருக்கவே கூடாது! 'வாக்கிங் போக ஆசைதான், இருந்தாலும்...' எனத் தள்ளிப் போடாதீர்கள், நம் இருதயத்தைக் காக்க 20 நிமிடங்கள் ஒதுக்காமல், வேறு என்னதான் வேலை நமக்கு!
நடிகை அனு ஹாசன் நேரலையில்...
'இதய ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னெஸ்' எனும் தலைப்பில் செப்டம்பர் 29, பிற்பகல் 3.00 மணியளவில் நடிகை அனு ஹாசன் நம்முடன் நேரலையில் பேசவிருக்கிறார். சர்வதேச இருதய தினத்தை முன்னிட்டு காளீஸ்வரி ஃபவுண்டேஷன் வழங்கும் இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் ஆரோக்கியம் குறித்த பர்சனல் அனுபவங்கள், ஃபிட்னெஸ் ரகசியங்கள், மகிழ்ச்சிக்கான டிப்ஸ் எனப் பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் அனு ஹாசன்.
நீங்களும் உங்களின் கேள்விகளை அனு ஹாசனிடம் நேரலையில் கேட்கலாம். பிற்பகல் 3.00 மணிக்கு, விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒளிபரப்பாகும் நேரலையில் இணைந்திடுங்கள், கமென்ட் பாக்ஸில் உங்கள் கேள்விகளைக் கேளுங்கள். இருதயம் காப்போம், இன்பமாய் வாழ்வோம்!
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, கீழ்க்கண்ட படிவத்தைப் பூர்த்தி செய்ய மறக்காதீர்கள்!
source https://www.vikatan.com/news/miscellaneous/world-herat-day-live-with-anu-hasan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக