பாஜக தேசிய நிர்வாகிகள்: தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் இடம் இல்லை!
இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 88,600 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது 59,92,533 -ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,124 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பலி எண்ணிக்கை 94,503 -ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை 49,41,628 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.
நேற்று ஒரே நாளில் 9,87,861 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக ஐசிஎம்ஆர் தெரிவித்திருக்கிறது. நேற்று வரை இந்தியாவில் 7,12,57,836 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன.
பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசிய மர்ம நபர்கள்!
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், இனாம் குளத்தூர் ஊராட்சியிலுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயம் பூசியதோடு, அவமதிப்பும் செய்துள்ளனர். தற்போது அங்கு பாதுகாப்பு பணிக்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசியல் கட்சிகள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஜஸ்வந்த் சிங் காலமானார்!
முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ,க மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் இன்று காலமானார். அவருக்கு வயது 82. கடந்த சில நாள்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் வெளி்யுறவு, பாதுகாப்பு, நிதித்துறை ஆகிய மத்திய அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர். மேலும் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர்ஜஸ்வந்த் சிங்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், ``ஜஸ்வந்த் சிங், எங்கள் தேசத்திற்காக முதலில் ஒரு ராணுவ வீரராகவும் பின்னர் நீண்டகால அரசியல்வாதியாகவும் விடாமுயற்சியுடன் பணியாற்றினார். வாஜ்பாய் அரசாங்கத்தின் போது, அவர் முக்கியமான இலாகாக்களைக் கையாண்டார் மற்றும் நிதி, பாதுகாப்பு மற்றும் வெளி விவகாரங்களில் ஒரு வலுவான அடையாளத்தை பதிவு செய்தார்” என குறிப்பிட்டிருக்கிறார்.
source https://www.vikatan.com/news/general-news/27-09-2020-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக